Tuesday, November 14, 2006

அல்ஜஸீரா ஆங்கிலம்

தொடங்கப்பட்ட நாள் முதல் அரபுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டுவரும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களால் தவிர்க்க முடியாத ஊடகமாக அன்று முதல் திகழ்ந்து வருகிறது.

1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹா - கத்தரில் தொடங்கப்பட்ட இத்தொலைக் காட்சி, அரசியல் குறுக்கீடுகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு போர்களான ஆப்கன் மீதான தாக்குதலையும், இராக் மீதான தாக்குதலையும் உலகம் பார்த்தது அல்ஜஸீரா மூலமே. அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டுப் படைகளின் களவானித் தனத்தையும், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகளையும் அல்ஜஸீரா வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் சினமுற்ற அமெரிக்கா அல்ஜஸீரா நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரியதாக தகவல்கள் வெளியானது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அல்ஜஸீரா, ஆங்கில ஒளிபரப்புச் சேவையை நாளை (15-11-2006) முதல் தொடங்குகிறது. தோஹா, கோலாலம்பூர், லண்டன் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஒளிபரப்பு மையங்களை இதற்காக ஏற்படுத்தியுள்ளது.

பி.பி.சி. மற்றும் சி.என்.என். போன்ற மேற்கத்திய ஊடகங்களின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத அல்ஜஸீரா, ஆங்கிலத்தில் கால்பதிப்பது மேற்கத்திய ஊடகங்களுக்கம் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பி.பி்.சி., சி.என்.என். போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த சிலரும் அல்ஜஸீராவில் இணைந்துள்ளனர்.

அல்ஜஸீரா என்றுமே அரசுகளின் ஊடகமாக இருந்ததில்லை; அது மக்களின் ஊடகமாகவே இருந்துள்ளது என்பதற்கு அது சந்தித்து வரும் தாக்குதல்களே ஆதாரமாகும்.

செய்திகளை மேற்கிலிருந்து பார்த்து வந்த உலகம், இனி மத்திய கிழக்கிலிருந்தும் பார்க்கும் என்பது திண்ணம்.

10 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அழகப்பன் அண்ணாச்சி,

நானே இதப் பத்தி எழுத்லாம்னு இருந்தேன். யாரு எழுதுனா என்ன?
விசயத்தை வெளிய சொன்னா போதாதா?
வாழ்த்துகள் - அல் ஜெஸிராவுக்கும் உங்களூக்கும்

சாத்தான்குளத்தான்

Unknown said...

ஒரு பக்க சார்பு இல்லாமல் இனி செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என்பது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. தகவலுக்கு நன்றி.

நல்லடியார் said...

அழகப்பன்,

தனிமனித சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டு அல்ஜஸிராவை முடக்கியது அமெரிக்கா! அரபு நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை என்பவர்கள் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஆப்கனிலும் இராக்கிலும் தங்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி ஏனைய அடிவருடி ஊடகங்களுக்கு மத்தியில் அல்ஜசீரா சிம்ம சொப்பனமாகவே விளங்கியது. நியூயார்க் பங்குச்சந்தை பட்டியலிலிருந்து நீக்கியது முதல் முடிந்த அத்தனை அடக்குமுறைகளையும் செய்து அல்ஜசீராவை ஒடுக்க நினைத்தது. ஒரு கட்டத்தில் அல்ஜசீரா ஒளிபரப்பை முற்றிலும் நிறுத்தப் போவதாகக்கூட செய்தி வந்தது. அனைத்தையும் தாக்குப் பிடித்து ஆங்கிலத்திலும் அடியெடுத்து வைக்கும் அல்ஜசீரா ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களின் நம்பகத் தன்மையையும் பெற்றுள்ளதால் வீறுநடை போடும் என்று நம்புவோமாக!

Anonymous said...

GOOD NEWS!

உங்கள் நண்பன்(சரா) said...

செய்தி நிறுவனம் பற்றிய செய்தி அருமை! தகவலுக்கு நன்றி! தொடர்ந்து செய்தி பரப்பவும்!!!



அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

இந்த நூற்றாண்டிற்கான தளத்தில் யுத்தம் ஆரம்பமாகப் போகிறது என்று கூடச் சொல்லலாமா?

நட்புடன்

மலைநாடான்

Anonymous said...

நல்லதுதான்.
அப்படியே அவுங்க ஆபீசுக்குக் அப்பப்போ வந்து விடியோ கேசட் கொடுத்திட்டு போற அம்பிகளை கொஞ்சம் யாருன்னு விசாரிக்கமாட்டாளா?

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு செய்தி. குவைத்திலிருந்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.

muslimeen said...

BISMILLAHIRRAHUMANIRRAHEEM

WELCOME TO ALJAZEERA ENGLISH CHANNEL.WE PRAY TO ALLAH A LONG LIFE FOR THE CHANNEL

மாசிலா said...

நல்ல செய்தி.
கையோடு கை, நம்ம நாட்டில் உள்ள ஜாதி பன்றிகள் தலித்துக்களுக்கு செய்துவரும் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டினால் புன்னியமா இருக்கும்.