Thursday, January 08, 2009

ஹமாஸ் - போராளிகளா? தீவிரவாதிகளா?


பாலஸ்தீன் என்னும் நாட்டின் ஒரு பகுதியை சம்பந்தமே இல்லாத மூன்றாம் நாடுகள் பிரித்து இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கினர். தங்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதை அந்நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். புதிததாக உருவாகிய நாடு வல்லரசுகளின் ஆயுதத் துணையோடு தங்களைக் காத்துக் கொண்டது மட்டுமின்றி முழு பாலஸ்தீனத்தையும் ஆக்ரமிக்கின்றனர். ஆக்கிரமிப்பு எப்படியெல்லாம் நிகழ்த்தப்படுகிறது என்பதை யூத வரலாற்றாசிரியரான இலன் பெப்பே என்பவரின் இந்த செவ்வியின் மூலம் ஓரளவு அறியலாம். இதனை எதிர்த்து பாலத்தீனியர்கள் போராடி வருகின்றனர். இதுவே இஸ்ரேல் பாலத்தீனப் பிரச்சனையின் சுருக்கம்.

பாலஸ்தீனப் பகுதியை ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அங்கீகரித்த இந்தியா உள்பட உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் இதுவரை பாலஸ்தீன் எனும் நாட்டை அங்கீகரிக்கவே இல்லை. அமைதியாக இருங்கள். அமைதியாக இருங்கள் கூறிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி வரையறுத்த எல்லைகள் போக மற்ற பகுதிகள்தான பாலஸ்தீன் என்று கூட இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையோ, பெரியண்ணன் அமெரிக்காவோ அறிவிக்கவில்லை.
 
பொதுவாகவே ஒரு நாடு மற்றவர்களால் ஆக்ரமிக்கப்பட்டாலோ அல்லது அந்த நாட்டின் அரசு இனவெறி அரசாக இருந்தாலோ, ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அல்லது இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான ஆக்ரமிப்பை, தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து போராடுவர். இத்தகைய போராட்டங்கள் அமைதி வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ அமைந்ததாக இருக்கும். சர்வதேச சட்டங்கள் இந்த இருவகைப் போராட்டங்களையும் ஆதரிக்கவே செய்கின்றன.
 

ஆயுதங்களை பகிரங்கமாக கையாளலாம். அவர்கள் ஆயுதப் போராட்டம் செய்யலாம். இத்தகைய குழுக்கள் அந்த நாட்டின் இராணுவமாகவே கணிக்கப்படும்.
 
1949ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் ஜெனீவா மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்படிக் கூறுகிறது.
 
 
எனவே பாலஸ்தீனத்தில் தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் அனைவருமே போராளிகள்தானே ஒழிய தீவிரவாதிகள் அல்ல. சமீபத்தில் இலங்கைத் தழிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து உலகின் எந்தப் பகுதிக்கும் பொருந்தக் கூடியது. அவர் கூறியதின் சாரம் : "உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறந்தே தீரும். போராளிகள் தீவிரவாதிகளா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும். நாளையே அங்கு ஒரு சுதந்திர நாடு பிரகடனப்படுத்தப்பட்டால் போராளிகள் அனைவரும் தியாகிகளாகப் பார்க்கப் படுவர். நமது வாஞ்சிநாதனைப் போல" என்று கூறினார். இது பாலஸ்தீனியர்களுக்கும் பொருந்தும்.
 
பாலஸ்தீன விடுதலைக்காக பல்வேறு குழுக்கள் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) என்ற பெயரில் இயங்கி வந்தபோது அதன் செயல்பாடுகளில் திருப்தி அடையாத சிலர் தோற்றுவித்ததுதான் ஹமாஸ் என்ற அமைப்பு.  ஹமாசைத் தோற்றுவித்ததில் இஸ்ரேலின் பங்கும் இருப்பதாகவும் சிலர் சொல்வதுண்டு. பாலத்தீன விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுக நிதி உதவி செய்தது என்று UPI செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய இந்த அமைப்பு அரசியல் ரீதியாகவும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டி தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கு பெற்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு அதன் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா என்பவர் தலைமையில் ஆட்சியமைத்தது. ஹமாஸ் அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை இஸ்ரேல் கொடுத்து வந்தது. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசின் கட்சியினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடும் சன்டை ஏற்பட்டு, இறுதியில் காஸா பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் இயக்கதினரிடமும், மேற்குக் கரை பகுதியின் அதிகாரம் அப்பாசின் பதஹ் கட்சியினரிடமும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
 
காஸாவின் அதிகாரம் ஹமாஸ் இயக்கதிற்கு வந்து சேர்ந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காஸா பகுதிக்கு மின் இணைப்பு துண்டிப்பு, பெட்ரோல் வழங்காமை, எல்லைகள் அடைக்கப்பட்டது என்று உலகின் மிகப் பெரும் சிறைச்சாலையாக காஸா பகுதியை இஸ்ரேல் மாற்றியது.
 
இத்தனையையும் பொறுத்துக்கொண்டு எப்படித்தான் இருக்க முடியும்? ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் மக்கள் போராடிச் சாக துணிந்து விட்டனர். இவர்கள் தீவிரவாதிகளா? இவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர்களாகத்தான் பாலஸ்தீனர்கள் பார்க்கின்றனர். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நமது உள்ளூராக இருந்தாலும் உலகநாடுகள் எதுவாக இருந்தாலும் ஆக்கிரமிப்பாளர்களின் கையே ஓங்கி உள்ளது.

இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்கவும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அப்பாவி மக்களை பாதுக்காக்கவும் உலகில் உள்ள எந்த சட்டமும், நீதிமன்றமும், பேரரசுகளும், வல்லரசுகளும் இதுவரை ஒரு மசுரைக்கூட புடுங்கவில்லை. சனநாயகம், மக்களாட்சி என்பதெல்லாம் பம்மாத்துகள்தான். இவர்கள் அனைவரும் கோட்டு, சூட்டு போட்ட காட்டுமிராண்டிகள்

said...

தீவிரவாதிகள் என்பதை எப்போது அந்நிய நாடு தீர்மானிக்க கூடாது . ஹமாஸ் இயக்கமானது தேர்தலில் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற இயக்கம் . அப்படியென்றால் பாலஸ்தீனியர்கள் அனைவரும் தீவிர வாதிகளா

said...

//ஆயுதங்களை பகிரங்கமாக கையாளலாம். அவர்கள் ஆயுதப் போராட்டம் செய்யலாம். இத்தகைய குழுக்கள் அந்த நாட்டின் இராணுவமாகவே கணிக்கப்படும்.//
எனில் இவர்கள் மோசமான இராணுவ வீரர்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் போருக்குத் துணிந்தார்கள். கொடுங்கோலர்களால் அப்பாவி மக்கள் அநியாயாமாய் சாவதற்கு அதுவும் ஒரு காரணம்தானே.

இறை நம்பிக்கையோடு அதற்கான சரியான தயாரிப்புகளும் அவசியமில்லையா?

அவசியமான நல்ல பதிவு அழகப்பன்.

said...

நன்றி கரிகாலன்.

நன்றி சுரேஷ்.

சுல்தான் பாய்,

முதலில் இதனைப் போர் என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. காஸா மீதான தாக்குதல் என்றுதான் நான் குறிப்பிடுவேன்.

அடுத்து இந்தப் பிரச்சனைக்குத் தூபம் போட்டது ஹமாஸ் என்பதாக ஜார்ஜ் புஷ் அறிவித்து, அதனை எகிப்து அதிபர் வழிமொழிந்ததையே தாங்களும் கூறுகிறீர்கள். இந்தப் பிரச்சனையின் காலகாட்டங்கள் இப்படி அமைந்திருந்தது:

அவ்வப்பொழுது ஹமாஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரைத் தாக்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் நாள் எகிப்து தலையிட்டீல் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 6 மாத சன்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஜூலை 27 அன்று ஹமாஸ் இயக்கத்தைச் சார்ந்த ஷிஹாப் என்பவரை மேற்குக் கரையில் உள்ள அவரது வீட்டில் இஸ்ரேலிய இராணுவம் கொலை செய்தது.

அக்டோபர் 8 அன்று மனித உரிமை மருத்துவர்களை காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்தது.

நவம்பவர் 5 அன்று ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா பகுதிக்குள் புகுந்து 7 பாலஸ்தீனியர்களைக் கைது செய்கிறது.

அன்றைய தினமே காஸாவில் தாக்குதல் நடத்தி 6 பாலஸ்தீனியர்களைக் கொன்றது. மட்டுமின்றி காஸாவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் ஒருவர் இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழக்கிறார்.

பாலஸ்தீனிய குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடுக்கின்றன.

நவம்பவர் 8 அன்று ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலிய இராணுவ டாங்கிகள் காஸாவிற்குள் சென்று வந்தன. அப்போது உயிரிழப்பு ஏதேனும் இல்லை.

நவம்பர் 14 அன்று ஹமாஸ் இஸ்ரேலின் அஷ்கெலான் நகர் மீது ராக்கெட் தாக்குதல் நடத்துகிறது.

நவம்பவர் 15 அன்று இஸ்ரேலிய வான்வெளித் தாக்குதிலில் இரு பாலஸ்தீனியர் உயிரிழந்தனர்.

நவம்பர் 18 அன்று இஸ்ரேலிய டாங்கியுடன் சென்ற புல்டோசர் மூலம் அங்குள்ள பகுதிகளில் சோதனை என்ற பெயரில் சேதத்தை விளைவிக்கின்றன.

நவம்பவர் 20 அன்று இஸ்ரேலிய டாங்கியின் குண்டுக்கு ஒருவர் பலியானார்.

நவம்பர் 23 காஸாவின் வீடுகள் மீது குண்டு வீசப்பட்டதில் இருவர் காயமுற்றனர்.

நவம்பர் 28 டாங்கியுடன் காஸாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவம் 2 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.

நவம்பர் 29 காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவ அமைவிடத்தை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.

டிசம்பர் 2 காஸா மீது வான் தாக்குதல் நடத்தி இருவர் கொல்லப்பட்டார்

டிசம்பர் 17 காஸாவிலிருந்து இஸ்ரேலிய நகரான செடரோட் நோக்கி ராக்கெட் வீசப்பட்டது.

டிசம்பர் 19 அன்று 6 மாத ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

டிசம்பர் 20 அன்று காஸாவின் பைத் லஹியா எனும் நகரில் வான் தாக்குதல். ஒருவர் பலி, இருவர் காயம்.

டிசம்பர் 21 அன்று பாலஸ்தீனிய குழுக்கள் செடரோட் மற்றும் நெகோவ் ஆகிய இஸ்ரேலிய நகரங்கள் மீது ராக்கெட் தாக்குதல்.

டிசம்பர் 22 எகிப்திய மீடியேட்டர் உதவியுடன் பாலஸ்தீனிய குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 24 மணி நேர சன்டை நிறுத்த ஒப்பந்தம்.

டிசம்பர் 23 அன்று 24 மணி நேர ஒப்பந்தம் நிறைவு பெற்றபின் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீன குழுக்களுக்குமிடையே நடைபெற்ற சன்டையில் 3 பாலஸ்தீனியர்கள் பலி.

டிசம்பர் 24 அன்று காஸாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி தாக்குதல். அன்றே இஸ்ரேல் பதில் தாக்குதல் ஒரு பாலஸ்தீனியர் பலி.

டிசம்பர் 27 அன்று பாரிய அளவிலான தாக்குதலை இஸ்ரேல் தொடங்குகிறது.

தற்போது கிடைத்த தகவல்படி இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் தொடங்கியுள்ளது.

said...

வாய் மூடி மௌனம் காக்கும் இஸ்லாமிய நாடுகளை
என்ன செய்வது?

தேவா...

said...

நீங்க ரொம்ப நல்லா எழுதறிங்க...

Would you like to see other writers? www.zeole.com This is a website that I am creating, as a way to help everyone share ideas to a whole community...

இது என்னுடைய ஒரு சிறு முயற்சி. வந்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தால், உங்கள் ப்ளாகை விளம்பரம் செய்து பாருங்கள். உங்கள் ப்ளாக் சென்னை முழுவதும் பிரபலம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

Try zeole.com ... A few other writers are trying it right now.

:)

said...

nice blog

visit my blog

tamil web library

said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Chennai best Tax Consultant
ESI & PF Consultant in Chennai
GST Consultant in Bangalore
GST Consultant in Chennai
GST Consultant in TNagar
GST Filing Consultants in Chennai
GST Monthly returns Consultant in Chennai
GST Tax Auditor in Chennai
GST Tax Auditors in Chennai
GST Tax Consultant in Bangalore