Sunday, January 06, 2008

யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்

உலகின் நீண்ட நெடிய தீர்க்கப்படாத பிரச்சனை பாலத்தீன பிரச்சனையே. இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர்கள் யூதர் என்பதால், அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தர பிரிட்டன் ஏகாதிபத்தியம் முடிவு செய்தபோது, அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அப்போது யூதர்கள் அதிகமாக இருந்த ஐரோப்பாவின் ஒரு பகுதியையோ அல்லது ஹிட்லரின் ஜெர்மனியையோ அல்ல. மாறாக, மத்திய கிழக்குப் பகுதியை.


யூத மதத்தின் பிறப்பிடம் என்பதற்காக மட்டுமே இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. உலகப் போர்களில் தங்களுக்கு எதிராக நின்ற உதுமானியப் பேரரசைப் பிரித்தாள வேண்டும் என்பதுவும் அவர்களின் நோக்கமாக இருந்தது. இதற்கு வசதியாக ஏற்கனவே யூத அமைப்பு ஒன்று அந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நிலங்களைத் தந்திரமாக கையகப்படுத்திக் கொண்டு இருந்தது. (விரிவாக அறிய : பா. ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் பார்வையிடவும்)

தங்கள் இடத்தைப் பிடுங்கி அடுத்தவனுக்குக் கொடுப்பதை எந்த மனிதன்தான் ஒப்புக் கொள்வான்? பாலத்தீனியர்களும் அன்று முதல் தங்கள் எதிர்ப்புகளை பலவிதமாக வெளிக்காட்டினர்.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும் சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க வைக்கப் போவதாக தடி எடுத்திருக்கும் அமெரிக்கதான், பாலத்தீனர்களின் சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்க இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. பாலத்தீனம் போர்க்கள பூமியாக இருக்கும்வரை, ஆயுத வியாபரிகளின் சந்தையாக மத்தியக் கிழக்கு விளங்கும் என்பதாலேயே பேரழிவு ஆயுத வியாரிகளையே அதிபராகக் கொண்ட அமெரிக்காவும் அதன் எடுபிடியான பிரிட்டனும் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகின்றன. (கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அறிவிப்பை பார்வையிடவும்)

எனினும் கண் துடைப்புக்காக பேச்சுவார்தைகளை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஓஸ்லோ முதல் சமீபத்தைய அண்ணாபோலீஸ் வரை இந்த நாடகங்கள் நடந்தேறி வருகின்றன.

பாலத்தீனர்களின் பிரதிநிதியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசு பாலத்தீன விடுதலை அமைப்பை மட்டுமே அங்கீகரித்ததுள்ள நிலையில், அண்ணாபோலீசில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அந்த அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஹ்மூத் அப்பாஸ்தான் இதன் தலைவர் என்றாலும், பாலத்தீன் அதாரிட்டியின் பிரதிநிதி என்ற அளவிலேயே அவர் கலந்து கொள்ள முடியும். இதன் மூலம் எந்த உடன்படிக்கை எட்டப்பட்டாலும் சர்வதேச சட்ட அங்கீகாரம் பெற முடியாது. சர்வதேச சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு ஒப்பந்தம் கண் துடைப்பு ஒப்பந்தமாகவே இருக்க முடியும்.

1947 ல் 90 சதவீதமாய் இருந்த பாலத்தீனியர்களின் எண்ணிக்கை 2020ல் 55 சதவீதமாய் சுருங்கிப் போகும் அளவுக்கு பாலத்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் அகதிதகளாய் வெளியேற்றப் பட்டுள்ளனர். யூதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் மருந்துகள் இல்லை ( கடந்த அக்டோபர் மாதம் 61 வகையான முக்கியமான மருந்துகள் பாலத்தீனத்தில் இல்லை என்ற நிலை. நவம்பர் மாதம் இதன் எண்ணிக்கை 91 என்றானது) , அடிப்படைக் கல்வி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை. இப்படி தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்துவிட்ட ஒருவன் அதற்குக் காரணமான ஒருவனை எதிர்த்துப் போராடுவதைத்தான் ஊடக வியாபாரிகள் தீவிரவாதம் என்கின்றனர். நம்மூர் ஊடகங்களும் அதனை அப்படியே வாந்தி எடுக்கின்றன.
ஹமாஸ் போன்ற இயக்கங்களைத்தானே அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். இவர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள்தானே என்ற கேள்வியும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. ஹமாஸ் இயக்கம் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லைதான். அநீதியாக எழுதி வைத்துக் கொண்டு, இதுதான் அமைதி ஒப்பந்தம் என்றால் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? அநீதியாக இருந்தாலும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட யாசிர் அரஃபாத்தை இவர்கள் எப்படி நடத்தினார்கள், எத்தனை முறை அவரை வீட்டுச்சிறை வைத்தனர். மருத்துவத்திற்காகக் கூட வெளிநாடு செல்ல பல தடைகளை ஏற்படுத்தினர் என்பதை ஏனோ இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, பாலத்தீனத்தை தனிநாடாக இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை. பாலத்தீன அதிபர் என்று பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவரை வளைகுடாவின் ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் புழங்கினாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்கள், ஆட்சியாளர்கள் பாலத்தீன் அதாரிட்டியின் தலைவர் என்றே புழங்குகின்றனர். இந்த அத்தாரிட்டி சிறிய அளவில் காவல்காரர்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம். இராணுவம் போன்று ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட இடத்தில் நிகழும் கலவரங்களை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த வேண்டும், யூதர் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை சிறிய அளவிலான காவல்காரர்களைக் கொண்டு நிறுத்த வேண்டும் என்பதுதான் இந்த பாலத்தீன அதாரிட்டியின் முழுமுதற்கடமை.

ஆனால், இதுவரை கலவரக்காரர்களை ஒடுக்க முடியவில்லை. எனவே பாலத்தீனர்களுக்கு தங்களுடைய நாட்டை ஆளும் தகுதி இல்லை என்கிறார் டோணி பிளேயர்.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருப்பது பாலத்தீனம் எனும் தனி நாடு அமைவது இல்லை; மாறாக அந்த நாட்டை ஆளும் தகுதியுடையவர்களாக பாலத்தீனியர்கள் இருப்பார்களா என்பதுதான். இந்த இருநாடுகளும் இருக்க வேண்டுமானால் முதலில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் . .... என்று அவர் கூறுகிறார்.
"இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்று கூறுபவர்கள் அந்த உத்தரவாதத்தை எவரிடம் கேட்கின்றனர்? உத்தரவாதம் கொடுக்கக் கூடிய சக்தி அவர்களிடம் இருக்கிறதா? செல்வந்தர் ஒருவரின் கடனுக்கு ஏழையிடம் உத்தரவாதம் கேட்பது போல் இருக்கின்றது இவரின் இந்த வாதம்.

ஒரு அரசு செயல்படுவதற்குரிய அடிப்படை வசதிகள் எதனையுமே வழங்காமல் அல்லது தாங்களாகவே அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முனையும்போதெல்லாம் அவற்றிக்கு தடைபோட்டுவிட்டு இவர்கள் நாட்டை ஆளும் தகுதி உள்ளவர்களா? என்று கேட்பது இவர்களின் மனவக்கிரத்தையே காட்டுகிறது.
அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்களை எதிர்த்து, தங்களுக்கு அதுபோன்ற வெளநாட்டு உதவிகளோ, பண வசதியோ இன்றி தங்கள் சொந்த நாட்டிலேயே தங்களுடைய அறிவையும் மிகவும் குறைவான செல்வத்தையும் பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்கியும், சில போது இயற்கை வழங்கிய கல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வருகின்ற இந்தப் போராளிகளைப் பார்த்துத்தான் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர்.

பாலத்தீன மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, அநீதிகளையே அமைதி ஒப்பந்தம் என்று ஏற்கச்சொல்லி, மறுத்தால் தீவிரவாதி என்றெல்லாம் ஏகடியம் பேசி வல்லான் வகுத்ததே சட்டம் என்று ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக் கொள்ளும் மேற்கத்திய, யூதர்களைப் போன்றே நம்நாட்டிலும் வல்லாதிக்க வெறிகொண்ட பார்ப்பன சித்தாந்த எதிரிகளுக்கு அல்லது அவர்களைவிட எளியோருக்கான அத்தனை வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு/ மறைத்துவிட்டு திறமை இல்லை; அதனால்தான் பின்தங்கியுள்ளனர் என்று கூறுவர்.

சுதந்திரத்திற்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளாகவும் சுதந்திரத்திற்குப் பின் அறுபது ஆண்டுகளாகவும் சுரண்டிக் கொண்டிருக்கும் இவர்கள், மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.

என்னே ஒற்றுமை! பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர்.

18 பின்னூட்டங்கள்:

Anonymous said...

முண்டம் அழகப்பன்,
அப்ப நீ தாடிக்காரனுக்கு பிறந்த இழி பிறவியா?முண்டம் முண்டம்.

said...

Good Post.

ஹிட்லர்தான் தன்னை சுத்த ஆரியன் என்றும் அவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள் என்றும் கூறினான். அதனால்தான் சங்பரிவார்கள் அவனை ஆராதித்த அவனது ஸ்வஸ்திகாவையே தனது சின்னமாக கொண்டுள்ளன. யூதர்களை ஆதரிப்பது பிராமணர்களின் நோக்கமல்ல. இஸ்லாமிற்கு எதிரான இந்துத்துவா பார்வை கொண்டவர்களே யூதத்தை ஆதரிக்கின்றனர். பார்ப்பனீயம் என்பது இந்துத்தவா சிந்தனையின் மையமான பார்வையாக இருப்பதால் அது யூதர்களை ஆதரிக்கிறதே தவிர வரலாற்றுத் தொடர்புகள் இருக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான். கட்டுரை சுருக்கமாக பிரச்சனைகளை தொட்டுச் செல்கிறது. பாராட்டுக்கள்.

said...

பெயரில்லாமல் வந்து எச்சமிட்டவரே!

உங்கள் வயிற்றெரிச்சல் எனக்குப் புரிகிறது. மற்றவர்களுக்கும் புரியட்டும் என்பதற்காகவே உங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நன்றி ஜமாலன்.

ஹிட்லர் குறித்த நிறைய வாசிக்க வேண்டும். அவன் செய்ததாகச் சொல்லப்படும் பல செயல்களை இஸ்ரேலியர் தற்போது பாலத்தீனத்தில் நிகழ்த்திக் கொண்டுள்ளனர். ஹிட்லரும் இஸ்ரேலிய வழி வந்தவனாக இருக்கக் கூடும்.

இந்தியாவின் பார்ப்பனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நிறையவே ஒற்றுமை காணப்படுகிறது.

அறிவுசார் நிலைகள், துறைகள், அதிகாரமையங்களில் ஆக்ரமிப்புகள், (இந்தியா, அமெரிக்க அரசியல் லாபிகள் உட்பட), பிற இனத்தாரை அனுமதிக்காமை என்று பலப்பல ஒற்றுமைகள் இருந்தாலும் இரு இனத்துக்கும் அடிப்படையான ஒற்றுமை

பார்ப்பனீயமும், யூதமும் பிறப்பினாலேயே வருவது. யாரும் தழுவி ஏற்க முடியாது.

(என்னதான் சில செட்டிமார்களும், சைவப்பிள்ளைமார்களும் 'பூணூல்' போட்டுண்டும், 'மறை'(க்கப்பட்டதை) ஓத முயன்றும் வேஷங்கட்டினாலும் 'அவா' ஒப்புக்க மாட்டா!)
அதுபோலவே யூதர்களும்!

இந்துத்துவா பார்வை கொண்டவர்கள் யூதர்களை மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் அவர்களை ஆதரிப்பர்.

said...

அழகப்பன் சார்,

இந்த அனானியின் குடுமிகளில் ஒன்று தன் பெயரான 'முண்டம்' என்பதை அது சொல்லிக் கொள்ளும்.

மனநோய் முற்றி இருக்கும் இந்த ஜந்துவைக் கண்டுகொள்ளவேண்டாம்.

மற்றபடி நல்ல பதிவு. உங்கள் பதிவு எனக்கு இது தொடர்பான சில சிந்தனைகளைத் தந்துள்ளது. எழுத முனைகிறேன் இன்ஷா அல்லாஹ்.

said...

சிறந்த பதிவு.

கூர்மையான கருத்துக்கும் எழுத்துக்கும் வாழ்த்துகள்!

said...

Dear Alagappan,
May peace be on you. Your post is really very superb, I appreciate you. But we cant say all bramins supporting jews, who is supporting jews here, must be they don’t know full history, otherwise them eyes and ears are covered by a steel. Anyhow kindly continue your very good job, we are here for supporting you. Just ignore whoever posted by anonymous, also don’t reply them. If they have dare lets comes out with the real name. I’m very proved of you my bother.
Thanks & best wishes
Mastan Oli

said...

நன்றி சவூதி தமிழன்.

//உங்கள் பதிவு எனக்கு இது தொடர்பான சில சிந்தனைகளைத் தந்துள்ளது. எழுத முனைகிறேன் இன்ஷா அல்லாஹ்.//

எழுதுங்கள். காத்திருக்கிறேன். இன்றைய உலக அரசியல் மத்திய கிழக்கிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் தமிழக ஊடகங்கள் மத்திய கிழக்கின் நிகழ்வுகளை முழுமையாகத் தருவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடக்கும் சிறு நிகழ்வுகளைக் கூட பதிவு செய்யும் தமிழக ஊடகங்கள் மத்திய கிழக்கில் நடைபெறும் அரச பயங்கரவாதம், மீறப்படும் மனித உரிமைகள் குறித்து பதிவு செய்வதில்லை. எப்போதாவது பதிவு செய்யும்போது, பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களை தீவிரவாதம் என்று திரிக்கின்றனர். மலையாள ஊடகங்கள் ஓரளவு பதிவு செய்கின்றன.

நன்றி அதி. அழகு

said...

நன்றி மஸ்தான்.

//But we cant say all bramins supporting jews, who is supporting jews here, must be they don’t know full history, otherwise them eyes and ears are covered by a steel.//

அனைத்து பார்ப்பனரும் இஸ்ரேலின் செயல்களை ஆதரிக்கிறார்கள் என்று கூறமுடியாதுதான். யூதர்களில்கூட மிகச்சிலர் இஸ்ரேலின் செயல்களை கண்டிக்கின்றனர். அதுபோலவே பார்ப்பனரிலும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையான பார்ப்பனர் இஸ்ரேல் ஆதரவுடையவர்களாகவே இருக்கின்றனர். வலையுலக டெண்டுல்கர் என்று அழைக்கப்படுபவர் இது குறித்து ஒரு சில பதிவுகள் கூட எழுதியுள்ளார்.

said...

விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு,

யூதச்சிந்தனை எனப்படுகிற ஜியோனிசமே உலகளாவிய பார்ப்பனியம்,
உலக அரசியலே மத்திய கிழக்குப் பிரச்னையில் தான் மையங்கொண்டிருக்கிறது என்கிற உங்கள் கருத்து மிகவும் சரியே!

அதை அணையவிடாமல் எண்ணை வார்ப்பதில் தான் ஏகாதிபத்திய சுயநலம் இருக்கிறது.

said...

//அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடக்கும் சிறு நிகழ்வுகளைக் கூட பதிவு செய்யும் தமிழக ஊடகங்கள் மத்திய கிழக்கில் நடைபெறும் அரச பயங்கரவாதம், மீறப்படும் மனித உரிமைகள் குறித்து பதிவு செய்வதில்லை.//

Please read MERIP (Middle East Research in Politics) a quarterly magazine published from UK, which narrates the atrocities done by Saudi Monarchs. This magazine is banned in all Gulf countries

said...

நண்பர் அழகப்பனுக்கு,

பாலஸ்தீனிய பிரச்சினையின் வேரைப் பற்றியெடுத்து ஆராய்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இதைப் போன்ற நல்ல பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

நண்பர் ஜமாலன் சுட்டிக்காட்டியப்படி பார்ப்பனியத்திற்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமைகள் பல உள்ளன. அதை பற்றிய என்னுடைய பதிவு ( மோடி Vs ஹிட்லர் - ஒரு ஒப்பீடு )
ஒன்று உள்ளது. நேரமிருந்தால் படித்து பாருங்கள்.

said...

அழகப்பன் சார்,

சில சிந்தனைகளை எழுதியுள்ளேன். கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.

நன்றி!

http://iyalbu.blogspot.com/2008/01/blog-post_08.html

said...

//பார்ப்பனீயமும், யூதமும் பிறப்பினாலேயே வருவது. யாரும் தழுவி ஏற்க முடியாது.//

அழகப்பன்,

அருமையான ஒப்பீடுகள் தொடர்ந்து எழுதுங்க.

Anonymous said...

Azagappan,

You may be a mean dravidian tamil swine.But that does not entitle you to go about exhibiting this level of caste fanaticism.Even though you are a dravidian tamil swine,there is still hope for you,Please think rationally and write.

said...

நன்றி பாபு.

எண்ணை வார்ப்பதற்கு உதவியாய் வளைகுடா நாடுகளின் தலைவர்களும் உள்ளனர். பாலத்தீன மக்களின் பிரச்சனைகளுக்கு இவர்களின் செயல்பாடுகளும் முக்கிய காரணமே.

நன்றி கூத்தாநல்லூரான்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பத்திரிகையை வாசிக்கிறேன். நேரம் கிடைப்பதுதான் பிரச்சனை.

நன்றி உறையூர்காரன்,

உங்கள் பதிவை வாசித்தேன். அருமையாக அலசியுள்ளீர்கள.

சவூதி தமிழன் உங்கள் பதிவை வாசித்தேன். கருத்தும் கூறியுள்ளேன். இஸ்ரேலின் அட்டூழியங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி முஸ்லிம்.

செய்தியும் அதற்கான உங்கள் துணுக்குகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். தொடர்க.

Anonymous said...

//It is important to keep an open mind, but not so open your brain falls out.//

Dont worry Azagappan.Keep an open mind;You do not seem to have any brain;So what if some of the dirt from your head falls out.It will do you good.

Anonymous said...

பதிவு எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஆரியர்கள் means jews தான் இருக்கற பார்பான் அப்படின்னு சொல்றீங்க. நம்மளோட பூர்விகத்தை தேடி போனா எங்குமே இல்லாத குமரி கண்டம் இல்லாங்காட்டின்னா ஆப்பிரிக்கான்னு வருதே. இதுல துலுக்கனுங்க எப்ப நமக்கு பூர்விக தேசமாக ஆனாங்க

சரி அத வுடு ஆரியர் கதையை நீங்க நம்பும் போது அதே போல யூதர்களின் பூர்விக இடம் தான் இஸ்ரேல் என்பதை அப்படியே முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது படு தமாசா இருக்குது

முன்னாடி துலுக்கனுங்க அவனுங்குளை விரட்டினாங்க இப்ப அவனுங்க திருப்ப அடிக்கிறாங்க இதுல உனக்கு என்ன அரிக்குது.

இல்லை ஓவரா துலுக்க வாடை அடிக்கிது அதான் கேட்டேன். ரொம்ப பேசினா குண்டு வைச்சுடுவேன்னு மிரட்டுவீங்க எஸ்கேப்

Anonymous said...

அரைகுறை ஜமாலா
ஹிட்லர் போட்ட ஸ்வஸ்திக் சின்னம் தலைகீழானது.. இங்கு இருகும் ஸ்வதிக் சின்னதுக்கும் அதுக்கும் வேறுபாடு அதிகம். அதை எல்லாம் முதல்ல ஒழுன்னா பயிர்ச்சியோடு படிச்சுட்டு உதார் உடு சரியா