Wednesday, April 05, 2006

தேர்தல் திருவிழா: இயக்குநர் பாக்யராஜ்

எம்.ஜி.ஆரால் தன்னுடைய கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவரும், பிரபல (முருங்கைகாய் புகழ்) இயக்குநருமான பாக்யராஜ் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் தனி கட்சி தொடங்கி, பின்பு அதனைக் கலைத்துவிட்டு, மிக நீண்ட காலம் திரைத்துரை மற்றும் அரசியலில் பங்குபெறாமல் இருந்து வந்த பாக்யராஜ் சமீபகாலமாக மீண்டும் தன்னுடைய பயணத்தை இரு துறைகளிலும் துவங்கி வருகிறார்.

ஆனாலும் வரிசையாக திரைத்துறையினர் அ.தி.மு.கவில் இணைவதும், தி.மு.க.விலிருந்து விலகுவதுமாக (அல்லது ஒதுங்குவதுமாக) இருந்து வரும் நிலையில், தீவிர அ.தி.மு.க. விசுவாசியாக இருந்த அவர் தி.மு.க.வில் இணைந்திருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அழகப்பன்,

பாக்யராஜ் அதிமுகவில் இருந்த போது கருணாநிதியைத் திட்டவே இல்லையா?

said...

இன்று தி. மு. க வில் இனைந்த கே. பாக்கியராஜுக்கு விரைவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி அறிவிக்கப் பட இருப்பதாக தகவல் வருகிறது உண்மையா?

said...

ஒரு புதுப் படம் வேற வரப் போவுது.
சன் டிவியில கொள்ளக் காசு குடுத்து வாங்கிருப்பாகளோ...
என்னவோ, டீ ஆரு விட்ட பணிய பாக்கி பாக்கி வைக்காம செய்வாரோ என்னமோ...
பாப்போம்.