Saturday, April 08, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள் - Follow up

மார்ச் 15 அன்று 'கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்' என்று தலைப்பில் பதிந்திருந்தேன். இந்த மாதம் விடியல் வெள்ளி என்ற மாத இதழில் வெளியான கட்டுரை அதன் தொடர்பானது என்பதால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

----
கோவையில் ஒரு கொடுமை!

அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இன்று 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிணையில் விட மறுத்து இவ்வழக்கை ஜவ்வு மிட்டாயாய் இழுத்துச் செல்கின்றனர். ஆரம்பத்தில் மெகா சீரியல்களுடன் போட்டியிட்ட இவ்வழக்கு இன்று தினத்தந்தியில் வரும் சிந்துபாத் தொடருடன் போட்டியிடத் துணிந்துள்ளது. 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது நீதிதேவதை.

கொடுமை என்னவென்றால் இவ்வழக்கில் கைதாகியுள்ள சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் - இவ்விருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை எவ்விடத்திலும் இவர்கள் பெயர் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வளவு 'இல்லைகள்' இருந்தும் 8 வருடமாக அநியாயமாக சிறையில் வைத்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்ல. இவர்கள் உயிருடன் வீட்டிற்குச் செல்வார்களா என்ற பீதி கேள்விக்குறியாய் கண் முன்னே வளைந்து நிற்கிறது.

ஆம்! 08.03.2006 அன்று பத்திரிகையில் 'குண்டுவெடிப்பு கைதிக்கு எய்ட்ஸ்' எனச் செய்தி வந்தது. சிறையில் தன் மகன்களை, கணவன்மார்களை 'நேர்காணல்' காண்பதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பதறி அடித்து அழுகையுடன் வந்தனர். அன்று நேர்காணல் அறையில் வெறும் அழுகையும் அச்சமும் 'எப்படி?' என்ற கேள்வியும் மட்டுமே ஒலித்தன.

16 வயதினிலே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அப்பாஸ் என்ற அப்பாவி சிறுவனுக்கு இன்று வயது 24. இச்சிறுவனுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வருவதற்கு சிறையிலோ அல்லது வெளியிலோ செக்ஸ் ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை.

கோவை அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் இக்கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பாஸிற்கு இருமுறை கோவை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சையும் (அப்பொழுது 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது), இரண்டாவதாக கக்கத்தில் கொப்புளம் அகற்றும் சிகிச்சையும் நடந்துள்ளன. விசாரித்ததில் அரசு மருத்துவமனையிலேயே இரத்தம் ஏற்றிய போது வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் STD (Sexual Transmission Desease) பிரிவின் தலைமைப் பேராசிரியர் மகாதேவனை விசாரித்தபோது, 'அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி உள்ளது. இரத்தம் தானமாக பெறும்போது பரிசோதனை செய்துதான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இரத்தம் கொடுக்கும் நபருக்கு HIV கிருமி இருந்தால் அதன் கிருமிகள் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகுதான் இரத்தத்தில் HIV கிருமி இருப்பது தெரியவரும். அதற்கு முன் இரத்த தானம் செய்பவர்களின் இரத்தத்தில் இருப்பது தெரியாது. அதனால் இவ்வாறு விபத்து நேருவதுண்டு. எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது' என்று கூறினார். 'இதனைத் தவிர்க்க வழியே இல்லையா?' என்று கேட்டபொழுது, 'ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒழுக்கம் நிறைந்த NSS சிறுவர்கள், இளைஞர்களிடம் இரத்தானம் பெறுவதன் மூலமும் ஏற்கனவே பலமுறை இரத்ததானம் தந்தவர்கள் மூலமும் நாங்கள் தவிர்த்து வருகிறோம்' என்றார்.

இதே அரசு மருத்துவமனையில் ஒரு தம்பதியர் தன் குழந்தைக்கு சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு HIV பாஸிட்டிவ். தாய்க்கும் தந்தைக்கும் HIV கிருமி கிடையாது. வெளி உலகுக்குத் தெரியாமல் இன்னும் இரத்தத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு HIV தொற்றியுள்ளதோ என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கையை யார் திருப்பித் தருவார்கள்? யார் பொறுப்பு? இன்று சிறையில் இருப்பவர்களின் வீட்டுப் பெண்கள், 8 வருடம் கழித்து வரும் தனது மகன், கணவன் முழுதாய் ஆரோக்கியமாய், உயிருடன் திரும்ப கிடைப்பார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.


கோவை மத்திய சிறையிலிருந்து அபூஷாய்மா
சுட்டி: தி இந்து

நன்றி: விடியல்

7 பின்னூட்டங்கள்:

said...

இந்தியாவில் குற்றப்பத்திரிகை சாற்றபடாத விசாரணைக் கைதிகளை குறித்தான ஒரு ஆய்வு சில வருடங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தினால் நடத்தப் பட்டது. அதன் அறிக்கை வெளியிடப் பட்டதா என தெரியவில்லை. சிவில் வழக்குகள் வருடக் கணக்கில் செல்வது பரவாயில்லை. கிரிமினல் வழக்குகளுக்கு, அதுவும் non bailable குற்றங்களுக்கு, ஒரு காலவரையரை வைக்க வேண்டும்.காலம் தாழ்ந்த நீதி தவறிய நீதியே.:(

Anonymous said...

Visarai kaithikalaga en kottaimedu school friends iruppathai parthu neeraiya varuthappa padukiren. Anal avargal seitha attuzhikalai neruku ner partahavan. I am christian irunthalum en manathai vittu agalatha arajagankalai nnaithal....Who killed Police selvaraj on duty are punitharkala.... Avargal Kudumbam anathaiyaka yar karanam Kottai Medu, Karumbu kadai kalavarangalukku munnal nadathathu enna. Kottai Medu, Karumbu kadai thani theevukalavittruthathuve.... Nalla Ayan scholluku pinnal senravargal yarenum suthanthiramai ukkadam senrathu unda....Itharkku yar pathil solluvargal....


En Selvarajai Konrarkal enru orukama sinthithu parthu pathil sollungal....Entha matha kaduvalaga iruthalum avargalmel sathiyam seithu sollungal....Athu niyayama...Innum ithumathiri nadakkanuma.... Selvarajai Konravarkalai kappttra petrol kundulkal visinarkal....Athanal ottumotha nasamum anathu.....

said...

புரிந்து கொண்டதற்கு நன்றி மணியன்.

அனானி,

குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. காவலர் செல்வராஜை கொலை செய்தவர்களை சட்டப்படி தண்டிக்கத்தான் வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் கூட கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனைதான் அளிக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை இஸ்லாமிய முறைப்படி (கொலைக்கு கொலை) தண்டிப்பதிலும் உடன்பாடே. (அதற்குப் பின் நடைபெற்ற கலவரங்களில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.)

ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 8 ஆண்டுகளாக ஒருவர் சிறையில் இருக்கிறார். அந்த குற்றம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதிலும் அவருடைய பெயர் இல்லை. ஆனால் 8 ஆண்டுகளாக அவர் சிறைவாசம் அனுபவிக்கிறார். இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்று கவனக்குறைவான சிகிச்சையின் மூலம் அவர் எய்ட்ஸ் நோயாளிக இருக்கிறார். இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

Anonymous said...

Ayya...
//*குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. *//

Ungla karuthai amothikkiren...


Ennoda vathame....veru

//*அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை....*//

Ithu unmaiya....1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் salai padhukappu signal velaiyil iruntha appavi police Selvarajai 'sila' verinaikal padukolai sethathal nadantha kalavarathil mattra verinaikal 19 nabarkalai padukolai seitharkal..... Ithutan unmai....Ungal manachatchi kelungal

கோவையில் ஒரு கொடுமை seitha nabarkalum avarkallu adaikalam koduthathai kuttram satta pattavarkalum inru sirayil irukirarkal.

Iru mathathavarum sirayil ullargal. Intha postil Etho kavi mattum than thappu seithathu polavum pachai thappu seiyathathu polavum chitharithu irupathal vivatham seyya vanthen....Ayya ethaiyum publish seyvatharkul unmai enna endru parunkal. Nan ithai kannal kandavan. 1978-1998 Nan kudiyirunthathu Kottai medu.
Anal....Siraiyil ulla appavikalai arasu udane viduthalai seyya vendum. Ithu pachaiyaka(hope you understand) irunthalum or kaviyaka irunthalum. Appavikalukku matham illai....

said...

காவலர் செல்வராஜ் அரசுத்துறையில் பணிபுரிபவர். அவரை சொந்த தகராறு காரணமாக சில சமூக விரோதிகள் கொலை செய்கின்றனர். செலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை. இங்கே காவிகளுக்கு என்ன வேலை வந்தது? கொஞ்சம் விளக்கவும்.

கொலை செய்யப்பட்டவர் செல்வராஜாக அல்லாமல் சாகுல் அமீதாக இருந்து, பச்சைகள் காவிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களில் 19 பேரை கொன்றால் அதனை நியாயம் என்று கூறுவீர்களா?

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே நிரபராதிகள் என்று நான் கூறவில்லையே. எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கு சம்பந்தமான எந்த ஒரு ஆவணத்திலும் அவர்களின் பெயர் இல்லாத நிலையில் சிறையில் தங்கள் வாழ்வை இழந்து வரும் சர்தார், அப்பாஸ் போன்றவர்களைக் குறித்துத்தானே எழுதியுள்ளேன்.
குற்றமே சாட்டப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்களை என்னவென்று சொல்வது?

காவிகளைச் சேர்ந்தவர்களும் சிறையில் உள்ளனர் என்பதற்காக குற்றச்சாட்டே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாதா? என்ன நியாயம் இது?

Anonymous said...

Ayya,

Ennudaiya vivatheme veru...
1. //*வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள்*// Vettiyankalai mariyathu kavikal mattumanri Pachaikalum than.....
2. //* காவலர் செல்வராஜ் அரசுத்துறையில் பணிபுரிபவர். அவரை சொந்த தகராறு காரணமாக சில சமூக விரோதிகள் கொலை செய்கின்றனர்.*//

Sotha pagai karamaga padukolai seyyavillai. Veriyan oruvanai traffic - i olungu seyyumpothu neeruthi FIR file book seythar selvaraj. Ithu unkalukku sontha thagarara.....

Anuthapa padvendiyathakaka oru mathathavarai kurai sollavendam ayya.... Thappu ella pakkamum irukkirathu....

Enakku Kaviyo, pachaiyo, vellaiyo ore mathiri than.... Sirupanmai enra manchal (yellow) kannadi vazhyaka parpathu illai...

En manachachikku therithai sonnen....Nandri...

Nan en saga jeevankalukaka prathikkiren...

said...

சமூக விரோதிகள் சிலர் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காததால் அவர்கள் மீது காவலர் செல்வராஜ் FIR பதிவு செய்கிறார். உடனே அந்த சமூக விரோதிகள் அவரைக் கொலை செய்கின்றனர். இது சொந்த தகராறு அன்றி வேறு என்ன?

அரசு அலுவலரை பணி செய்யவிடாதது மட்டுமின்றி, அவரை கொலை செய்த அந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. இங்கு காவிகள் உள்ளே நுழைய என்ன காரணம்?

நீங்கள் மஞ்சள் கண்ணாடியும் அணிய வேண்டாம்; பச்சை கண்ணாடியும் அணிய வேண்டாம்; (உங்கள் பார்வை சரியாக இருந்தால்) கண்ணாடி எதுவுமின்றியே பார்க்கலாம். பார்வை தெளிவாகத் தெரியும்.

இது கோவை கலவரம் தொடர்பானது. நான் மிக முக்கியமாக இங்கு குறிப்பிட விரும்பியது சிறையில் (காவல் துறையினராலேயே) குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாமல் விசாரணைக்கைதிகளாக சிறையில் இருப்போரைக் குறித்துத்தான். இவர்களை ஜாமீனில் விடலாமே. பொடா குற்றம் சுமத்தப்பட்டோரெல்லாம் இன்று வெளியில் வந்து குற்றம் சுமத்தியவருடனேயே கூட்டணி வைத்துள்ளனர். இவர்களுக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்படுகிறது. என்ன காரணம்?