Saturday, January 21, 2006

கோட்சேவும் டோண்டுவும்

டோண்டு அவர்கள் மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும் என்ற தலைப்பில் மலர்மன்னன் என்பவர் திண்ணையில் எழுதியதை அவரின் அனுமதியுடன் தன் வலைப்பூவில் பதிந்திருந்தார். முழு கட்டுரையையும் அவர் தன்னுடைய பதிவில் பதிந்ததிலிருந்து டோண்டுவும் மலர்மன்னனின் கருத்துடன் ஒன்றிப்போகிறார் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அந்த கட்டுரைக்கு மறுப்பாக நல்லடியாரும் இறைநேசனும் தனித்தனி பதிவுகள் மூலம் பதிலளித்து இருந்தனர். அதற்கு தன் சார்பு பதில் எதையும் கொடுக்க முடியாத டோண்டு மலர்மன்னனிடமே பதில் கேட்டு அதை தனியொரு பதிவாக இட்டிருந்தார். அந்தப் பதிவில் ஏதேனும் விளக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே விஞ்சியது.

மலர்மன்னன் மற்றும் டோண்டு ஆகியோரின் வாதத்திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. (ரொம்ப புகழாதீர்கள் என்று டோண்டு சொல்வார் என்பதால் இது போதும்.) ம.ம. என்ன சொல்லவருகிறார் என்று எனக்குப் புரிந்ததை (நீல வண்ணத்தில்)எழுதுகிறேன். இதற்கு டோண்டு பதில் சொல்வார் என்பதற்காக அல்ல. அவரின் நிலையை அறிந்து கொள்வதற்காக. இந்த வாதத்தை தமிழ்மணத்தில் தொடங்கியவர் டோண்டு என்பதாலேயே கோட்சேவும் டோண்டுவும் என்று தலைப்பிட்டுள்ளேன். அவரை தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணம் இல்லை. இனி அவரின் பதிவிலிருந்து...


//நாதுராம் விநாயக கோட்ஸே இன்றைய பயங்கரவாதிகளைப் போல் ஒரு நபரைக் கொல்வதற்காகப் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியவர் அல்ல.//

யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோமோ அவரை மட்டும் கொலை செய்துவிட்டால், அவன் பயங்கரவாதியில்லை. மாறாக ஒருவரை கொலை செய்ய முனையும்போது மற்றவர்களும் இறக்க நேரிட்டால் மட்டுமே அது பயங்கரவாதம் என்று கூறுகிறார்.

//தன்னைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சிதைத்துப் போடுவார்கள் என்பது தெரிந்தே அவ்வாறு வினையாற்றினார்.//

இன்றைக்கும் தற்கொலைப்படையினர் இவ்விதமே செய்கின்றனர். தீவிரவாதிகளும் தாங்கள் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டால் தங்கள் நிலை சின்னாபின்னமாகிப் போகும் என்று அறிந்தே தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் அதற்காக அவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.

//காந்திஜியைச் சுட்டுக் கொலை செய்த சமயத்தில் கோட்ஸேயின் வயது முப்பத்து ஒன்பது. நன்கு ஆலோசித்து, முடிவு எடுக்கும் வயது. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திடீர் என முடிவு செய்யும் பருவமல்ல.//

ஆக நன்கு சிந்தித்து சுயமாக சிந்திக்கும் நிலையில் உள்ள ஒருவன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அது தவறில்லை என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் பெரும்பான்மையோரும் திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் செயல்படுகின்றனர்.

//அவர் மூர்க்கத்தனமான வெறி¤யூட்டப்படும், மூளைச் சலவை செய்யப்படும் மதரஸாக்களில் இளமை முதல் பயின்றவருமல்ல. மேலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். பெரிய படிப்பு ஏதும் படிக்காவிடினும் தனது தரப்பு நியாயத்தைத் தௌ¤வான ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்து நீதிபதியை வியக்கச் செய்தவர்.//

எந்த கருத்தைச் சொல்லவேண்டுமோ அதை அங்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். அவர் மதரஸாக்களில் பயின்ற முஸ்லிமாக இருக்கவில்லை. மதரஸாக்களில் பயின்றோர்தான் தீவிரவாதிகள். காந்தியைக் கொன்றவர், கோட்சேயாக இல்லாமல் இஸ்மாயீலாக இருந்தால் சந்தேகமற அவர் தீவிரவாதி. நீதிமன்றத்தால் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவர் தீவிரவாதிதான். காரணம் இஸ்மாயீல் என்னும் பெயருடையவர் கண்டிப்பாக மதரஸாவில் பயின்றிருப்பார். அதுமட்டுமின்றி கோட்சேக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத்தெரியும். இஸ்மாயீலாக இருந்தால் அதற்கு வாய்ப்பே இல்லை. (ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக, அவர்களுடைய மொழியையும் வெறுத்த முட்டாள்களல்லவா?) எனவே கோட்சே செய்தது தவறு இல்லை.

//1947 ஆகஸ்டு 15 உண்மையான சுதந்திர நாள் அல்ல. டொமினியன் அந்தஸ்து தரப்பட்ட தினம்தான் அது.//

ஆமாம். அது உண்மையான சுதந்திர நாள் அல்ல. காரணம் ஆங்கிலேயர்கள் சங்பரிவாரத்திடம் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைக்கவில்லை. என்று இந்தியா இந்து ராஷ்டிரம் என்று பிரகடணப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர நாள்.

//அவற்றையே திருப்பிச் சொல்வது ஈ.வே.ரா. அவர்கள் கற்றுத் தந்த சுய மரியாதைக்கே இழுக்கு.//

ஈ.வெ.ரா. கற்றுத் தந்த சுயமரியாதையை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை. காரணம் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று எங்களின் வேதம் கூறிவிட்டது. எங்களைவிட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மட்டுமே ஈ.வெ.ரா.வின் சுயமரியாதையை பின்பற்ற வேண்டும். சுயமரியாதை என்றால் என்ன என்றெல்லாம் கேட்கக் கூடாது. எங்களுக்குத் தேவைப்படும்போது கூறுவோம். சரி என்று சொல்லவேண்டும். குலத்தொழிலையே கட்டி அழு என்போம். சரி என்று தலையாட்ட வேண்டும். தனியாக டீக்கடை வைத்துக் குடி என்போம். மறு பேச்சு பேசக் கூடாது. சுயமரியாதை என்றால் பொருள் தெரியாத சில வெகுளிகள் இதனையும் சரி என்பர்.

//காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும்.//

பார்ப்பணர்களின் செயல்களுக்கு மட்டுமே ஆழமான நோக்கமெல்லாம் இருக்கும். ஈ.வெ.ரா. பூணுலை அறுத்ததெற்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. ஆர்யர்கள் வந்தேறிகள் என்று சொன்னதெல்லாம் ஆழமான நோக்கம் கொண்டது இல்லை. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தாலிபான்களுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. இராக்கின் மண்ணின் மைந்தர்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கோட்சே போன்று அமெரிக்கப் படையினரை மட்டுமே குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தினாலும் அவர்களுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாகத் தொடரும் தங்கள் மீதான வந்தேறி இஸ்ரேலியர்களுக்கு எதிர்வினையாக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனப் போராளிகளுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. புலிகள் தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தாக்குதல் நடத்துவதெற்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. (குறிப்பு: ஆழமான நோக்கம் என்றால் மனுதர்மத்தை நிலை நாட்டுவதுதான்)

//இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது.//

நான் என்ன சொல்ல வருகினேன்றால், காந்தியார் கொல்லப்பட்டது நியாயமில்லைதான். ஆனால் கோட்சேவின் பக்கம் நியாயம் இருக்கிறது. கோட்சே ஒரு கொள்கைவாதி. மாறாக காந்தியார் சுயநலவாதி. தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதிலேயே அவர் முழு கவனமுடையவராக இருந்தார். அதற்காக அவர் ஆங்கிலேயர்கள் தரும் புள்ளிவிவரங்களின்படி செயல்படும் மூளையற்றவராக இருந்தார் என்பதுதான் என்னுடைய வாதம்.

//இப்போது மறுபடியும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவே ஓரிடத்தில் கூறியபடி மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். அவர் கூறுவதை பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்கள் தெரிய வரும்.//

எனவே டோண்டுவாகிய நான் கூறுவதெல்லாம், காந்தியாரை கொலை செய்த கோட்சேயை கொலைகாரன் என்று கூறக்கூடாது. இதுவரை ம.ம. அவர்கள் கூறியபடி காந்தியார் சுயநலத்திற்காகவே செயல்பட்டு, பிராமணர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள சங்பரிவார் இயக்கங்களின் கையில் அரசு அதிகாரம் போய்ச் சேருவதை தடைசெய்தார். எனவே காந்தியாரை தேசத்தந்தை என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக மிகவும் உயர்ந்த ஜாதியாகிய பிராமணர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு தூக்கு மேடை ஏறிய கோட்சேயை தியாகி என்றுதான் நான் கூறுவேன். மீண்டும் சொல்கிறேன். நான் பிராமணன். மற்றவர்களைப் போன்று என் பிராமண அடையாளத்தை வெளிக்காட்ட நான் தயங்கமாட்டேன்.

10 பின்னூட்டங்கள்:

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஐயா அழகப்பன்,

நல்ல வேளை கோட்சே தான் தேசத் தந்தை என்று சொல்லாமல் விட்டார்களே!.

'ஆழமான நோக்கம்' உங்களுக்கு ஸ்ரீமான் டோண்டுவின் பெண் கற்பு நிலைப் புகழ் பதிவுகள் படித்து இருந்தால் தெரிந்திருக்கும்.

said...

TO WHMSOEVER IT MAY CONCERN:

Friends, please verify from dondu
and inform me:

wheeher there was any trade partnership between mohandoss and nathuram and whether there was any misunderstanding between the in sharing the profit?

whether mohandoss provoked nathuram by way of tighetening his dhoti or shawl or fixing his spects which might have infuriated nathram?

dondu will definitely have certain historical evidences......are not they the creators of history!

GODSEISM WILL NEVER VANISH

Anonymous said...

//இதற்கு டோண்டு பதில் சொல்வார் என்பதற்காக அல்ல. அவரின் நிலையை அறிந்து கொள்வதற்காக. //

அவரின் (ஆழ்ந்த நோக்கமுடைய!) நிலையை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்:

---->>> "அவாள்களின்" திரிபு நடவடிக்கைகளுக்கு மீண்டுமொரு உதாரணம் மேலே சகோதரர்(அவாள்களின் வர்ணாசிரம கொள்கைகளில் "மற்றவர்கள்", "அவாள்களை" இவ்வாறு அழைப்பதனால் ஏதாவது தீட்டு படுமோ என்னமோ?) டோண்டு அவர்கள் நான் வைத்த கேள்விக்கு பதில் கூறிய விதம்.

நான் வைத்த கேள்வி:

* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?

என் கேள்வியை அவர் மாற்றிய விதம்:

அற்புத மனிதராம் இறை நேசன் அவர்கள் இப்போது 'பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு' (ரொம்பத்தான் புகழுகிறீங்க சார்-இது நான் இங்கு கூறுவது) அவர்களிடம்
எழுப்பும் ஒரே ஒரு கேள்வி:

"* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

உங்கள் ஆசையைக் கெடுப்பானேன் கோட்ஸே கையில் இஸ்மாயில் என்றெல்லாம் பச்சை குத்திக் கொண்டதாக சம்பவ இடத்தில் இல்லாத கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் கூறுவதை ஒத்துக்கொள்வதை விட அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவாக்கிய கல்யாணத்தைத்தானே நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? மிக்க நன்றி.

இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவில் போடுவதை விட காந்தியும் கோட்ஸேயும் என்ற என் பதிவிலேயே நகலிட்டு விடுகிறேன். பார்க்க:

க்ட்ட்ப்://டொன்டு.ப்லொக்ச்பொட்.cஒம்/2006/01/ப்லொக்-பொச்ட்_15.க்ட்ம்ல்

என் நண்பர்கள் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்.



நான் வைத்த கேள்வியை தனக்கு சாதகமாக மாற்றி பதிலிட்டது மட்டுமன்றி அதனையே தன்னுடைய பதிவிலும் வைப்பாராம் ஆதாரமாக!

"இவாள்களின்" ஆதாரங்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதனையும், இவாள்கள் வைக்கும் வாதங்கள் எவ்வளவு நம்பகத்தன்மையுடையன என்பதனையும் இதிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

அவருடைய நண்பர்கள் பார்த்தால் சந்தோசப் படுவார்களாம். எதைப் பார்த்து? அவருடைய "திரிக்கும்" மதியூகத்தைப்(!) பார்த்தா? <<<------


மேலே கண்டது என் பதிவில் நான் கேட்ட ஒரு கேள்விக்கு மதியூகி(!) டோண்டு அவர்கள் கேள்வியை வளைத்தொடித்து தனக்கு சாதகமாக பதிலளித்ததும் அதனை நான் சுட்டிக் காட்டியதும். இது வரை அதற்கு பதிலில்லை.

இப்படிப்பட்ட "அற்புதமான" மனிதர் டோண்டுவிடமிருந்தா அவர் நிலையை அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள். நடக்கிற காரியமா அது.

நீங்கள் அவர் கல்லூரியில் படிக்காதவர் போலிருக்கிறது. இல்லையெனில் இதற்கு முன் இப்னு பஷீர், நல்லடியார், ஸலாகுத்தீன் போன்றவர்களுக்கு பிரியாணிப் போட்டு விஷயத்தை திசை திருப்ப முயன்றது போன்று ஏதாவது வார்த்தை விலையாட்டில் ஈடுபட்டிருப்பார். பாவம் வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என நினக்கிறேன்.

கடைசி அஸ்திரமாக உங்களுக்கு "அற்புத மனிதர்" பட்டம் அவரிடமிருந்து சீக்கிரமே எதிர் பார்க்கலாம்.

அன்புடன்
இறைநேசன்.

said...

குறைந்த பட்சம் இஸ்மாயில் என்று கோட்ஸே தன் கையில் பச்சை குத்தியிருந்ததாக விட்ட கதை பொய் என்று ஆகிவிட்டதல்லவா. அதை பற்றி நீங்கள் இப்போது மேலே பேசாததே போதும், நான் கூறியதில் விஷயம் இருக்கிறதென்று எனக் காட்ட. இல்லை இதைப் போல ஏதேனும் வேறு கதை வைத்திருக்கிறீர்களா?

"அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?"
கல்யாணம் காந்தி கொலையை நேரில் கண்டவர் என்ற முறையில் அவர் ஹே ராம் பற்றிக் கூறியதையும், இஸ்மாயில் பற்றிக் கூறாததையும் கணக்கில் கொள்ளலாமே தவிர சங் பரிவார் சதி செய்ததா இல்லையா என்பது சம்பந்தமான விசாரணைகளை பற்றி அவரிடம் நேரிடையானத் தகவல் இருக்கும் என நம்ப முடியாது. அது பற்றி அதிக பட்சம் அவரதது கருத்தைத்தான் அவரால் கூற முடியும். தர்க்க சாஸ்திரத்தை பற்றி நான் எழுதிய என் பதிவை பார்த்து விட்டுப் பேசுங்கள். நேரிடையாக அவர் பார்த்தது பர்றி அவர் கூறுவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மற்றப்படி அவர் அனுமானங்களுக்கு அவர் தகுந்த சாட்சியமளிக்க வேண்டும்.

நீல வண்ணத்தில் நான் என்ன புரிந்து கொண்டேன் என்று நீங்கள் எழுதிய தமாஷையும் ரசித்தேன். மற்றப்படி நீங்கள் நான் கூறியோ அல்லது நான் நீங்கள் கூறியோ எதையும் ஏற்கும் நிலையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆகவேதான் பின்னூட்டமிடத் தயங்கினேன்.

இப்பின்னூட்டத்தையும் என் காந்தி கோட்ஸே இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

"சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம். ரகசியமாக நடந்த காந்திஜி கொலை வழக்கு விசாரணை முடிவில், கோட்ஸேயின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்த நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

"அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜூரர் முறைத் தீர்ப்பு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில் குற்றம் சாப்பட்டிருப்பவரை நான் நிரபராதியென விடுதலை செய்யவேண்டியிருக்கும்'' என்பதுதான்!

இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகளே. கற்பனை அல்ல. பத்திரிகைகளுக்கு அன்று இதனை வெளியிட அனுமதி தரப்படவில்லை. ஆனால் இன்று நீதிமன்றப் பதிவாளரிடம் அனுமதி பெற்று ஆய்வுக்காக எனக்கூறி சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியுள்ள சரித்திர பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இது எளிதாக முடியும்.

வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா?

இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது. காந்திஜி கொலை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகிவிட்டிருக்கிற ஒரு சரித்திர நிகழ்வு. உணர்ச்சி வசப்படாமல் ஆராயக் கூடிய சூழல் உருவாகிவிட்டிருக்கிற தருணம் இது. சலனப்படாமல் அந்த நி¤கழ்வை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விவரங்களைப் பதிவு செய்வதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி, ஓட்டுகளுக்காக அலையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் போல மதவெறி, மிருகத்தனம் என்றெல்லாம் மனம் போன போக்கில் ஏதும் சொல்லிக் கொண்டிருக்கலாகாது."

மேலே இருப்பது நான் இட்ட காந்தி கோட்ஸே இரண்டாம் பாகப் பதிவில் மலர் மன்னன் அவர்கள் குறிப்பிட்டது. அவர் கோர்ட் ஆவணங்கள் சார்ந்து கூறுகிறார்.

காந்தி கோட்ஸே முதல் பாகத்தில் மலர் மன்னன் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுவும் கோர்ட் ஆவணங்கள் சார்ந்துதான் என்பதையும் நினைவில் வைக்கவும்.

"சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது )."

இப்பின்னூட்டத்தையும் என் காந்தி கோட்ஸே இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

திரு.கல்யாணம் அவர்கள் காந்தியின் "மரணத்தருவாயில் காந்தி என்ன சொன்னார் என்பதை நான் கேட்கவில்லை அல்லது நினைவில் இல்லை" என்றே சொல்கிறார்.

ஆனால் மலர் மன்னனிடம் மட்டும் காந்தி ஹே ராம்! என்று சொல்லவில்லை என்றதாக கதைத்திருக்கிறார்.

ஐம்பதைந்து ஆண்டுகாலம் இவ்விபரத்தைச் சொல்லாமல், திரு கல்யாணம் அவர்கள் காந்தியின் புத்தகங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் இலண்டனின் ஏலம் விட முனைந்தபோது, இந்திய அரசாங்கம் தடுத்து பறிமுதல் செய்த பிறகு மேற்கண்டவாறு சொல்வதற்கு " அதன் மூலம் பயன் பெறுபவர்களால் நன்கு கவனிக்கப் பட்டிருக்க வேண்டும்" என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

said...

Mr. Kalyanam said of the 450 documents, including handwritten drafts of letters he had kept after typing up their contents for Gandhi to sign. But after meeting with officials and the press, the ex-aide recently ordered the Nov. 14 auction stopped until further notice. Mr. Kalyanam, however, feels some compensation is due him, noting that Sotheby's had expected about $1.5 million in proceeds.

http://www.asiaweek.com/asiaweek/96/1115/ed1.html

said...

இப்பதிவின் மூலம், டோண்டு தன்னை வெளிப்படுத்த்தி இருக்கிறார். அவருடைய மற்ற பதிவுகளில் இருப்பவை எல்லாம் சுதந்திரம், உரிமை என்பனவற்றின் தவறுதலான புரிதல்களே என்று தான் எல்லோரும் நினைப்பர். ஆனால், மம வின் புனைசுருட்டை எடுத்து எல்லோர் பார்வைக்கும் வைத்து விட்டு பின்னர், அது தன் கருத்தல்ல, தான் அதை நியாயப்படுத்தவில்லை என்றெல்லாம் கதை கட்டிக் கொண்டிருக்கின்றார் டோண்டு. இந்த செயலில், அவரைப் போலவே பலரும் இருக்க்கின்றனர். தங்களுக்கு எந்த கருத்தும் இல்லாத மாதிரியும், தங்களுக்குப் படிக்க கிடைத்ததைப் பிறருக்குப் படிக்கக் கொடுப்பதாகவும் பணிவு காட்டும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய நண்பர்களில் ஒருவராக டோஒண்டுவையும் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

said...

dondu(#4800161) said...
"சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம்...
வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா? இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது.//

எல்லாக் கொலைகளுக்குமே நோக்கம் இருக்கிறது. நோக்கமே இல்லாமல் கொலை நடப்பது இல்லை. கொலை மட்டுமின்றி எந்த ஒரு செயல் நடந்தாலும் அவை நல்லவை என்றாலும் தீயவை என்றாலும் நோக்கம் இன்றி எதுவும் நடப்பது - நடத்தப்படுவது இல்லை. அந்த நோக்கம் ஒருவருக்கு நல்லதாகத் தோன்றலாம் மற்றொருவதுக்கு தீயதாகத் தோன்றலாம். எனவே கோட்சேயின் செயலுக்கு ஆழமான நோக்கம் உண்டு என்று நீங்கள் கூறியதன் மூலம் அவனின் செயலுக்கு மட்டுமே ஆழமான நோக்கம் உண்டு என்று நீங்கள் கருதுவதாகவே எண்ணவேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி ஆழமான நோக்கம் உண்டு என்று கூறிய நீங்கள் அந்த நோக்கம் நியாயமானது என்றும் கூறியுள்ளீர்கள். எனவே ஆழமான நோக்கத்துடன் செயலாற்றிய கோட்சேவின் செயல் நியாயமானது என்று நீங்கள் கருதுவதாகவே புத்தியுள்ள எவரும் எண்ணுவர்.

நேரிடையாக காந்தியைக் கொன்றது நியாயமானது என்று கூறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்திலேயே மிகவும் சாமர்த்தியமாக கோட்சேவின் செயலுக்கு ஆழமான நோக்கம் உண்டு என்று கூறுகிறீர்கள். இதற்கு வலுவான எதிர்ப்பு வராதபோது அல்லது எதிர்ப்பு குறையத் தொடங்கும்போது மீண்டும் களமிறங்கி கோட்சேவின் செயல் நியாயமானதுதான் என்று கூறுவீர்கள். வரலாற்றைப் புரட்டுவோர் செய்யும் சூழ்ச்சியான நடைமுறை இதுதான்.

நன்றி நண்பன்.