Sunday, January 15, 2006

தமிழ்மணமும் பட்டையும்

தமிழ் புத்தாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட சேவையுடன் தமிழ்மணம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்காக காசி அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் நன்றி.

பழைய பதிப்பில் இடுகைகள் தானாகத் திரட்டப்பட்டு வந்தது. இப்போது இடுபவரே சேர்க்கும் முகமாக ''கருவிப்பட்டை'' நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் செயல்முறை புரியாமல் பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் உதவி பகுதியை சரியாகப் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களுக்காக உதவி / தகவல் பகுதியிலிருந்து....

வழமையான தமிழ்மணம் போல் அல்லாமல் இந்தப் புதிய பதிப்பு தானாக இடுகைகளைத் திரட்டுவதில்லை. இரு வழிகளில் நீங்களாக இடுகைகளை சேர்க்கலாம். இதனால் எந்தக் காத்திருப்புமமின்றி, உடனடியாக திரட்டிக்கு உங்கள் புதிய இடுகை பற்றிய தகவல் வந்து சேரும்.

முதல்வழி, 'பதிவு' கருவிப்பட்டை மூலம். உதாரணம் வேண்டுவோர், பத்ரி, கோபி, தங்கமணி ஆகியோருடையதைப் பார்க்கலாம். இப்போது நீங்கள் காணும் பட்டை, வாசகர் பட்டையாகும். சரியாக நிறுவப்பட்டிந்தால் ஒரு புது இடுகையை நீங்கள் எழுதியவுடன், அந்தப் புது இடுகையைத் திறந்ததும், இதே வாசகர் பட்டையினிடத்தில், ஒரு பதிவர் பட்டை கிடைக்கும். அதில் மேலதிகமாக இரு அம்சங்கள் உண்டு.\\முதலில், அங்கே தெரியும் ‘அனுப்பு’ என்ற பொத்தான். இதை அழுத்துவதன்மூலம், உங்கள் புது இடுகை(கள்) தமிழ்மணத்தில் (நந்தவனத்தில்) சேர்க்கப்படுகின்றன. அதே பட்டையில் உள்ள தெரிவுக்கட்டங்களை பயன்படுத்தி, பட்டையில் நீங்கள் விரும்பும் வசதிகளைக் காட்டவோ, மறைக்கவோ செய்யலாம். உதாரணமாக, வாசகர் பரிந்துரை வசதி வேண்டாம் என்று எண்ணுபவர், அதற்குக்கீழ் உள்ள கட்டத்தை தெரிவு விலக்குவதன்மூலம் இதைச் செய்ய முடியும். அல்லாமல் நீங்கள் தமிழ்மணத்தின் பெயரே எங்கும் காட்டக்கூடாது என்று விரும்பும் நன்பரானால் முழுக் கருவிப்பட்டையையுமே மறைக்கலாம்.

இரண்டாவது வழி, டெக்னொரட்டி போல நீங்களாக தமிழ்மணம் (நந்தவனம்) முகப்புக்கு வந்து உங்கள் பதிவின் சுட்டியை (இடுகையின் சுட்டி அல்ல) இடுவதன்மூலமும் உங்கள் புதிய இடுகையை சேர்க்கலாம். யாஹூ வலைப்பதிவுகள் போன்ற பதிவருக்கு முழு உரிமை அளிக்காத அமைப்புகள் வழியாக வலைப்பதிவோர், அல்லது கருவிப்பட்டை நிறுவ இயலாதோர், இதைச் செய்யலாம்.

இரு வழிகளிலுமே, சேர்க்கைக்குப்பின், உடனே, எந்த தலைப்பில் இந்த இடுகை(களைச்) சேர்க்க வேண்டும் எனச் சொல்ல ஒரு வழி இருக்கும். அங்கே உங்கள் தேர்வை சொல்லலாம்.

குறிப்பு: தங்கள் பதிவுகளை பதிப்பித்தவுடன், அந்த குறிப்பிட்ட இடுகையைத் திறந்தவுடன் இவ்வாறு தெரியும். அதில் உள்ள அனுப்பு பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் இடுகை தமிழ்மணத்தில் திரட்டப்படும்.

6 பின்னூட்டங்கள்:

said...

I'd like read your web-blog but I don't know your language...sorry..

said...

அழகப்பன், எனது templateஇல் காசி helpஇல் சொன்னது போல் எல்லாம் சரியாகவே செய்துள்ளேன். அந்தப் பட்டை மட்டும் என் கண்களுக்குத் தெரியவில்லை. உங்கள் பதிவிலுள்ள பட்டையும் தெரியவில்லை. browser, என் கணணி, என் கண் மூன்றில் ஒன்றில் எதோ தவறு இருக்கிறது. கடைசியில் firefox ஐயும் தரையிறக்கினேன், அதிலும் தெரியவில்லை!!

said...

kanags,
put a test post and click http://www.thamizmanam.com.

said...

நன்றி உஷா, கடைசித் தஞ்சம் சோதனைப் பதிவு தான்.

said...

சிறிதரன்,
உங்கள் பிரச்சினைதான் எனக்கும்.
என் வலைப்பதிவிலுள்ள பட்டை பிறர் கண்களுக்குத் தெரிகிறது, ஆனால் எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களின் பதிவிலுள்ள பட்டைகளும் தெரியவில்லை. இதற்கும் தமிழ்மணத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையென்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இது எங்களது கணிணியில் இயங்கும் உலாவியிலுள்ள ஏதோவொரு சிக்கல். சில கணிணிகளில் மட்டும் தெரியாமல் விடுவதற்கு என்ன காரணமென்று தெரிந்தவர்கள் யாராவது கூறலாம். இப்போதைக்கு இப்பட்டை தெரியவேண்டுமென்ற அவசியமேதுமில்லையென்பதால் எனக்குப் பிரச்சினையில்லை.

உசா சொன்னதுபோல் பரிசோதனைப்பதிவு போட்டு தமிழ்மணத்தைக் களிக் பண்ணி ஆகப்போவது ஏதுமில்லை.

said...

தமிழ்கோமணம் திறந்த காசிக்கும் பட்டையை எப்படி அடிப்பது என விளக்கம் சொன்ன அழகப்பன் அவர்களுக்கும் நன்றி.