Tuesday, February 28, 2006

நன்றி - ரங்கசாமி

பாண்டிச்சேரி சட்டமன்றத்தின் இறுதி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு 13 சதவீத இடஒதுக்கீடு அளிக்க இந்த தீர்மானத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் நேரத்தில் இத்தகைய தீர்மானம் தீட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக முதல்வருக்கு வராத அக்கறை புதுவை முதல்வருக்கு வந்ததற்காக அவரை பாராட்டுகிறேன்.

தமிழக முஸ்லிம்கள் சார்பாக அவருக்கு மீண்டும் என் நன்றிகள்.

16 பின்னூட்டங்கள்:

said...

This is just a resolution.It by itself does not confer any reservation for muslims. The A.P.
High Court had struck down the reservation for Muslims in A.P.An
appeal against that is pending in
the Supreme Court.The Supreme Court has refused to stay the verdict given by A.P.High Court.So
even if Pondicherry govt. issues an
order or brings a law it will meet the same fate.

said...

நன்றி - ரவி,

//This is just a resolution.//

நானும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்றே குறிப்பிட்டுள்ளேன். சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதாக அல்ல.

முஸ்லிம்களின் கோரிக்கையை முஸ்லிம் அல்லாத ஒருவர் அதுவும் மாநில முதலமைச்சர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதற்காகவே எனது இந்த நன்றி அறிவிப்பு.

//So
even if Pondicherry govt. issues an
order or brings a law it will meet the same fate. //

ஆந்திராவில் நிகழ்ந்தது போன்று மற்ற மாநிலங்களிலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான கோரிக்கை கலைஞர் மூலம் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கலைஞர் பிரதமருக்கு எழுதிய கடித நகல் பார்க்க இங்கே சொடுக்கவும.

said...

Azhagappan sir,

Selvanuku bathil sollama, raviku mattum bathil sollitingale sir. Selvanukum enakkum serthu antha kelviku bathil solla mudincha sollunga sir.

Nanmanam Sridhar

said...

அழகப்பன்,

ravi யின் எழுத்துத் தொனி புரியவில்லையா? ரொம்ப குதிக்காதீங்கப்பா இப்பத் தானே resolution போட்டுருக்காங்க, அதைச் சட்டம் எல்லாம் ஆக விட மாட்டோம் என்கிறார்

said...
This comment has been removed by a blog administrator.
said...

selvan said...
//இந்தியா மத சார்பற்ற நாடு. இட ஒதுக்கீடு பொருளாதார வசதி அடிப்படையில் இருக்க வேண்டும்.மத அடிப்படையில் இருக்க கூடாது.//

குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த சில சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டிருக்கும் நிலையில்தான் முஸ்லிம்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு கோருகின்றனர். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருந்தால் உங்கள் வாதம் சரியானது என்று ஒப்புக்கொள்ளலாம்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையிலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த திறமையான ஊழியர்கள் இந்தியாவுக்கு கிடைக்காமல் போகக்கூடும்.

nanmanam said...
//Selvanukum enakkum serthu antha kelviku bathil solla mudincha sollunga sir.//

பதில் சொல்லியிருக்கிறேன்.

said...

நன்றி அட்றா சக்கை.

இவ்வளவு நாட்களாக முஸ்லிம்களால் மட்டுமே வைக்கப்பட்டு வைந்த கோரிக்கை இப்போது முஸ்லிம் அல்லாதவர்களால் அதுவும் ஒரு மாநில அரசால் கோரிக்கையாக வைக்கப் பட்டுள்ளது. எனவே இது சட்ட வடிவம் பெறும் நாள் இன்ஷா அல்லாஹ் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

said...

If the reservation can be decided by states then Modi may declare all Hindus as backward and give them 75% reservation.Not all Hindus get the reservation benefit.
Some sections of Muslim community
get reservation under BC/OBC category.So any attempt to extend reservation to all muslims will
amount to blatant discrimination.
It will help BJP to consolidate its vote bank.

said...

//இந்தியா மத சார்பற்ற நாடு. இட ஒதுக்கீடு பொருளாதார வசதி அடிப்படையில் இருக்க வேண்டும்.மத அடிப்படையில் இருக்க கூடாது//

இது கவர்ச்சியான வாதம். ஆனால் உண்மையில்லை.

இன்று சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு என்ன காரணம்? ஏன் அப்போதே 'பொருளாதார ரீதியில்' நம் பெரியவர்கள் செய்யவில்லை என்பதை சகோ.செல்வன் போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்.
காரணம் 'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ன தான் பொருளாதாரத்தில் (ஒருவேளை) முன்னேறியே இருந்தாலும் கூட கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் அடக்குமுறை நிரம்பிய சமூகத்தில் ஆதிக்கசக்திகளுடன் போட்டியிட இயலாமல் போகலாம் என்பதை உணர்ந்து தான் சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினர். அதற்கு ஓரளவேனும் பலனுள்ளதைப் பார்க்கிறோம்.

அது போலவே, 'மத சார்பற்ற' இந்தியாவில் அடக்குமுறைகளுக்கு அதிகமதிகம் ஆட்படும் சமூகமாக முஸ்லிம் சமூகமும் உள்ளது. அரசு நியமித்த பல்வேறு விசாரணை அமைப்புகளும் முஸ்லிம்களின் (குறிப்பாக வட இந்திய முஸ்லிம்களின்) அவல நிலையை படம் பிடித்து வைத்துள்ளனர்.

இட ஒதுக்கீடும் இன்றி, ஆதிக்க சக்திகளுடன் போட்டியிடவும் இயலாமல் - முடிந்தவரை படித்த சில முஸ்லிம்கள் ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளையும் பெற இயலாமல் தான் வெளிநாடுகளில் தம் தகுதிக்கும் குறைவான வேலைகளை ஏற்றுக்கொள்கின்றனர். இத்தகைய அவலங்களை முடிவுக்கு கொண்டு வர முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு உதவக் கூடும்.

திரு. ரவி அவர்களின் 'சிறுபான்மையினர் இடஒதுக்கீடு' பதிவில் ஒரு பின்னூட்டத்திலிருந்து:

"அதிகார மட்டத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்?
அதே அதிகார மட்டத்தில் மேல் சாதி பார்ப்பனர்கள் எத்தனை இருக்கிறார்கள்?
இவ்விரு இனத்தாரின் மக்கள் தொகை சதவீதம் என்ன? என்பனவற்றையும் உங்கள் பதிவினூடாக யோசிக்கும் போது, முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு தவிர்க்க இயலாதது என்பதைப் புரிந்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

கொலை வழக்கில் சங்கராச்சாரியார்களுக்கு 'ஜாமீன் வழங்கப்படுவதற்கு (ஞாயிறுகளிலும்)காட்டப்படுகிற அவசரத்தையும், பாபர் மசூதி வழக்கில் நிலவுகிற அசிரத்தையையும் கூட இதனூடாகவே பார்க்கப்பட வேண்டும்."

said...

இந்திய முஸ்லிம்களில் 53 % ரின் தனி நபர் சராசரி மாதாந்திர செலவு Rs. 160 மட்டுமெ! முஸ்லிம் குடும்பம் ஒன்றின் சராசரி ஆன்டு வருமானம் Rs.22,807 மட்டுமே! இது கிராமப்புறதில் வாழும் குடும்பம் ஒன்றின் சராசரி ஆன்டு வருமானமான Rs 25,653K காட்டிலும் மிகவும் குறைவானதே! 43% முஸ்லிம்களுக்கு எந்தவித சொந்த நிலமும் கிடையது!
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43%
இந்திய முஸ்லிம்களில் 71% கிராமங்களில் வாழுகின்றனர்
Rs 5 கோடி அல்லது அதற்கு மேல் விற்பனைக் காட்டும் 2,832 தொழில்கூடங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமானது 4 மட்டுமே!
6 இலட்சம் சிறுதொழில்கூடங்களில் 14,000 மட்டுமே - ஜனதொகையில் 5ல் (அ) 6ல் ஒருவராக உள்ள - முஸ்லிம்களுக்கு சொந்தம். அதிலும் 2,000 கூடங்கள் மிகக் குறைவன முதலீட்டுடன் நடத்தப்படுகின்றன! அரசு வழங்கும் நல்வாழ்வு திட்டங்களைப் பெறுவதிலும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளார்கள்!
பொருளாதார நிலையிலும் முஸ்லிம்கள் தான் மிகவும் பின் தங்கியிருக்கின்றனர். ஆனால், அதே சமயம் ஒட்டுமொத்தாமாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டால், அதில் முஸ்லிம்களால் ஆதிக்கச் சக்திகளின் போலி சான்ற்தழ் செயல்களுடன் போட்டியிட இயலாமல் போகலாம்.
எனவே, முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடும் தந்து அதன் பின்னர் அவர்களுக்குள் பொருளாதார வகையில் முன்னுரிமை வழங்கலாம்
என்பதே மனசாட்சி உள்ளவர்களின் கருத்தாக இருக்க முடியும்.
மனுசாட்சி உள்ளவர்கள் கருத்து எல்லோரும் அறிந்தது தான். (செல்வன், உங்களைச் சொல்லவில்லை).

said...

வோட்டு வங்கி அரசியல்.

உன்மையில் இஸ்லாமியர்கள் முன்னேறவேண்டும் என்றூ விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் கல்வியில் கவனம் செலுத்தலாம்.

இந்திய cricket அனியில் எத்தனை இஸ்லாமியர்கள் உள்ளனர் என்பதை பாருங்கள்.

திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கண்டிப்பாக வரும்.

தடை கல்வி மட்டுமே.

அதை உடைத்தால் மட்டுமே எந்த சமுதாயமும் முன்னேறும்.

கலாம் என்பரின் உதாரனம் பொதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வஹாப்பி மதரஸாக்களுக்கு நிதியை நிறுத்திவிட்டு அதே அளவு பனத்தை நவீன பள்ளிகூடங்களுக்கு செலவு செய்ய வேண்டும்.

No Madrassa Produced a Kalam.

கல்வி-கல்வி-கல்வி - வெறு எதுவும் எந்த சமுதாயமும் முன்னேற உதவாது.

இட-ஒதுக்கீடுகள் பயன் தரவும் அவர்கள் basic qualification அடைந்து இருக்கு வேண்டும்.

அனால் என்னக்கு தெரியும் - கல்வியை பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

ஏன் என்றால் அவர்களின் நோக்கம் சமுதாய முன்னேறம் அல்ல.

said...

Mr Azhagappan,

Kindly allow me to share few words.

Thanks


selvan

//Mr.Raja should remember onething that only in India any minority religion person can hold many to post including Top most(President). This is not possible in any country other than India.//

இன்னும் எத்தனை முறை இந்த மாதிரி அறிவுசீவி ஜல்லி அடிக்கப் போகிறீர்கள்?

Raaja என்பவர் சொன்ன

//இந்திய முஸ்லிம்களில் 53 % ரின் தனி நபர் சராசரி மாதாந்திர செலவு Rs. 160 மட்டுமெ! முஸ்லிம் குடும்பம் ஒன்றின் சராசரி ஆன்டு வருமானம் Rs.22,807 மட்டுமே! இது கிராமப்புறதில் வாழும் குடும்பம் ஒன்றின் சராசரி ஆன்டு வருமானமான Rs 25,653K காட்டிலும் மிகவும் குறைவானதே! 43% முஸ்லிம்களுக்கு எந்தவித சொந்த நிலமும் கிடையது!
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43%
இந்திய முஸ்லிம்களில் 71% கிராமங்களில் வாழுகின்றனர்
Rs 5 கோடி அல்லது அதற்கு மேல் விற்பனைக் காட்டும் 2,832 தொழில்கூடங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமானது 4 மட்டுமே!
6 இலட்சம் சிறுதொழில்கூடங்களில் 14,000 மட்டுமே - ஜனதொகையில் 5ல் (அ) 6ல் ஒருவராக உள்ள - முஸ்லிம்களுக்கு சொந்தம். அதிலும் 2,000 கூடங்கள் மிகக் குறைவன முதலீட்டுடன் நடத்தப்படுகின்றன! அரசு வழங்கும் நல்வாழ்வு திட்டங்களைப் பெறுவதிலும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளார்கள்!
பொருளாதார நிலையிலும் முஸ்லிம்கள் தான் மிகவும் பின் தங்கியிருக்கின்றனர். ஆனால், அதே சமயம் ஒட்டுமொத்தாமாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டால், அதில் முஸ்லிம்களால் ஆதிக்கச் சக்திகளின் போலி சான்ற்தழ் செயல்களுடன் போட்டியிட இயலாமல் போகலாம்.//

இந்தத் தகவலை கம்ப்ளிட்டா மறந்துட்டீங்களே செல்வன்?

//This shows that minority peoples are more secure in India than any other country.//

பம்பாயில, ஒரிசாவுல, கோயமுத்தூரில குஜராத்தில மாதிரி அப்டித்தானே?

IAS IPS IFS IRS இதில எல்லாம் எத்தனை percent சிறுபான்மையினர் இருக்காங்கன்னு தெரியுமா?

//can you tell us what parcentage of reservation to be allotted for Hindu, sikh,budhist,christians etc.//

Selvan, do you accept these communities should get their representative share as per their population? It is more than welcome to see such a comment..

Anyway what Muslims ask is kust 5% and not 13% according to their population mix..

said...

Mr.Samudra,

//No Madrassa Produced a Kalam.//

Only Scince Institutes can produce a scientist. Religious institutions (A madarassa or a Veda paadasaalai) can produce religious scholors only.

So, Nomore jully please.

said...

Samudra said...
//இந்திய cricket அனியில் எத்தனை இஸ்லாமியர்கள் உள்ளனர் என்பதை பாருங்கள்.//

//கலாம் என்பரின் உதாரனம் ...//

முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது, விளையாட்டில் சேர்த்துக்கொள்வது எல்லாம் அரசியல் + திறமை காரணங்களே.

ஓரிவருக்கு கிடைக்கிற குடியரசுத் தலைவர்(அரசியல்) பதவிகளையல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய சதவீத அடிப்படையிலான குமாஸ்தா (அரசு) பதவிகளையே முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முறையிடவும் வழியற்று முஸ்லிம்கள் 'வாழ்வுரிமை'க்காக போராடும் போதில், குடியரசுத் தலைவர் பதவி உனக்குத் தான் , என்பது சுயநல அரசியலே தவிர வேறென்ன.....

'குஜராத்து'கள் இனியும் நடைப்பெறாமல் தடுக்க "எல்லாம் முடிந்த பின்" வந்து பார்வையிட்டுப் போகிற 'குடியரசுத் தலைவர்' பதவிகளையல்ல, குறைந்தபட்சம் வல்லாதிக்கத்தின் கைகளை சிறிதளவேனும் கட்ட முடிகிற 'செயல்பாட்டு'ப்பதவிகளே தேவை அய்யா.

பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும், ஒடுக்கப்பட்ட ரீதியாகப் பார்த்தாலும், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற முழுத் தகுதி உண்டு.

said...

Samudra said...
//அனால் என்னக்கு தெரியும் - கல்வியை பற்றி யாரும் பேச மாட்டார்கள்.//

சமுத்திரா, மீண்டும் ஒரு முறை எனது பதிவை படியுங்கள். முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு கோரவில்லை. கல்வியிலும் சேர்த்துதான் இட ஒதுக்கீடு கோருகின்றனர்.

said...

ஸ்டீவன் வில்கின்சன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்....

As we can see, while it is true that some states that underrepresent Muslims in the police have had many riots (e g, Maharashtra and Gujarat where Muslims are underrepresented by 6 per cent and 3 per cent, respectively), other states with equally low levels of Muslim proportionality in their police forces or state cabinets (such as Rajasthan) also seem to have done quite well in controlling their levels of communal violence.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்