Tuesday, January 17, 2006

"புனிதப்போர் - வருகிறது குயூரோ"

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளை ஒரே ஒன்றியமாக்கி, அந்த ஒன்றியத்திற்கென்று தனி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி (இன்னும் முழுமை பெறவில்லை என்றே கருதுகிறேன்), அந்த ஒன்றியத்திற்கென்று தனி நாணயத்தை உருவாக்கி மொத்தத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற அடிப்படையில் ஒன்றிணைப்பது என்பது சுமார் 1951ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாகும். தற்போது அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது.

பெரும்பாலான உறுப்புநாடுகளால் 1997 ஆம் ஆண்டு முதல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயமான யூரோ அறிமுகப்படுத்தப்படும்போது ஒரு டாலருக்கு ஒரு யூரோ என்றிருந்து பின்னர் சரிவைக் கண்டு, இன்று ஏற்றம் பெற்று 1 யூரோ 1.20 டாலர் என்ற அளவில் உள்ளது. (இதன் பின்னணியில் இருந்தது சதாம் உசேன். இந்த யூரோ டாலர் போட்டியே சதாமின் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக்காரணம்.)

ஒவ்வொரு துறையிலும் அமெரிக்காவுடன் போட்டியிட்டுக் கொண்டு வந்த ஐரோப்பிய ஒன்றியம் தகவல் துறையிலும் போட்டியைத் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் கூகிள் மற்றும் யாஹுவுக்கு போட்டியாக தேடுதளம் ஒன்றை அது அமைக்கப் போகிறது. அதன் பெயர்தான் குயூரோ (Quaero).

இது மட்டுமின்றி அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்குப் போட்டியானதொரு செய்தி தொலைக்காட்சி சேவையையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

புத்தாண்டு செய்தியில் தமது ஆட்சியின் இந்த வருடத்தின் செயல்திட்டம் பற்றிக்கூறும்போது, இந்த தேடுதளம் பற்றி கூறிய பிரெஞ்சு அதிபர் இப்படிக் கூறுகிறார்:

'the new geography of knowledge and cultures is being drawn. Tomorrow, that which is not available online runs the risk of being invisible to the world.'

இதனை அமெரிக்காவுடனான தொழில் சார்ந்த போட்டியாக மட்டும் கருத முடியாமைக்கான காரணம், பிரெஞ்சு அதிபரின் இந்த பேச்சும், ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய வரலாறும்தான்.

ஐரோப்பிய ஒன்றியம் தோன்றக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு அரசியல்வாதியும், கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அந்த மதத்தின் புனிதர்களில் ஒருவராக கருதத்தகுந்தவராக குறிப்பிடப்படும் ராபர்ட் சுச்மான் (Robert Schuman) என்பவராவார். அந்த நேரத்தில் (இப்போதும்கூட) அமெரிக்காவில் கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும், அரசு இயந்திரம் யூதர்களின் கையில் இருந்ததை (இருப்பதை)யும் நாம் கவணிக்க வேண்டும்.

ஆக நாகரீக உலகின் புனிதப்போர் தொடங்கிவிட்டதாகவே கருதலாம்.

2 பின்னூட்டங்கள்:

said...

Azhagappan...you left the important thing..

EU has already started Galileo Project which is a replacement for American GPS (Global positioning system)

said...

பதிவுக்கு நன்றி அழகப்பன் அவர்களே..

ஏர்பஸ்ஸோடு போயிங் அழுகுணி ஆட்டம் ஆடுவதும் உலகம் பார்த்துக் கொண்டுதான் உள்ளது. புனிதப் போர் என்றதும் நம்ம கௌ-பாய் புஷ் குருசேடுன்னு சொன்னதும், இன்னொரு பக்கம் இசுலாமியப் பெயர் தாங்கிகள் ஜிஹாதுன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. இதையும் சரியாப் படிக்காம சிலபேர் எதாச்சும் உளறுனாலும் ஆச்சரியப் படவேண்டாம்