Monday, January 05, 2009

தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்

காஸா. உலகின் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. உலகின் மிகப்பெரும் சிறைச் சாலையும் அதுதான். சிறையில் அடைத்தது போதாதென்று பத்து நாட்களாய் நரவேட்டையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப் பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்று கூறுகிறது. 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனராம். 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனராம். குண்டு பட்டு மரணிக்காவிட்டாலும் காசநோயை ஏற்படுத்தும் வகையிலான யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறதாம். தீவிரவாதிகள் செத்து மடியட்டும்.

































































































































































































































































































































































































தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். இனி யூதர்களுக்கு உலகில் எங்குமே பிரச்சனை வராது என்ற மகிழ்ச்சியில்  சியோனிச யூதர்கள்.




3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

இஸ்ரெல் உள்ளெ ராக்கெட் உடாதேன்னு தானே அவன் சொல்றான்...

நிறுத்த வேண்டியதுதானெ?

Anonymous said...

இஸ்ரேல் எப்போதும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லும். ராக்கெட் விழுந்தது என்று சொல்வது நாடகமாகத்தான் இருக்கும்

said...

//இஸ்ரெல் உள்ளெ ராக்கெட் உடாதேன்னு தானே அவன் சொல்றான்...
நிறுத்த வேண்டியதுதானெ?//

"காஸாவில் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாய் உள்ள போக்குவரத்து பாதையில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடைகளை நீக்கிவிட்டால் 'நாங்கள் துப்பாக்கி, எறிகணைத் தாக்குதல்களை முற்றாக நிறுத்தி விடுவோம்' என ஹமாஸ் பலமுறை திரும்ப திரும்ப அறிவித்தும், இஸ்ரேல் தடைகளை அகற்ற மறுக்கிறது. உயிர் வாழ தடை ஏற்படுத்தப் பட்டு, மனைவி, மக்கள், நண்பர்கள் உணவுக்காக தவிக்கும்போது வழியற்றவன் என்ன செய்ய முடியும்?

இஸ்ரேல் காஸாவில் தனது ஆக்கிரமிப்பை முடித்துக் கொண்டு விட்டதாக வெறுப்பூட்டும் வாய் விளம்பரங்களை திரும்பத் திரும்ப உலகத்தாரிடம் சொல்கிறது. அது உண்மைதான் எனில், காஸாவின் வான் வெளியும், காஸாவின் நீர் பரப்பும், கடற்கரைகளும், காஸாவின் எல்லைகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஏன்? காஸாவின் வாழ்க்கை முறை முழுமையும் இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ன நியாயம்?

சோற்றுக்கு வழி தேடி ஒவ்வொரு வேளையும் திண்டாடித் திரியும் மக்களைக் கொண்ட காஸாவின் உட்புறங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை எறிகணைகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இயலாத வெறும் சப்தம் எழுப்பும் புஸ்வானங்கள்தான் என்பதை உலகமே அறிந்துதான் இருக்கிறது. இந்நிலையில் காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேல் இரு வழிகளைத்தான் திறந்துள்ளது. ஒன்று உணவுக்கு வழியின்றி அழிதல் மற்றொன்று இஸ்ரேலிய போர் ஆயுதங்களால் அழிதல். இந்த எறிகணைகள், இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து தடைகளை நீக்க உலகத்தை நோக்கி எழுப்பப்படும் நீதியை வேண்டிய ஒலி மட்டுமே."

மேலும் விபரங்களுக்கு http://sultangulam.blogspot.com/2008/12/blog-post_31.html
பார்வையிடவும்.