Saturday, January 14, 2006

பொங்கல் Vs புத்தாண்டு

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வெட்டு அவர்கள் தமிழக இஸ்லாமியர்களை நோக்கி நீங்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நல்லடியாரும் நண்பனும் பதில் அளித்திருந்தனர். இவற்றுக்கு விடையளிக்கும்போது கல்வெட்டு பின்வரும் கருத்துக்களைக் கூறினார்.

பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இது முழுக்க நன்றி செலுத்தும் திருவிழா. இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றி செலுத்துகின்றனர். முஸ்லிம்களும் அவர்களின் தெய்வத்துக்கு நன்றி செலுத்தி இதனைக் கொண்டாடலாம். நன்றி செலுத்துவதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு அல்ல.

பொங்கல் குறித்தான அவரது கண்ணோட்டம் இவ்வாறு அமைந்திருந்தாலும் பொதுவான கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடவும்.

http://www.dinamalar.com/2006jan14/tn3.asp
http://www.dinamalar.com/2006jan14/anmegam.asp
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060111150047&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060112114944&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060110062914&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0

இவை மட்டுமின்றி பொங்கலிட சிறந்த நேரம் எது? என்று வேதவாத்தியார்கள் மூலம் கேட்டறிந்து அதனை பத்திரிக்கைளிலும் வெளியிடுகின்றனர். எனவே பொங்கல் என்பது இன்றைய சூழலில் இந்து மதத்தின் ஒரு பண்டிகையாகவே ஆக்கப்பட்டுவிட்டது. (ஆனால் பிராமணர்கள் இதனைக் கொண்டாடுவதில்லை என்பது வேறு விடயம்) எனவே முஸ்லிம்கள் தற்போதுள்ள செயல்முறைகள் மற்றும் சொல்லப்படும் காரணத்தின் அடிப்படையில் பொங்கல் பண்டிகையை (பண்டிகை தமிழ் வார்த்தை அல்ல என்று வாசித்த நினைவு) கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது? என்று கேட்கும் கல்வெட்டு, தமிழ் ஆண்டு என்றிலிருந்து துவங்குகிறது என்பதைக்கூட அறியாதவராக இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது.

எனினும் அவரின் தமிழர் ஒருங்கிணைப்பைப் பாராட்டும் அதே வேளை, முதலில் தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் ஏற்படுத்தி அதனையே தமிழர் திருநாளாக கொண்டாட உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கொண்டாடப்படும் முறை இஸ்லாமிய கடவுள் கொள்கைக்கு மாற்றமாக இராதபோது அதற்கான முயற்சியில் கல்வெட்டுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்.
மீண்டுமொரு முறை ''புத்தாண்டு வாழ்த்துக்கள்''


எழுதத் தூண்டிய பதிவுகள்
http://muthukumaran1980.blogspot.com/2006/01/blog-post_13.html
http://thamizhinam.blogspot.com/2006/01/blog-post.html

4 பின்னூட்டங்கள்:

said...

புத்தாண்டு வாழ்த்துகள் அழகப்பன்.

//தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் ஏற்படுத்தி அதனையே தமிழர் திருநாளாக கொண்டாட உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.//

நண்பர் கல்வெட்டு இதற்கான முயற்சிகளில் தன்னை இணைத்து கொள்வார் என்றே நம்புகிறேன். நாம் தமிழராய் இணைந்து ஒரு விழாவை கொண்டாட வேண்டுமென்றால் தமிழ்ப் புத்தாண்டைத்தான் கொண்டாடவேண்டும். சித்திரை புரட்டுகளை அல்ல.

நன்றி
அன்புடன்
முத்துகுமரன்

said...

//தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது? என்று கேட்கும் கல்வெட்டு, தமிழ் ஆண்டு என்றிலிருந்து துவங்குகிறது என்பதைக்கூட அறியாதவராக இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது.//

ஆச்சர்யம் வேண்டாம்.
அதே இடத்தில் நான் வாழ்த்துகள் /வாழ்த்துக்கள் என்ற சந்தேகத்தியும் எழுப்பினேன்.
அது போல் பலருக்கும் தை ஒன்று புத்தாண்டா அல்லது வள்ளுவர்தினம் (வள்ளுவர் ஆண்டு தொடக்கம்) புத்தாண்டின் தொடக்கமா என்றும் சந்தேகம் உள்ளது.

பொது இடத்தில் ஒன்றைக் கேட்பது கீழ்வரும் காரணங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

1.தெரியாமல் தெரிந்து கொள்ளக் கேட்பது.
2.ஏற்கனவே தெரிந்தவற்றை உறுதிப் படுத்திக்கொள்ளக் கேட்பது.
3.அனைவரும் அது சார்ந்த வியசத்தில் விவாதம் கொள்ள களம் அமைப்பது...

இன்னும் பல காரணங்கள் உண்டு. நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு வருத்தம் இல்லை.
எனக்கு சுத்தமாகத் தெரியாது அல்லது அது தெரியாத காரணத்தினாலேயே நான் பொங்கல் பற்றி பேசக்கூடாது என்று யாரும் சொல்லலாம். அதற்கான விவாதங்கள் நம்மை (குறந்த பட்சம் என்னை) நேர்கோட்டில் இலக்கை நோக்கி இட்டுச் செல்லாது.

//தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் ஏற்படுத்தி அதனையே தமிழர் திருநாளாக கொண்டாட உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.//

என்று சொன்னதே பொங்கல் சாப்பிட்டது போல் இருக்கிறது.

அவசியம் மேற்கொள்வோம்.

உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தில் அன்பும் , வளமும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.

தயவு செய்து வணிகப் பத்திரிக்கைகள் தரும் பொங்கல் முகத்தினை உதாசீனப்படுத்தவும். அதில் இருந்து இந்த பொங்கலை மீட்டெடுக்கவே எனது முயற்சி.

அன்புடன்
கல்வெட்டு

said...

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

said...

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

கல்வெட்டு said...
//அதே இடத்தில் நான் வாழ்த்துகள் /வாழ்த்துக்கள் என்ற சந்தேகத்தியும் எழுப்பினேன்.
அது போல் பலருக்கும் தை ஒன்று புத்தாண்டா அல்லது வள்ளுவர்தினம் (வள்ளுவர் ஆண்டு தொடக்கம்) புத்தாண்டின் தொடக்கமா என்றும் சந்தேகம் உள்ளது.//

எழுத்துப் பிழைக்கும் கருத்துப் பிழைக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. மாதத்தின் முதல்நாள்தான் ஆண்டின் முதல் நாளாகவும் இருக்கமுடியும் என்பதை தாங்கள் அறியாமல் இருக்கவியலாது. எனவே தை முதல் நாள்தான் ஆண்டின் முதல்நாளும்.

//தயவு செய்து வணிகப் பத்திரிக்கைகள் தரும் பொங்கல் முகத்தினை உதாசீனப்படுத்தவும். அதில் இருந்து இந்த பொங்கலை மீட்டெடுக்கவே எனது முயற்சி.//

நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணி இது என்றே நான் கருதுகிறேன். நான் முன்பே கூறியதுபோன்று, எனினும் அவரின் தமிழர் ஒருங்கிணைப்பைப் பாராட்டும் அதே வேளை, முதலில் தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் ஏற்படுத்தி அதனையே தமிழர் திருநாளாக கொண்டாட உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கொண்டாடப்படும் முறை இஸ்லாமிய கடவுள் கொள்கைக்கு மாற்றமாக இராதபோது அதற்கான முயற்சியில் கல்வெட்டுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்.

நன்றி.