கணித விதியும் மனித விதியும்
''விதி'' - நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை. மனிதன் தனக்கு தாங்க முடியாத வேதனைகள், சோதனைகள் ஏற்படும்போது ''என்ன செய்வது? எல்லாம் விதி!'' என்று கூறி தமக்கு ஏற்பட்ட வேதனையை அல்லது சோதனையை தனக்கு மீறிய சக்தியின் (கடவுளின்) மீது பாரத்தைப்போடுவதன் மூலம் அவனது மனம் நிம்மதியடைகிறது.
நாத்திகர்கள் கடவுளை நம்ப மறுப்பதற்கும் இந்த விதிதான் காரணமாக இருக்கிறது. எல்லாம் கடவுள் செயல் என்றால், ஏன் சுனாமி ஏற்பட வேண்டும்?, ஏன் பொருளாதார - கல்வி இன்னபிற ஏற்றத்தாழ்வுகள்? இப்படி நிறைய கேள்விகள் அவர்களை வாட்டி எடுப்பதால்தான் அவர்கள் கடவுளை நம்ப மறுக்கிறார்கள். எல்லாமே இயற்கையான ஒன்று, சில விஷயங்களுக்கு கடவுளை நம்புபவர்கள் காரணம் என்பது அவர்களின் வாதம்.
திறமை உடையவன் முன்னேற வேண்டும். இது இயற்கை. ஆனால் திறமையில்லாத பலர் முன்னேறிய நிலையிலும், (மதத்தால் பிற்படுத்தப்படாத) திறமையுடைய பலர் பின்னேறிய நிலையிலும் இருப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு என்ன காரணம்? இயற்கை சீற்றம் ஏற்படுவதைப் போன்று சிலர் விஷயத்தில் மட்டும் இயற்கை விதிவிளக்கு அளிக்கிறதா? கடவுள் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை இதற்குக் காரணம் விதிதான். இங்கு தருமி அவர்களும், அவருக்குப் பின்னூட்டமிட்டவர்களும் விதியைக் குறித்து எழுப்பிய வாதங்களுக்கு எமது பதில் இதுதான்...
விதி என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதை விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் கடினம். இறைவன் விதியை நம்பச் சொன்னதால் நாம் நம்புகிறோம். அதனைக் குறித்து அதிகம் விவாதிக்க வேண்டாம் என்று நபியவர்களால் தடுக்கப்பட்டுள்ளோம். அதற்கு எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் அது மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமே. ஆனால் அதற்கு உதாரணமாக கணினையைக் கூறலாம்.
நாம் அச்சிடும் எழுத்துக்களை கணினி ஒரு எழுத்துவடிவமாக எடுத்துக் கொள்கிறது. இங்கு நான் அச்சிட்டதால் தான் இவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று எவரும் கூற முடியாது. நமக்குத் தெரியாமல் பல பரிமாற்றங்கள் உள்ளே நிகழ்கின்றன. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் (Predetermind) அவை செயல்படுகின்றன. எனவே புகழ் அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்தவருக்கே போய்ச்சேரும் என்பதை நாம் மறுக்கவியலாது.
அதே சமயம் 'அ' என்பதை அச்சுக்கோர்ப்பதற்கு குறிப்பிட்ட விசையைத் தட்டாமல் வேறு விசையைத் தட்டினால் 'அ' வராது என்பதும் நாமறிந்த உண்மை. இது நம்முடைய தவறுதானே தவிர ஏற்கனவே முடிவு செய்தவரின் தவறாகாது. இல்லை... இல்லை.... ஏற்கனவே முடிவு செய்தவர்(Creator)தான் தவறாக செய்துவிட்டார் என்று நாம் கூறினால் நம்மை என்னவென்று சொல்வது.
கணினியில் அச்சிடுவதற்கு மட்டுமின்றி கணினியில் பயன்படுத்தப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது பொருந்தும்.
மீண்டும் கூறுகிறேன்.... இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படித்தான் செயல்படுகிறது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது. காரணம் இது விஞ்ஞானம் இல்லை. விஞ்ஞானத்தில் வேண்டுமானால் இதுதான் சரி என்று கூறிவிடலாம். பின்பு வேறொருவர் வந்து அவர் கூறியது அத்தனையும் தவறு, இதுதான் சரி என்று கூறி, புதிய விஞ்ஞானம் உண்டாகலாம். அப்படி மாற்றங்களும் நடந்து உள்ளன. ஆனால் கடவுள் நம்பிக்கையில் அவ்வாறு மாற்றம் செய்ய முடியாது.
25 பின்னூட்டங்கள்:
மிகவும் அருமை உதாரணம்.
மனிதன் நல்லது நடந்தால் அதற்கு தானே காரணம் என்றும், கெட்டது நடந்தால் அதற்கு கடவுள் காரணம் என்று குறை சொல்லி விதியை நொந்து கொள்கிறான் என்பதை எளிய உதாரணம் மூலம் சொல்லியுள்ளீர்கள். அருமையான கண்ணோட்டம்.
இவருடைய வாழ்க்கையிலும் விதி விளையாடி உள்ளதை இங்கே பாருங்கள்.
http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_A.htm
வாசித்தோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி.....
மிகவும் சிக்கலான ஒரு விஷயம். பல ஆண்டுகளாக எனக்கு நானே கேள்வி கேட்டு, சிந்தித்தால் உருவான உதாரணமே இது. இதனைவிட சிறப்பான உதாரணங்கள் இதற்கு முன்பு சொல்லப்பட்டிருக்கக் கூடும். எனக்கு அவை குறித்து தெரியாததாலும், விளங்குவதற்கும் விளக்குவதற்கும் மிக எளிமையாக இருந்ததாலும் இவ்வுதாரணத்தைக் காட்டியுள்ளேன். வாழ்த்தியோருக்கு மீண்டும் நன்றி.....
(நீக்கப்பட்டது எரிதப் பின்னூட்டம்)
ஐநோமிநோ...
பதிவைப்பார்வையிட்டு, முதல்முறையாக என்பதிவில் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி...
விதி என்பதன் பொருள் ஏற்கனவே கடவுளால் முடிவு செய்யப்பட் ஒன்று என்பதை கடவுள் மறுப்பாளர்களும் ஏற்றுக் கொண்ட உண்மை. கடவுள் மறுப்பாளர்கள் அந்த விதி என்ற ஒன்றையே மறுக்கிறார்கள். விதி என்பதற்கான பொருளை அல்ல.
அதுமட்டுமின்றி இந்த பதிவிலும் கணினியை உதாரணமாகக் கொள்ளலாம் என்றுதான் கூறியுள்ளேன். மனித செயல்பாடுகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவைதான் என்பதை நான் கூறியுள்ள உதாரணம் மூலம் கூறியுள்ளேன். மீண்டும் ஒருமுறை என் பதிவை படித்துப் பாருங்கள். இந்து மதத்தில் விதி குறித்து புராணங்கள் என்ன கூறுகின்றன என்பது எனக்குத் தெரியாது.
எனக்கு ஒரு சந்தேகம்... பிறப்பால் ஒரு இந்து என்று நீங்கள் உங்கள் பதிவில் கூறியுள்ளீர்கள். இப்பொழுது எந்த மதத்தில் இருக்கிறீர்கள் என்று கூறவில்லையே!
inomeno,
உங்கள் கேள்விக்கு நெல்லையன் பதில் அளித்திருக்கிறார். நன்றி... நெல்லையன்..
விதி குறித்து புராணங்கள் என்ன கூறுகின்றன என்பதை அறியத்தாருங்களேன்....
//இந்த வலைபதிவை தெடங்கியதின் நோக்கம், இஸ்லாம் மதத்தின் அடிப்படையான குரான் மற்றும் ஹதிஸ் 100/100 தவறே இல்லதவை என சொல்லப்படுவது உண்மைதானா என கண்டறிந்து தெளிவடைவதே//
இவை உங்கள் பதிவில் கூறியுள்ளவை...
குர்ஆன் மற்றும் ஹதீஸில் தவறு இல்லை என்பதை கண்டறிய தாங்கள் மேற்கொண்ட முயற்சி என்ன? கிறிஸ்தவர்களும், யூதர்களும், இந்துக்களில் சிலரும் குர்ஆன் ஹதீசுக்கு இதுதான் விளக்கம் என்று கூறி, இணையத்தில் தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் படிக்கிறீர்களா? அல்லது முஸ்லிம்களின் இணையங்களுக்குச் சென்று படிக்கிறீர்களா? காரணம் இந்து மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நான் உங்களிடம்தான் கேட்கவேண்டும். அதைவிடுத்து காஞ்சி ஃபிலிம்ஸ் என்ற அன்பரிடம் இந்து மதம் குறித்து தகவல் கேட்டால், அந்த தகவல் உண்மையாக இருக்குமா? என்பதையும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
அடுத்து, அப்படி தெளிவடைந்தால் நீங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீர்களா? விளக்கவும்.
நீக்கப்பட்டவை எரிதப்பின்னூட்டங்கள்.
(நெல்லையரே... புலிபாண்டியின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடைய அறிவிப்பு பின்னூட்டத்தை மட்டும் வைத்துள்ளேன்.. ரொம்ப சிரமமாக இருந்தால் நீக்கிவிடலாம்)
ஐயா ஐநோமீநோ, கடவுளுக்கு மட்டும் அறிந்த விசயங்களில் விதியும் ஒன்று. இதை மனிதனும் சரி, உங்களின் விஞ்சானமும் சரி, ஜோசியமும் சரி, ஞானிகளும் சரி இன்னும் என்ன என்ன புதிய கண்டுபிடிப்புக்களும் சரி முன் கூட்டி அறிய முடியாது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனவே எங்களின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதி சம்பந்தமாக தர்க்கம் செய்யாதீர்கள் அதில் நீங்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டும் ஒரு முடிவிற்கு வரமுடியாது என்பதை தெளிவாக விளக்கி விட்டு, விதி சம்பந்தப்பட்ட விசயத்தில் இப்படி விளங்கிக் கொண்டு செயல்படும்படி அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள். அதாவது, நீங்கள் ஒரு செயலுக்காண முயற்சியில் விதியை நம்பாமல் செயல்படுங்கள், அந்த முயற்சியினால் ஏற்படும் விளைவினால் அது உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தாலும், இல்லாமல் போனாலும் அதற்கு மாற்றாக ஏதும் செய்ய முடியாமல் போகும் போது இதுதான் நமக்கு உரிய விதி என்பதை அங்கு நம்பச் சொல்கிறது. இதுதான் மனிதன் அறிந்துக் கொள்ளக் கூடிய விதிக்காண விதியாகும்.
ஐநோமிநோ....
ஒரு வழியாக அப்துல் குத்தூஸின் விளக்கம் தெளிவாக இருப்பதாக கூறியுள்ளீர்கள். இந்து மத புராணங்களில் விதி குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறியத்தாருங்கள் என்று நான் கேட்டதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்து மதத்தைச் சேர்ந்த நீங்கள் இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளவை சரிதானா? என்பதை ஆராயாமல் வேறு ஒரு மதத்தை ஆராய முனைந்திருப்பதிலிருந்து, இந்து மதம் சரியான மதமா? என்பதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. அதில் தவறுகள் இருக்கின்றன என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பதாக நான் கருதலாமா?
//விதி என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதை விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் கடினம்.//
மிக உண்மை சாரே!
Post a Comment