Saturday, February 04, 2006

கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும்

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை ஒன்றில் முஹம்மது நபி அவர்களை கேலிச் சித்திரம் வரைந்திருந்தனர். அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கோரினர். அந்த பத்திரிக்கை வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

அக்டோபர் 20ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து புகார் செய்தனர். இதனாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாள் நார்வே பத்திரிக்கையொன்று அந்த கேலிச் சித்திரங்களை மறுபதிப்பு செய்தது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட சவூதி அரசு ஜனவரி 26ஆம் நாள் டென்மார்க் நாட்டுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

இந்நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து டென்மார்க்கின் பொருள்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்கின்றனர். இதனை அறிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகக் கழக தலைவர் பீட்டர் மண்டெல்சன் 'நார்வே-டென்மார்க் பொருட்களை புறக்கணிப்பது, ஐரோப்பிய யூனியனின் பொருட்களை புறக்கணிப்பதற்குச் சமமானது; சவூதி அரசாங்கம் இப்புறக்கணிப்பை கைவிடவில்லையென்றால், உலக வர்த்தக சபையில் முறையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனவரி 30ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய சிலர் பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு சென்று, மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினர்.

ஜனவரி 31ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை மன்னிப்புக் கோரியது.

பிப்ரவரி 1ஆம் நாள் பிரான்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டுப் பத்திரிக்கைகள் சித்திரத்தை மறுபதிப்புச் செய்தன.

இதன் பிறகே பிப்ரவரி 3ஆம் நாள் இந்தோனேசியா, இராக், பாலஸ்தீன், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும், இந்தோனேசியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் தாக்கப்படுகிறது. (இதை நான் ஆதரிப்பதாகக் கருதவேண்டாம்).

நன்றி: பி.பி.சி. அரப் நியூஸ்

இதைவிட சாத்வீகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா எனத் தெரியவில்லை. தங்களுக்குப் பிடித்த கருத்தைச் சொல்ல தங்களுக்கு உரிமை உண்டு என வாதிடுவோர், தங்களுக்குப் பிடிக்காதவர்களின் பொருள்களின் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற கருத்தை ஏற்க மறுப்பது ஏனோ?

இது குறித்து வலைப்பூக்களில் பதியப்பட்ட பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலிருந்தும் பல காழ்ப்புணர்வுகள்.

நிலா கூறும்போது....

//கார்டூன்கள் வெளியிட்டது தவறு என்று வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு களேபரம் தேவையா என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும்? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நிரூபிக்க முயலலாமே?//

நிலா அவர்களே மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை வரிசையாகப் படித்துப் பார்க்கக் கோருகிறேன்.

இதுகுறித்து டோண்டு அவர்கள்....

//ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.//

என் மதத்திற்கு அப்பொழுது நேர்ந்த கொடுமை இப்பொழுது உன் மதத்திற்கு நேர்ந்துள்ளது என்று கூறுகிறார். அவருக்கு நம்முடைய கேள்வி.... அந்த ஓவியம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாக சித்தரித்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரையாவாது அவரால் அடையாளம் காட்ட முடியுமா?
மாறாக அல்லாஹ் குர்ஆனில், மற்றவர்கள் தெய்வமென வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள் என்று கூறியுள்ளான்.

//கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார்.// என்று கூறும் டோண்டு அவர்கள் இந்துக்கள் அந்தப் படத்திற்கு ஆடை அணிவிக்குமுன்பு ஆடை அணிவித்த கராத்தே ஹுசைனி அவர்கள் முஸ்லிம் என்பதை அறியாதவரா? ஏன் இந்த காழ்ப்புணர்வு?

பிற்காலங்களில் தோன்றிய தேசியமும், தேசியத்தின் அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டியவை என்று ஒத்துக் கொள்கிறோம். புஷ் தன்னுடைய நாய்க்குட்டிக்கு இந்தியா என்று பெயர் வைத்தால் கொதித்தெழுகிறோம். நாமே உருவாக்கிய நம்முடைய தேசியக் கொடி எரிக்கப்பட்டால் உணர்ச்சி வசப்படுகிறோம். அவனுடைய தனிப்பட்ட உரிமை என்று எவருமே, எந்நாட்டவருமே கருதுவதில்லை. ஆனால் தேசம் கடந்து, மொழி கடந்து உலக முஸ்லிம்களால் உயிரினும் மேலானவராகக் கருதப்படும் முஹம்மது நபியவர்களைக் கேவலம் செய்தால் பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் கூறினால் இது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு என்னவாக இருக்கும்?

18 பின்னூட்டங்கள்:

said...

அது என்னவோ தெரியவில்லை, முஸ்லீம்களின் எந்த செயலைக் குறித்தாயினும் லேசாக புருவம் உயர்த்தினால் கூட உடனே காழ்ப்புணர்வு என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். நான் யாரையும் சார்ந்து பேசவில்லையே? இதை எந்த நாட்டவர்கள் செய்திருந்தாலும், எந்த மதத்தினர் செய்திருந்தாலும் நான் இதைத்தான் கேட்டிருப்பேன். ஏன் எல்லோரையும் எல்லாவற்றையும் வண்ணக் கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்? ஏன் எபோதும் இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கும் குறை கண்டுபிடிப்பதற்குமே ஊடகங்களும் மக்களும் முயல்கிறார்கள் என்று நினைக்கவேண்டும்?

காசாவில் துப்பாக்கி ஏந்திய போராளிகள் செய்ததும் இந்தோநேசியாவில் நடந்த கொடி எரிப்புக் கலாட்டாவும் சாத்வீகமானது என்று நீங்கள் கருதினால் இங்கே பேசுவதற்கொன்றுமில்லை. தவிர, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் - இந்தப் பிரச்சனைக்கென்று இன்னொரு குண்டு வெடிப்பு நடக்காதென்று உங்களால் உத்தரவாதம் தர இயலுமா? அப்படியே நடக்காவிட்டாலும், நடக்குமென்ற பயத்தை உலகமக்கள் மனதில் விதைத்தது சாத்வீகமானதுதானா?

said...

இதையும் கொஞ்சம் பாருங்கள்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_04.html

said...

நிலா, நீங்கள் எழுப்பிய கேள்வி 'எதிர்ப்பு தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டும்?'

இந்தப் பிரச்சனை ஆரம்பித்தவுடனேயே முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கிவிட்டதாகவே தாங்கள் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இப்படி கேள்வி எழுப்பிய நீங்கள் இந்தப் பிரச்சனையின் வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்றே நான் கருதவேண்டியுள்ளது. அதனாலேயே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளைப் படிக்குமாறு கோரினேன். கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் முதல் அமைதியான முறையிலேயே எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். ஆனால் நீங்களோ பிரச்சனை நேற்று துவங்கியது போன்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு பிரச்சனையின் வரலாற்றை நோக்காமல் மேம்போக்காக கருத்து சொல்வது காழ்ப்புணர்வன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

காசாவில் துப்பாக்கி ஏந்திய போராளிகள் செய்ததும், இந்தோனேசியாவில் நடந்ததையும் சாத்வீகமானது என்று நான் கூறவில்லை. இதை நான் ஆதரிப்பதாகக் கருதவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளேன். அது உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.

//மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் - இந்தப் பிரச்சனைக்கென்று இன்னொரு குண்டு வெடிப்பு நடக்காதென்று உங்களால் உத்தரவாதம் தர இயலுமா? //

நாளை இவ்வாறு நடக்கலாம் என்று நீங்கள் கருதும் செயலுக்கு நான் எப்படி உத்தரவாதம் தரமுடியும்? நான் கடவுள் அல்லவே. இப்படி கூறுவதால் நான் வன்முறையை ஆதரிக்கிறேன் என்று கருதவேண்டாம்.

said...

//கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் முதல் அமைதியான முறையிலேயே எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். //
அழகப்பன்,

4 மாதங்கள் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்ததால் இப்போது நடக்கும் வன்முறைகள் சரியென்று ஆகுமா?

said...

ஐயா டோண்டு ராகவன்,

M.F.ஹுசைன், இந்துக்கள் புனிதமாக வணங்கும் சரஸ்வதியை நிர்வானமாக வரைந்ததை எந்த முஸ்லிமும் "Freedom of Expression" என்றோ அல்லது கருத்துச் சுதந்திரம் என்றோ சப்பைக் கட்டவில்லை. மாறாக இந்திய அரசு அவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

முஸ்லிம் (பெயர் தாங்கி) ஹுசைன் வரைந்தது இன்றுவரை (த/கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஐரோப்பிய பத்திரிக்கைகைகள் முஹம்மது நபியை இழிவாக வரைந்தது பற்றி உங்கள் நிலை என்ன? மேலும் ஹுசைன் அல்லாத பிறமத சிற்பிகளால் வடிக்கப்பட்ட சிற்பங்களில் இருக்கும் ஆபாசங்களைவிட அவர் வரைந்தது அசிங்கமானது என்றும் விளக்குவீர்களா?

காந்தியை, கோட்சே சுட்டுக் கொன்றதைக் கூட "கோட்சேயின் Freedom of Expression" என்பது போல் சொன்னவரல்லவா நீங்கள்!

said...

வன்முறை சரியான தீர்வு என்று யாரும் இங்கு சொல்லவில்லை.

உங்கள் பதிவைப் பார்வையிட்டேன். கருத்து சுததந்திரத்திற்கு நீங்கள் கொடுக்கும் அளவுகோல் எனக்குப் புரிகிறது. அந்த காட்சிகளை நான் பார்வையிடவில்லை. அவர்கள் அந்த தட்டிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தவறுகளை இதுவரை செய்யவில்லை. அது அவர்களின் கருத்துச் சுதந்திரம் என்று உங்களால் கருத முடியவில்லையே. நீங்களே கூறும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான பதிவாக உங்களுக்குப் படவில்லையா?

said...

அழகப்பன்,
சர்ச்சைக்குரிய கார்டூன் சொல்லும் கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?அவை முகமது நபியை இழிவு படுத்துவதாக இருந்ததால் இந்த எதிர்ப்பா? அல்லது முகமது நபியை உருவமாக வரைந்ததால் இந்த எதிர்ப்பா?

முகமது நபியிம் உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் ,புத்தங்கள் ஏற்கனவே நிறைய இருப்பதை இந்த சுட்டி படங்களோடு சொல்கிறதே?

http://www.zombietime.com/mohammed_image_archive/

said...

ஜோ,

அந்த தளத்தை நானும் பார்த்தேன். இதுவரை முஹம்மது நபியை எப்படியெல்லாம் இழிவு படுத்தி இருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. பதிலுக்கு முஸ்லிம்களால் இயேசுவையோ அல்லது மோஸசையோ இழிவுபடுத்தவில்லை.முஹம்மது நபியின் மீதான காழ்புணர்வு அவர் ஓரிறைக் கொள்கையை சொல்ல ஆரம்பித்ததிலிருந்தே இருக்கிறது.

இணைய உலகில் இதுபோன்ற சிந்தனைத் தீவிரவாதங்கள் அவ்வப்போது தலையெடுத்தபோது ஒவ்வொரு நாடும் கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள். அவர்களால் முடிந்ததெல்லாம் அத்தகைய தளங்களை அவர்கள் நாட்டு இணையத்தில் தடுப்பது மட்டுமே. உலகலாவிய குற்றங்களுக்கு இராணுவ சட்டங்களே இன்னும் இல்லாதபோழ்து சைபர் கிரைமில் தண்டிக்கப்பட இன்னும் சில காலமாகலாம்.

தற்போதைய பிரச்சினையின் தீவிரம், சம்பந்தப்பட்ட நாட்டு ஆட்சியாளர்கள் இந்த சிந்தனைத் தீவிரவாதத்திற்கு "கருத்துச் சுதந்திரம்" என்று சப்பைக் கட்டியதுதான்.

said...

//பதிலுக்கு முஸ்லிம்களால் இயேசுவையோ அல்லது மோஸசையோ இழிவுபடுத்தவில்லை.//

ஓகோ!இது வேறயே? இயேசுவும் மோசசும் இஸ்லாம் நபிகள் தானே?

உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்கு மேல் இந்த விவாதத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை.

said...

//உத்தரவாதம் தர இயலுமா? //

நிலா,

உங்கள் மீது அழுகிய முட்டை அல்லது தக்காளியை அடித்தால் நீங்கள் உணர்ச்சிவசப் படமாட்டீர்கள் என்று உத்தரவாதம் தர இயலுமா உங்களால்?

கொடித்துணி கிழிக்கப்பட்டால் கண்டிப்பவர்கள் "இதயம்" கிழிக்கப்படும்போது எங்கு சென்றார்கள்?

said...

ஜோ,

இரண்டுக்குமான எதிர்ப்புதான் இது. இதுபோன்று அவ்வப்போது வரும் பிரச்சனைகளை சாத்வீகமான முறையில் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளான காரணம் அதை மறுபதிப்பு செய்ததும், பொதுமக்கள் (அரசு அல்ல) அந்தந்த நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்ததும்தான். சம்பவம் நடந்து 4 மாதங்கள் ஆகியும் ஒரு வாரத்திற்கு முன்புவரை இது மிக கவனமாகவே கையாளப்பட்டது. ஆனால் டென்மார்க் பொருட்களைப் புறக்கணித்தது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவே அவர்களும் சேர்ந்து இதனை பெரிய பிரச்சனையாக ஆக்கினார்கள்.

said...

///பதிலுக்கு முஸ்லிம்களால் இயேசுவையோ அல்லது மோஸசையோ இழிவுபடுத்தவில்லை.//

ஓகோ!இது வேறயே? இயேசுவும் மோசசும் இஸ்லாம் நபிகள் தானே?

உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.//

ஜோ,

மதம் சார்ந்த விவாதங்களில் உங்களின் சில கருத்துக்களுடன் ஒத்துப்போகாவிட்டாலும் பெரும்பாலான கருத்துக்களுக்கு முடிந்தவரை என்நிலையை விளக்கி இருக்கிறேன். இயேசுவும் மோஸசும் எங்கள் நபிகள்தான் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை.

முஹம்மது நபியை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராக அவர்களின் நம்பிக்கையை முஸ்லிம்கள் தாக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியதைக் க்ஊடவா உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

அதென்ன எதற்கெடுத்தாலும் "விவாதிக்க விருப்பமில்லை" என்று பர்தா போட்டுக் கொள்கிறீர்கள்? ;-)

நீங்கள் கருத்துச் சொன்னதுபோலதான் நானும் என்கருத்தை சொன்னேன். தவறு இருந்தால் சுட்டிக்/குட்டிக் காட்டுங்கள்.

அன்புடன்

said...

நல்லடியார்,
நீங்கள் என்னை ஒரு கிறிஸ்தவன் என்ற கோணத்தில் பார்க்காமல் விவாதிப்பதாக தெரியவில்லை.

கிறிஸ்தவன் என்ற முறையில் நான் உங்களைப்போல் உணர்ச்சுவசப்படுவேன் என்று நினைத்தால் உங்களுக்கு வெற்றி கிட்டாது.

உங்களுடைய இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்று கேட்டால் என் பதில் இது தான்.

இயேசுவை நான் என் உயிருக்கு மேலாக நேசிக்கலாம் .ஆனால் உலகத்தில் உள்ளவர் எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்க்க மாட்டேன்.

நான் அறிந்த யாராவது இயேசுவை இழிவுபடுத்தினால் ,நான் அவரிடம் விளக்கிச் சொன்னால் ஒரு வேளை பயன் இருக்கலாம் என்று நான் நினைத்தால் விளக்கிச் சொல்லுவேன் .எனக்கு சம்பந்தம் இல்லாத யாரோ,அல்லது நிறுவனமோ அவ்வாறு செய்தால் ,"இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் .இறைவா இவர்களை மன்னியும்" என்று நினைத்து விட்டு போய்விடுவேன்.

இதனால் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க லாயக்கு இல்லையென்றோ அல்லது ,கிறிஸ்து மேல் அன்பு இல்லையென்றோ பிறர் நினைத்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன். இது தான் கிறிஸ்து எனக்கு கற்றுத் தந்தது.

said...

//உங்கள் மீது அழுகிய முட்டை அல்லது தக்காளியை அடித்தால் நீங்கள் உணர்ச்சிவசப் படமாட்டீர்கள் என்று உத்தரவாதம் தர இயலுமா உங்களால்?//


நல்லடியார்,

அப்படி உணர்ச்சிவசப்பட்டு குண்டுவைப்பதை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது உங்கள் தொனி. நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் சற்று உள்நோக்கிப் பார்ப்பது நல்லது.

உணர்ச்சிவசப்படாமலிருக்க நான் ஞானியல்ல. ஆனால் கண்டிப்பாக நான் கேலி செய்யப்படும்போது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, என்னைக் கேலி செய்தவர்களுக்குக் கூட தீங்கு செய்வது குறித்து நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன் என்று என்னால் உத்தரவாதம் தரமுடியும்.

தவிர, நான் உயிருக்குயிராக நேசிக்கும் ஒருவரோ அல்லது என் நம்பிக்கைகளோ கேலி செய்யப்பட்டதால் யாரும் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் இறங்குவார்களே ஆனால் அதை ஒரு போதும் நியாயப்படுத்திப் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எந்த நிபந்தனையுமில்லாமல், 'ஆனால்' என்று சப்பைக்கட்டு கட்டாமல் கடுமையாகக் கண்டனம் செய்கிற முதல் ஆள் நானாகத்தானிருக்கும்.

அதைச் செய்ய முஸ்லிம் சகோதரர்கள் தவறுவதுதான் எனக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருக்கிறது.

said...

//முஸ்லீம்களின் எந்த செயலைக் குறித்தாயினும் லேசாக புருவம் உயர்த்தினால் கூட உடனே காழ்ப்புணர்வு என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.//

இது நிலா என்பவர் எழுதியது

// 'இஸ்லாமை அவமதிப்பவர்களின் தலையைக் கொய்யுங்கள்'//

இது இப்பிரச்சனை குறித்து அவர் எழுதிய பதிவின் தலைப்பு..

இப்படி எழுதுவது தான் லேசாகப் புருவம் உயர்த்துவதா.. நான் நம்ப முயல்கிறேன்..

said...

நிலா,

தங்களுக்கு பிடிக்காத செயலைச் செய்தவரை வெருப்பதும் அல்லது அவர்களை தள்ளி வைப்பதும் உலக நிகழ்வுகளில் சகஜம். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான பகிஷ்கரிப்பை யாரும் குறை சொல்வதில்லை. முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கும் ஒரு தலைவரை, அவரை ஏற்காதவர் கீழ்தரமாக விமர்சிப்பதை கருத்துச் சுதந்திரம் என்று சப்பைக் கட்டுவதைக் கண்டு கொள்ளாமல் அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க அமைதியாக நடக்கும் ஊர்வலங்களை பெரிது படுத்தும் உங்கள் செயல் வியப்பாக இருக்கிறது.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், தீவிரவாதமும் வன்முறையும் ஒழிக்கப் பட வேண்டியதே. அதை முஸ்லிம்களிடம் மட்டும் எதிர் பார்க்காமல், அனைத்து வகையான தீவிரவாதங்களும் எதிர்க்கப் பட வேண்டும் என்றால் உங்களை யாரும் காழ்புணர்வாளர் என்று சொல்லப் போவதில்லை.

said...

The fact that the editors behind the anti-Islamic images claim to be exercising free speech while refusing to address Europe's strict censorship laws regarding discussion of the Holocaust and the ongoing imprisonment of historical revisionists reveals the existence of a more sinister agenda behind the provocative cartoons.

"Agents of certain persuasion" are behind the egregious affront to Islam in order to provoke Muslims, Professor Mikael Rothstein of the University of Copenhagen told the BBC. The key "agent" is Flemming Rose, the cultural editor of JP, who commissioned cartoonists to produce the blasphemous images and then published them in Denmark's leading morning paper last September.

Cartoons are a purposeful provocation

said...

அட அட என்னமா வாதிடுகிறார்கள்..

இரானிய அதிபர் ஹோலோகாஸ்ட் பற்றிக் கருத்து சொன்னால் உலகமே திரண்டு வந்து எதிர்க்குமாம்.. அது அவருடைய கருத்துச் சுதந்திரம் இல்லையாம்.. (இதில் எனக்கு உடன்பாடா என்பது வேறு விஷயம் .. இதனை வைத்து யாரும் வேறு வழியில் விவாதத்தைத் திசை திருப்ப வேண்டாம்..)

1.3 பில்லியன் மக்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு தலைவரைப் பற்றி இழிவான கார்ர்ட்டூன்கள் பிரசுரிப்பது அதனை வேண்டுமென்றே மீண்டும் பிரசுரிப்பதும் கருத்துச் சுதந்திரமாம். வாழ்க உங்கள் கருத்துச் சுதந்திர டெஃபனிஷன்..

அதுசரி யில்லண்ட்ஸ் போஸ்டன், மேகசினட் இவை ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என எழுத இயலாது என 'கருத்துச் சுதந்திர' அறிவு சீவிகளுக்குத் தெரியுமா?