Wednesday, March 15, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்

1997ஆம் ஆண்டு கோவையில் சமூக விரோதிகள் சிலர் செய்த மாபாதக செயலான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 158 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந்த செயலைச் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கொலைக்கு கொலை என்ற இஸ்லாமிய அடிப்படையிலேயே மரண தண்டனை நிறைவேற்றினாலும் பொருத்தமானதே.

கைது செய்யப்பட்ட 158 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்தார். சிறைவாசிகளின் குடும்பத்தினர் 59 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது சம்பந்தமாக இதுவரை 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் சர்தார் என்ற 24 வயது இளைஞனுக்கு (கைது செய்யப்பட்ட போது இவருக்கு வயது 17) ஒரு சாட்சியும் அளிக்காத நிலையில் இந்த இளைஞனுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அந்த இளைஞனின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தாலும் தண்டனைக் காலமாக 3 அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி சிறையில் இருக்கிறார்கள். கொலைக் குற்றம் மற்றும் பொடா வழக்குகளில் தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயந்திர் மற்றும் வை.கோ. போன்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தமிழக அரசு தெரிவித்தும் ஜாமீன் வழங்கப் பட்டது. இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றவர்கள்; வழக்கின் போக்கையே மாற்றும் செல்வாக்கு அவர்களுக்கு உள்ளது என்றெல்லாம் வாதிடப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கோவை சிறைவாசிகளைப் பொறுத்தவரை இப்படி எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. பின் ஏன் பிணையில் விடுவிக்கப்படவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் என்.கே. பிரமசந்திரன் மே4, 2005 அன்று இப்படி கேட்கிறார்: நமது நீதி பரிபாலன முறை குறித்து முழு நாட்டிடமும் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். சாட்சியங்கள், விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் இத்யாதி முடிவடைந்து, அப்துந் நாஸர் மதானி அப்பாவி என்று தெரியவந்தால், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்ததற்கு யார் பொறுப்பேற்பார்? இது மிக முக்கியமான கேள்வியாகும். இதற்கு சரியான பதிலை நாம் காண வேண்டும்.

இவ்வழக்கின் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் திரு பி. பால்பாண்டியன், வழக்கின் முக்கிய புலணாய்வு அதிகாரியான ராஜசேகரிடம் கேட்ட கேள்வியும், அவரின் பதிலும்....

கேள்வி: இவ்வழக்கில் எதிரிகள் 74 அப்துல் சலாம், 75 அப்துல் சுக்கூர், 76 காதர், 77 ஜமேஷா, 79 ஹசன், 82 பஷீர், 83 அப்துல் சத்தார், 86 அபுதாகிர், 87 ஜப்பார், 90 கலந்தர் பாட்சா, 93 மொகமது அலி, 95 பிலால், 97 சிராஜுதீன், 98 லியாகத் அலி, 100 நஷீர் மற்றும் 159 குலாம் ஆகிய நபர்களுக்கு எதிராக ஏதாவது சாட்சிகள், இந்த எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ வாக்குமூலமோ அல்லது விபரமோ எதுவும் அளித்ததாக உங்கள் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதா?

பதில்: மேற்சொன்ன எதிரிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாட்சிகளின் வாக்கு மூலங்களில் மேற்சொன்ன எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ அல்லது விவரம் வாக்குமூலங்களிலிருந்து எதுவும் வெளிப்படவில்லை.

பின் ஏன் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை? இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் மட்டுமா?

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.tmmkonline.org/tml/archieves/others/98_712.htm
http://www.tmmkonline.org/tml/others/109971.htm

இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆர்ப்பாட்டம் குறித்து அறிய: http://www.tmmkonline.org/tml/photos/28-2-06/28-2-06.htm

9 பின்னூட்டங்கள்:

Anonymous said...

For your information.. There are so many Hindus also in the coimbatore prison, Struggling for the bail. They are for the same reason. So do not compare this with politcal cases. As a fellow from coimbatore i can say what muslimd did in coimbatore is inhuman. (All muslims know what is going to happen in coimbatore before the incident happens). But no body tried to stop it. So they deserve this........

said...

திரு.அழகப்பன்,

இந்திய குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது? இப்படி ஜாமீன் வழங்காமல் இரு அரசுகள் இழுத்தடிக்க இயலுமா?

ஐயா திரு.புறம்போக்கு
சிறையில் வாடுபவர் இந்துவாக இருந்தாலும் அவருக்கும் இந்திய சட்டத்தின் படி ஜாமீனோ விடுதலையோ வழங்கப் பட வேண்டும்.

//So they deserve this// எவ்ளோ பெரீய்ய்ய மனசு உமக்கு? குஜராத்துக்கு என்ன சொல்றது?

said...

//There are so many Hindus also in the coimbatore prison//
நன்றி அனானி, இந்துக்கள் சிறையில் இருந்தால் முஸ்லிம்களும் சிறையில் இருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்க முடியாதது.

//As a fellow from coimbatore i can say what muslimd did in coimbatore is inhuman.//

நான் கோவையைச் சேர்ந்தவன் இல்லையென்றாலும் அன்று நிகழ்த்தப் பட்ட நிகழ்வை ஆதரித்து எழுதவில்லை. குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றே கூறியிருக்கிறேன். குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டால் இந்திய தண்டனைச் சட்டத்தைவிட கடுமையான இஸ்லாமிய சட்டத்தின் படி அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் என்றும் கூறியிருக்கிறேன். மீண்டும் படிக்கவும்.

//All muslims know what is going to happen in coimbatore before the incident happens//

இதைத்தான் தவறு என்கிறேன். எப்படி இதற்கு முன் நடைபெற்ற மருத்துவமனைக்கு முன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் அனைத்து இந்துக்களும் சம்பந்தப்படவில்லையோ அதுபோன்றுதான் இதிலும்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறவில்லை. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இல்லாமல் 8 ஆண்டுகளாக சிறையில் தங்களின் வாழ்க்கையின் பெரும்பகுதியை இழந்தவர்களை பிணையில் விடவேண்டும் என்றுதான் கூறுகிறேன். வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நான் கூறவில்லை.

said...

அழகு,

அது அரசின் தவறு என்பதைவிடமும் நீதித்துறையின் மெத்தனம் எனலாமா?
மற்றபடி குற்றவாளியா இல்லையா என்பதையெல்லாம் விசாரணைக்கு பிறகுதான் முடிவு செய்யமுடியும்.

வழக்குகளை விரைந்து நடத்த சொல்லி நீதித்துறையை நிர்பந்திக்கவேண்டும்.வழக்குகளை விசாரிக்க காலக்கெடு நிர்ணயிக்கவேண்டும்.

said...

//இந்திய குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது? இப்படி ஜாமீன் வழங்காமல் இரு அரசுகள் இழுத்தடிக்க இயலுமா?//

குற்றவியல் சட்டம் தெரிந்தவன் அல்லன். ஆனாலும் மாநில அரசு இழுத்தடிக்க முடியும் என்பதை வை.கோ. மற்றும் ஜெயேந்திரர் விவகாரங்களில் பார்த்தோம். அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் வசதி போன்றவை இருந்ததால் உச்ச நீதி மன்றத்தை நாடினர். ஆனால் சாதாரணர்களுக்கு...?

said...

நன்றி முத்து (தமிழினி)

நீதித்துறையின் மெத்தனமாகவும் இருக்கலாம். மற்றவற்றிற்கு மேலே பதில் கூறியுள்ளேன்.

Anonymous said...

சிந்திக்கத் தூண்டும் மிக அருமையான பதிவு, மன்னின் மைந்தர்களுக்கு ஒரு நீதி சங்கராச்சாரி போன்ற வந்தேரிகளுக்கு ஒரு நீதி என்பதுதான் தற்போதைய உண்மை. மனசாட்சி உள்ள அனைவரும் சிந்திப்பார்களா? - anony 2

Anonymous said...

Vantherigal parpanarkala mattum thana...Muslim & Christians are vantherikale.....I am not understanding.....Muttal naikal thittuvatahi thirutha mattargal....mannin maithargal...Parparnargal allatha hindus. So ella vantherikallukkum naikalum avargal nattai parthu odungal....

said...

// சிந்திக்கத் தூண்டும் மிக அருமையான பதிவு, மன்னின் மைந்தர்களுக்கு ஒரு நீதி சங்கராச்சாரி போன்ற வந்தேரிகளுக்கு ஒரு நீதி என்பதுதான் தற்போதைய உண்மை. மனசாட்சி உள்ள அனைவரும் சிந்திப்பார்களா //

ஆமாம் , 4000 வருடங்களாக முஸ்லீம்கள் இம்மண்ணின் மைந்தர்கள்தான் , அதனால் அவர்கள் எத்தனை குண்டு வேண்டுமாயினும் வைக்கலாம்