Friday, January 27, 2006

இருவுள் (இரயில்) எரிப்பும் பா.ஜ.க.வும்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுக்கக் கோரி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கியது. பாதயாத்திரையை தொடங்கி வைத்து பா.ஜ.க. மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடக்காது. ரயில் எரிப்பு போராட்டம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

தேசியம் பற்றி வாய்கிழிய பேசும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரின் பேச்சு மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அறப்போராட்டம், நீதிமன்றத்தை நாடுதல் என்று எத்தனையோ சாத்வீகமான முறைகளில் பேராடாமல் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோம் என்று கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றதினால் மட்டும் தீவிரவாத செயலை நியாயப்படுத்த முடியாது.

இதனையே தனித்தமிழ்நாடு கோருவோர் கூறியிருந்தால் ''தீவிரவாதிகள் அரசுக்கு மிரட்டல்'' என்று எழுதும் ஊடகங்கள் இதனை முக்கியத்துவம் இல்லாத செய்தியாகக் கருதுவது மிகவும் வேதனையான ஒன்று. அதுபோன்று கருணாநிதியோ அல்லது இராமதாசோ இப்படிக் கூறியிருந்தால் தேசப்பத்திரிக்கைளும் இங்கு வலைப்பதியும் தேசபக்தி பதிவர்களும் எப்படியெல்லாம் வெகுண்டெழுந்து பதிவிட்டிருப்பார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தேசபக்திக்கு ஜாதி அடிப்படையையே அளவாகக் கொண்டுள்ளனர் என்பது தெளிவு.

மேலும் அவர் பேசும்போது, இங்கு நடக்கும் பாத யாத்திரை போராட்டம் ஆந்திர மாநில மக்களுக்கும், ஆந்திர அரசுக்கும் எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயக்கூலிகள் வாழ்க்கையில் இருள் வரக்கூடாது என்பதற்காக நடத்தப்படும் பாத யாத்திரையாகும் என்று கூறினார்.

ஆந்திர அரசு தமிழக்தின் உரிமையைத் தடுக்கிறது எனும் நிலை வரும்போது அந்த அரசுக்கு எதிராகத்தானே பேராடவேண்டும். ஆனால் அவர் ஆந்திர அரசை எதிர்க்வில்லை. பின் எதற்காகப் பேராடுகிறார் என்பதை பின்வரும் அவருடைய பேச்சு விளக்குகிறது.

மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க. கூட்டணி கட்சிகள், பாலாற்று பிரச்சனையை பிரதமரிடம் சொல்லி தடுத்திருக்கலாமே? ஏன் தடுத்து நிறுத்தவில்லை? நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் பாலாற்று அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்போம். 7 மாவட்ட மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

எதிர்வரும் தேர்தலை மனதிற்கொண்டுதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தேர்தலில் பிரச்சாரத்திற்கு இந்த வீரவசனம் பயன்படும் என்பதை மனதில் இருத்திதான் இவ்வாறு பேசியுள்ளார். ஒரு மாநிலத்தின் பிரச்சாரத்திற்காக இரயிலை எரிப்போம் என்பவர்கள் இந்தியா முழுவதும் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவே கோத்ரா இரயில் எரிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்ற எண்ணத்திற்கே வரவேண்டியுள்ளது.

திரு. டோண்டு அவர்கள் காந்தியைக் கொன்றதில் கோட்சேக்கு ஆழமான உள்நோக்கம் உண்டு என்று கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

1 பின்னூட்டங்கள்:

said...

//ரயில் மறியல் போராட்டம் நடக்காது. ரயில் எரிப்பு போராட்டம் நடக்கும் //
மனிதர்களையே உயிரோடு எரித்தவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.

காந்திஜி என்ற நிராயுத பாணியான முதியவரை சற்றும் இரக்கமின்றித் திட்டம் தீட்டிக் கொள்கைக்காகக் கொன்ற கொடியவர்கள் நிறைந்திருக்கும் கட்சியிடம் இருந்து வரும் இம்மாதிரி மிரட்டல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கோட்சே இஸ்மாயில் எனப் பச்சை குத்தி காந்தியைக் கொன்றவன் முஸ்லிம் என்று சொல்லி அதிலும் ஆதாயம் தேட முடியவில்லையே என்பது தான் இந்த நேசமான சங்கத்தின் ஆதங்கம்.

இன்றும் தேசப்பிதாவைக் கொன்ற கோட்சேயை ஏதோ தியாகி என்று நிறுவ முனைபவர்களைப் பார்த்து தான் இந்தியாவின் பேச்சு சுதந்திரம் தெரிகிறது.