Thursday, January 08, 2009

ஹமாஸ் - போராளிகளா? தீவிரவாதிகளா?


பாலஸ்தீன் என்னும் நாட்டின் ஒரு பகுதியை சம்பந்தமே இல்லாத மூன்றாம் நாடுகள் பிரித்து இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கினர். தங்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதை அந்நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். புதிததாக உருவாகிய நாடு வல்லரசுகளின் ஆயுதத் துணையோடு தங்களைக் காத்துக் கொண்டது மட்டுமின்றி முழு பாலஸ்தீனத்தையும் ஆக்ரமிக்கின்றனர். ஆக்கிரமிப்பு எப்படியெல்லாம் நிகழ்த்தப்படுகிறது என்பதை யூத வரலாற்றாசிரியரான இலன் பெப்பே என்பவரின் இந்த செவ்வியின் மூலம் ஓரளவு அறியலாம். இதனை எதிர்த்து பாலத்தீனியர்கள் போராடி வருகின்றனர். இதுவே இஸ்ரேல் பாலத்தீனப் பிரச்சனையின் சுருக்கம்.

பாலஸ்தீனப் பகுதியை ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அங்கீகரித்த இந்தியா உள்பட உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் இதுவரை பாலஸ்தீன் எனும் நாட்டை அங்கீகரிக்கவே இல்லை. அமைதியாக இருங்கள். அமைதியாக இருங்கள் கூறிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி வரையறுத்த எல்லைகள் போக மற்ற பகுதிகள்தான பாலஸ்தீன் என்று கூட இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையோ, பெரியண்ணன் அமெரிக்காவோ அறிவிக்கவில்லை.
 
பொதுவாகவே ஒரு நாடு மற்றவர்களால் ஆக்ரமிக்கப்பட்டாலோ அல்லது அந்த நாட்டின் அரசு இனவெறி அரசாக இருந்தாலோ, ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அல்லது இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான ஆக்ரமிப்பை, தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து போராடுவர். இத்தகைய போராட்டங்கள் அமைதி வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ அமைந்ததாக இருக்கும். சர்வதேச சட்டங்கள் இந்த இருவகைப் போராட்டங்களையும் ஆதரிக்கவே செய்கின்றன.
 

ஆயுதங்களை பகிரங்கமாக கையாளலாம். அவர்கள் ஆயுதப் போராட்டம் செய்யலாம். இத்தகைய குழுக்கள் அந்த நாட்டின் இராணுவமாகவே கணிக்கப்படும்.
 
1949ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் ஜெனீவா மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்படிக் கூறுகிறது.
 
 
எனவே பாலஸ்தீனத்தில் தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் அனைவருமே போராளிகள்தானே ஒழிய தீவிரவாதிகள் அல்ல. சமீபத்தில் இலங்கைத் தழிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து உலகின் எந்தப் பகுதிக்கும் பொருந்தக் கூடியது. அவர் கூறியதின் சாரம் : "உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறந்தே தீரும். போராளிகள் தீவிரவாதிகளா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும். நாளையே அங்கு ஒரு சுதந்திர நாடு பிரகடனப்படுத்தப்பட்டால் போராளிகள் அனைவரும் தியாகிகளாகப் பார்க்கப் படுவர். நமது வாஞ்சிநாதனைப் போல" என்று கூறினார். இது பாலஸ்தீனியர்களுக்கும் பொருந்தும்.
 
பாலஸ்தீன விடுதலைக்காக பல்வேறு குழுக்கள் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) என்ற பெயரில் இயங்கி வந்தபோது அதன் செயல்பாடுகளில் திருப்தி அடையாத சிலர் தோற்றுவித்ததுதான் ஹமாஸ் என்ற அமைப்பு.  ஹமாசைத் தோற்றுவித்ததில் இஸ்ரேலின் பங்கும் இருப்பதாகவும் சிலர் சொல்வதுண்டு. பாலத்தீன விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுக நிதி உதவி செய்தது என்று UPI செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய இந்த அமைப்பு அரசியல் ரீதியாகவும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டி தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கு பெற்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு அதன் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா என்பவர் தலைமையில் ஆட்சியமைத்தது. ஹமாஸ் அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை இஸ்ரேல் கொடுத்து வந்தது. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசின் கட்சியினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடும் சன்டை ஏற்பட்டு, இறுதியில் காஸா பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் இயக்கதினரிடமும், மேற்குக் கரை பகுதியின் அதிகாரம் அப்பாசின் பதஹ் கட்சியினரிடமும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
 
காஸாவின் அதிகாரம் ஹமாஸ் இயக்கதிற்கு வந்து சேர்ந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காஸா பகுதிக்கு மின் இணைப்பு துண்டிப்பு, பெட்ரோல் வழங்காமை, எல்லைகள் அடைக்கப்பட்டது என்று உலகின் மிகப் பெரும் சிறைச்சாலையாக காஸா பகுதியை இஸ்ரேல் மாற்றியது.
 
இத்தனையையும் பொறுத்துக்கொண்டு எப்படித்தான் இருக்க முடியும்? ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் மக்கள் போராடிச் சாக துணிந்து விட்டனர். இவர்கள் தீவிரவாதிகளா? இவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர்களாகத்தான் பாலஸ்தீனர்கள் பார்க்கின்றனர். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

Monday, January 05, 2009

தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்

காஸா. உலகின் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. உலகின் மிகப்பெரும் சிறைச் சாலையும் அதுதான். சிறையில் அடைத்தது போதாதென்று பத்து நாட்களாய் நரவேட்டையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப் பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்று கூறுகிறது. 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனராம். 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனராம். குண்டு பட்டு மரணிக்காவிட்டாலும் காசநோயை ஏற்படுத்தும் வகையிலான யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறதாம். தீவிரவாதிகள் செத்து மடியட்டும்.

































































































































































































































































































































































































தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். இனி யூதர்களுக்கு உலகில் எங்குமே பிரச்சனை வராது என்ற மகிழ்ச்சியில்  சியோனிச யூதர்கள்.




Tuesday, June 24, 2008

தசாவதாரம் - ஒரு முஸ்லிமின் பார்வையில்

கமலின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு தசாவதாரம் பல்வகை விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே இந்தப்படத்தின் முதல் வெற்றி. இந்தப்படத்தில் இடம்பெறும் பாடலான " கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்பதுபோல் "வசூலை மட்டும் கண்டால் விமர்சனம் தெரியாது" என்று தயாரிப்பாளர் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தமிழ் சினிமா வரலாற்றில் ரெக்கார்டு கலெக்ஷன் என்று கூறிக் கொள்கிறார்கள். இதனால் கமலுக்கு இலாபம் ஒன்றும் இல்லை. அடுத்தபடம் வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பில் நடித்தால், இந்தப் படத்தின் வசூலைச் சுட்டி கூடுதலாகக் கேட்க வாய்ப்புண்டு. அடுத்த படம் சொந்தப் படம்தான். சோதனை முயற்சிதான் என்று கூறப்படுகிறது. வாழ்த்துவோம்.

தசாவதாரத்தின் பலம், பலவீனம், அதன் நுண்ணரசியல், அதன் விளைவுகள் (அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதேனும் இருக்குமா? - என்ன கொடுமைசார் இது?) என்று பலவும் அலசப்பட்டுவிட்ட வேளையில், அதன் வரலாற்றுத் தகவல் பிழையைச் சுட்ட வேண்டி இப்பதிவு.

"இயேசுவும் அல்லாஹ்வும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில்..." என்ற கமலின் கணீர் குரலில் படம் தொடங்குகிறது. பிரச்சனை இதுதான்.

வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனைகளுக்கு கிறித்தவமோ, இஸ்லாமோ காரணமில்லை. முஸ்லிம் மன்னர்கள் இப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு, பிரித்தாளும் சூழ்ச்சிகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதைக் கூறுவதற்காகத்தான் கமல் இந்த வசனத்தை இடம்பெறச் செய்திருக்கக் கூடும் என்று நம்புகிறேன். காரணம் வரலாறு தெரியாதவரல்ல அவர். எனினும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமென்பதற்காக....

வைணவ சைவப் பிரச்சனை நடக்கும்போது இந்தியா என்ற ஒற்றை நாடு உலகில் அமைந்திருக்கவில்லை. பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு கண்டமாகத்தான் அது அமைந்திருந்தது. தற்போதைய இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய பகுதிகளே இந்தியா என்று அறியப் பட்டது. இந்தியா என்று அறியப்படுவதற்கு காரணர்கள் அரேபியரே. "ஆதி மனிதர் ஆதம் வானிலிருந்து வெளியேற்றப் பட்டபோது அவர்கள் வந்திறங்கியது இந்தியப் பகுதியில்" என்று நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிப்பதாக தாரீகுத்தப்ரீ எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. நிற்க.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கிறித்தவம் ஏற்கப்படுவதற்கு முன்னரே புனித தோமையர் இந்தியா வந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

கி.பி. 52ஆம் ஆண்டிலேயே இன்றைய கேரளாவில் உள்ள கொடுங்கல்லூருக்கு வந்து கிறித்துவத்தைப் பரப்பினார் என்றும் கி.பி. 72ல் சென்னை பரங்கிமலையில் கொல்லப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. (பரங்கிமலைப் பகுதி அவர் பெயரலாலேயே St. Thomas Mount என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம்.)

கிறித்துவுக்கு சுமார் 9 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரேலிய மன்னர் சாலமன் (பைபிள் குறிப்பிடும் அதே சாலமன்தான்) ஆட்சிக் காலத்தின் போதே யூதர்கள் இன்றைய கேரளாவின் கொச்சியில் வந்திறங்கினர் என்று யூதர்களின் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.


யூதம் மற்றும் கிறித்தவத்தைப் போலவே இஸ்லாமும் இன்றைய கேரளாவின் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தது. உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவுக்கு இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்கு ஆட்களை அனுப்பியதாக தாரீகுத் தப்ரீ எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. (இந்நூலை எழுதிய அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு ஜரீர் அத்தப்ரீ கி.பி. 838க்கும் 923க்கும் இடையில் வாழ்ந்தவர்.)

தமிழ் மன்னர்களில் ஒருவராயிருந்த மன்னர் சேரமான் பெருமாள் காலத்திலேயே, நபிகளார் உயிருடன் இருந்த போதே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதே உண்மை.

சுதீர் பிரோத்கர் எனும் இந்துத்துவ வரலாற்றாசிரியர் கூறுகிறார்:
Many of us do not know that Islam first came into India in the province of Kerala during the lifetime of Prophet Mohammed itself.
This King from Kerala was Cheraman from the Chera dynasty of Kerala. He gave a patient hearing to the discourses of the Messengers of Islam. On hearing them, he was favourably impressed by their message of universal brotherhood which is enshrined in Islamic theology and is recommended to be practiced within the Muslim community. (Ironically this concept is limited to the Muslim community alone, while towards the unbelievers what is advocated is relentless hatred. And in practice even within the Muslim community, in real life, the general attitude is of fanaticism and violence when the energy of the Muslims is not directed towards battling the non-Muslims).

But King Cheraman was favourably impressed with what he was told and he is said to expressed interest in Islam. Local legend says that King Cheraman visited Mecca and converted to Islam in the 7th century. This happened before Islam had become a military force and started off rampaging on its global Jehad. King Cheraman also built a Mosque in Kerala and many local people converted to Islam along with him.

(ஆக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற) அனைவருமே இந்தியாவின் பூர்வகுடிகளான தமிழர்கள் குடியிருந்த பகுதிகளுக்கே வந்துள்ளனர். ஆனால் இந்தியாவின் வரலாற்றை எழுதிய / எழுதிக் கொண்டிருக்கும் பார்ப்பண வரலாற்றாசிரியர்கள் வடக்கில் நிகழ்ந்தவைகளையே முன்னிலைப் படுத்துகின்றனர். (ஆனந்த விகடனில் பார்ப்பனரான மதன், தமிழர்களுக்கென்று வரலாறு கிடையாதுன்னு சமீபத்தில் சொன்னது, இந்தியாவின் பூர்வகுடிகளான தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டே திரிக்கும் கும்பலின் சதியின் ஒரு அங்கமே.)

கஜினி முஹம்மது, கோரி முஹம்மது என்ற ஆப்கன் மன்னர்களின் படையெடுப்புக்குப் பின்னரே இஸ்லாம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று வரலாற்றுத் திரிப்பில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழ், தமிழர், தமிழ் மண் இவை இந்தியாவுடன் சேராது என்று இவர்கள் எண்ணுகிறார்களோ?
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
80களின் இறுதியில் கமலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்... (தினத்தந்தியில் வாசித்ததாக நினைவு)

நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுடையவர் நீங்கள். தற்போது எந்தவகையான நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மதம் மாறிய ஒருவர் இஸ்லாம் குறித்தும் குர்ஆன் குறித்தும் எழுதியுள்ள நூலைப் படித்துக் கொண்டுள்ளேன்.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
வாசிப்பு ஆர்வமுடைய கமல் அவர்களே, இந்தியாவை அறிய அதன் பூர்வகுடிகளான தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். வடவர்கள் வரலாறு என்று எழுதி வைத்துள்ளவற்றை கண்ணை மூடி ஆதாரமாக ஏற்றுக் கொள்வதை விட்டொழியுங்கள்.

Thursday, January 17, 2008

யூதம் என்றொரு மத்தியகிழக்கு பார்ப்பனீயம் - 2

கடந்த வாரம் "யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்" என்றொரு பதிவெழுதியிருந்தேன். அதற்கு பின்னூட்டியிருந்த மஸ்தான் என்பவர், "அனைத்துப் பார்ப்பனரும் இஸ்ரேலின் செயல்களை ஆதரிப்பதில்லை" என்ற கருத்துப்பட எழுதியிருந்தார். நானும் அதனை ஆமோதித்திருந்தேன். அதன் பின் பதிவர் மா.சி. "கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்" என்றொரு பதிவெழுதியுள்ளார் . எதிர்பார்த்தது போன்றே பார்ப்பனரில் பலர் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பின்னூட்டியுள்ளனர். யூதத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள தொடர்பை, யூதர்கள் மீதான பார்ப்பனரின் பாசத்தை இது வெளிப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன்.

மா.சி. பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக இங்கே....

//அரேபிய மண்ணிலிருந்து விரட்டி அடித்து, ஹிட்லர் முடிக்காததை தாங்கள் முடிக்கப்போவதாகக் கொக்கரிக்கும் அரபுகள் "வலி" நிச்சயமாக மனிதர்களைக் கொசுக்களைப் போல் கொன்று குவிக்கும் கம்யூனிச ஆரதவாளருக்குத்தான் புரியும்.// - வஜ்ரா

மா.சி. காந்தியவாதி என்பதுதான் பலருக்கும் தெரிந்தது. கம்யூனிசவாதியான அசுரனை எதிர்த்து அவருடன் விவாதங்களும் செய்துள்ளார். ஆனால் அவரை இவர் கம்யூனிச ஆதரவாளர் என்று கூறுதன் மூலம் இவர் கூற விரும்புவது தெளிவாகிறது. "(தீவிரவாதத்தி்ற்கெதிரான போரில்) எங்களுடன் இணையுங்கள். இல்லையெனில் நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்றே கருதப்படுவீர்கள் - 'You are either with us or against us'" என்று புஷ் கூறியது போன்று இவரது வாதமும் அமைகிறது. அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்ப்போர் அனைவருமே கம்யூனிச ஆதரவாளர்கள் என்று கட்டமைப்பதையே இவர் விரும்புகிறார்.

//பழைய கதையையே பேசினால் எப்படி? பாலஸ்தீனம் என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை. ஒட்டோமான் துருக்கியின் ஒரு சிறு பிராந்தியம் அது.// - டோண்டு

பாலத்தீன் உதுமானியப் பேரரசின் ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. பாலத்தீன் என்ற பெயரிலேயே அந்த மாநிலம் அழைக்கப்பட்டு வந்தது. உதுமானியப் பேரரசிடமிருந்து அதனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபோது, ஆங்கிலேயர்களின் ஆளுமையில் தனி நாடாகவே இருந்தது. பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபோர் என்பவர் பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவருக்கு 1917ல் எழுதிய பெல்ஃபோர் அறிவிக்கை (Belfour Declartion) என்ற பெயரில் அறியப்படும் கடிதத்தில்,

" Dear Lord Rithchild, I have much pleasure in conveying to you, on behalf of His Majesty's Government, the following declaration of sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. His Majesty's Government view with favour the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavours tofacilitate the achievenment of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country. I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation. Signed: Arthur James Balfour".

"பாலத்தீனத்தில் யூதர்களுக்கென்று தேசிய இல்லம் அமைக்க மாட்சிமை தாங்கிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது....." என்று குறிப்பிடுகிறார்

பாலத்தீனம் என்றொரு நாடு பிரித்தானிய ஆளுமையின் கீழ் இருந்ததை இந்த அறிவிக்கை உறுதிபடுத்திகிறது.

//அதை பிரிட்டன் முறைப்படி ஐ.நா. தீர்மானத்தின்படி இரண்டு பகுதிகளாக்கியது.// - டோண்டு

எந்த முறைப்படி டோண்டு அவர்களே? நீங்கள் குறி்ப்பிடும் அந்த தீர்மானம் நியயமானதே எனக் கொண்டாலும், அந்த தீர்மானத்தின்படி பாலத்தீன் என்னும் நாட்டை இதுவரை அங்கீகரிக்காத அமெரிக்காவையும் இஸ்ரேலையும் என்ன செய்யலாம்? அந்த தீர்மானத்தை ஒருவர்தான் மதிக்க வேண்டுமா? மற்றவர் மதிக்கத் தேவையில்லையா ? பார்ப்பனர் தவறு செய்வதற்கும் மற்றவர் தவறு செய்வதற்கு வித்தியாசம் இருக்கிறது. இருவருக்கும் வெவ்வேறு தண்டனைகள் என்று உங்கள் வேதம் கூறுவது போன்றுதான் உங்கள் வாதமும் இருக்கிறது.

//தங்களுக்கு கொடுத்த பகுதியை வைத்து இஸ்ரேல் ராஜ்ஜியம் செய்ய பாலஸ்தீனியர் அரபுகளின் தூண்டுதலின் பேரில் தங்கள் நிலப்பகுதிகளை ஜோர்டானிடமும் எகிப்திடமும் பறிகொடுத்தனர்.// - டோண்டு

இதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? 1949 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாகும்போது இருந்த வரைபடத்தையும் இன்றைய வரைபடத்தையும் பாருங்கள்.

//மேலும் இஸ்ரேல் அமைய சோவியத் யூனியனும் அதன் ஆதரவாளர்கள் கூட வாக்களித்தனர் என்பதையும் சௌகரியமாக மறக்கிறீர்களே. எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகளை பாருங்கள்.// - டோண்டு

கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர் என்பதாலேயே ஒரு செயல் நியாயமாகிவிடுமா?

//சோம்பேறி அரேபியர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.// - டோண்டு

ஒருவன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதற்காக அவன் பக்கம் நியாயம் இருந்தாலும் அவனை ஆதரிப்பது தவறாகிவிடுமா? நமக்கும் பாக்கிஸ்தானுக்கும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் பாக்கிஸ்தானையே ஆதரிக்கும் அமெரிக்கா குறித்து என்ன கூறுகிறீர்?

//முஹம்மத் அப்பாஸ், டீ விக்களில், திரையரங்குச் செய்தித் துணுக்குகளில் எல்லாம் வந்து peaceful co-existence என்றும் Two state solution என்றும் பேசினார். ஆனால் அவர் தேர்தலில் நின்று எத்தனை வாக்குகள் பெற்றார்?// - வஜ்ரா

அப்பாஸ் வெற்றி பெற்றால் உடனே பாலத்தீனத்தை அங்கீகரித்துவிடுவது போன்றும், பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தனது ஆக்ரமிப்புகளை விலக்கிக் கொண்டுவிடும் என்பது போன்று இவரது எழுத்துக்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அப்பாசின் கட்சிதான் வெற்றி பெற்றது. ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா?

சனநாயகம், சனநாயகம் என்று கூப்பாடு போடும் இவர்கள் பாலத்தீன சனங்கள் தேர்ந்தெடுத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயங்குவதேன்? நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நீங்கள் ஆட்டுவிக்க பாலத்தீன பொம்மை ஒன்று வேண்டும். அவ்வளவுதானே?

//பாலஸ்தீனர்களுக்கு தங்கள் நாடு என்று ஒன்று அமையவேண்டும் என்ற எண்ணம் மிக மிகக் குறைவு.// - வஜ்ரா

பாலத்தீனர்கள் என்று நீங்கள் ஹமாஸ் இயக்கத்தவரை மட்டும்தான் கருதுகிறீர்களா? சுமார் 20 ஆண்டுகளாக நீங்கள் அழைக்கும் இடத்திற்கெல்லாம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, நீங்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திடும் பாலத்தீன விடுதலை அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பாலத்தீனியர்களாக உங்களுக்குத் தெரிவதில்லையா?

//மிக அதிகமாக மேலோங்கியிருக்கும் எண்ணம், யூதர்களை விரட்டுவதில் தான் உள்ளது. அத்தகய எண்ணத்தின் வெளிப்பாடு தான் தற்கொலைப்படைத் தாக்குதல், பொது மக்களை மீது ராக்கெட் தாக்குதல் போன்றவை.// - வஜ்ரா

பாலத்தீனியர் வசிக்கும் குடியிருப்புகளை இடித்துத் தள்ளிவிட்டு எங்கிருந்தோ வரும் யூதர்களுக்கு அந்தப் பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துத் தருவீர்கள். குழந்தைகள், பெண்கள் , வயோதிகர் என்று வித்தியாசமின்றி, அமெரிக்கா வழங்கும் ஆயூதங்களைக் கொண்டு கொன்று குவிப்பீர்கள். அதனால் பாதிக்கப்படுவோர், நீங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வந்து , கையெழுத்திட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நன்றாகவே புரிகிறது.

//அரபு, இஸ்ரேலியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இந்தியர்களில் வெகு சிலருக்கே முடியும் . அரபு மனப்பான்மையைப் புரிந்தவர்கள் மட்டுமே இஸ்ரேல் பக்கத்து ஞாயத்தைப் பார்க்க முடியும்.//- வஜ்ரா

இந்தியாவின் 2.5 சதவீத மக்களுக்கே புரியும் என்பதெல்லாம் சரிதான். அரபு இஸ்ரேல் பிரச்சனை என்பது வேறு. பாலத்தீன் இஸ்ரேல் பிரச்சனை என்பது வேறு என்பதை நினைவில் கொள்க.

//இஸ்ரேல் செய்யும் செயல்கள் அடாவடிச் செயல்களே, அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களால் அந்த இடத்தில் வாழ முடியாது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனை தீரும் என்றால் அதில் முதலாவதாக வந்து உட்கார்ந்து பேசித் தீர்க்க இஸ்ரேலியர்கள் என்றுமே தயார். ஆனால் இது வரை ஒரு பேச்சு வார்த்தை கூட வெற்றி பெறவில்லை என்பதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை?// - வஜ்ரா

பாலத்தீனியர்களின் இடங்களையும் கைப்பற்றிக் கொள்வோம். அடாவடியும் செய்வோம். எங்களுடைய அடாவடியைத் தட்டிக் கேட்கக்கூடாது . ஐ.நா. தீர்மானங்களா? ஹ.. அதெல்லாம் எங்களைக் கட்டுப் படுத்தாது. நாங்கள் கூப்பிடும் இடத்திற்கு வந்து நாங்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனால் உங்கள் கோரிக்கையில் ஒன்றைக்கூட நிறைவேற்ற மாட்டோம் என்று விடாப்பிடியாக நின்றுவிட்டு பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் பாலத்தீனியரே என்ற உங்கள் வாதத்தின் பின் உள்ள சூழ்ச்சி நன்றாகவே புரிகிறது.

//ஆனால், பாலஸ்தீனர்களுக்கு (ஏன் அனைத்து அரபியர்களுக்குமே) அடிப்படை ஜனனாயகத்தில் நம்பிக்கையோ, எற்றுக்கொள்ளும் மனமுதிற்ச்சியோ இல்லை.// - அதியமான்

சனநாயகம் என்றால் என்ன என்பதை விளக்குவீரா? ( வஜ்ராவுக்கு அளித்த பதிலைப் பார்வையிடவும்)

//மிக முக்கியமாக ஒற்றுமை இல்லை. பாலஸ்தீன குழுக்கலான ஃபாடா வும், ஹமாசும் ஒருவரை ஒருவர் அழிக்க போர் புரிவதை பாருங்கள். அடிப்படை நேர்மையும் இல்லை. யாசர் அராஃபத் பல் மில்லியன் டாலர்களை ஊழ்ல் புரிந்ததாக குற்ச்சாட்டு. அவர் மனைவியும், பி.எல்.ஓ தலைமையும் இந்த பணதிற்க்காக அடித்துக் கொள்ளும் வெக்ககேடு.// - அதியமான்

ஒரு குழுவால் குறிப்பிட்ட நோக்கத்தை அடையமுடியவில்லை . அந்த தலைமையின் முடிவுகளால் நோக்கம் நிறைவேறாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்று குழும உறுப்பினர்கள் கருதினால் நிச்சயமாக அந்தக் குழுவில் ஒற்றுமை இருக்காது. பிரிவுகள் தோன்றவே செய்யும் . இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகள்கூட இதனை தெளிவுபடுத்தவே செய்கின்றன. காந்திஜி அகிம்சை என்றார்; நேதாஜி ஆயுதம் என்றார். "அவருடைய நடவடிக்கை நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தராது" என்பதே இருவரின் ஒரே கருத்து.

//காசா மற்றும் கிழுக்கு கரை பகுதிகளில் (முழு பாலஸ்தீன கட்டுப்பாட்டில் இருப்பவை) நேர்மையான, அடிப்படை ஜனனாயகத்தை மதிக்கும் ஆட்சி கிடையாது. எதிராளிகளை கொல்வதும், துப்பாக்கி கலாச்சாரமும் சர்வ சாதாரணம். அர‌சின் ப‌ண‌த்தை கையாட‌ள் செய்வ‌து, ஊழ்ல் மிக‌ சாதார‌ண‌ம். இவ‌ர்க‌ளால் ஒரு ந‌ல்ல‌ ஆட்சி த‌ர‌ முடியிம் என்று தோன்ற‌வில்லை.// - அதியமான்

பாலத்தீன் என்றொரு நாட்டை இஸ்ரேலும் அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளனவா? ஒரு நாட்டில் அரசு செயல்படுவதற்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள அவர்களை அனுமதித்துள்ளீர்களா? எந்தவொரு கட்டமைப்பையும் ஏற்படுதித்க கொடுக்கவில்லை . அவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றிற்கு தடை போடப்பட்டது. பாலத்தீன இராணுவம் என்று ஒன்று இல்லை. அப்படி வைத்துக் கொள்ளத் தடை. மிகச் சிறிய அளவில் காவல்துறை உள்ளது. அவர்களிடம் போதுமான ஆயூதங்கள் இல்லை . தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மக்கள் செய்யும் கிளர்ச்சிகளை மிகச் சிறிய காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்திவிட முடியுமா? அங்கீகரிக்கப் பட்ட பாலத்தீனப் பிரதிநிதியான யாசர் அரபாத் , சொந்த மண்ணில் சொந்த வீட்டில் சிறை வைக்கப் பட்டிருந்ததும் சிறைப் படுத்தியவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர் என்பதும் நினைவிருக்கிறதா மறந்து விட்டதா ?

//அத‌ற்க்கா இஸ்ரேல், பால‌ஸ்தீன‌ விடுதலையை அங்கீகரிக்க கூடாது என்று சொல்லவில்லை. மறுபக்கத்தையும் பாருங்கள்.. // - அதியமான்

பாலத்தீன் இஸ்ரேல் பயங்கரவாதிகளால் அடிமையாக வைக்கப்பட்டுள்ளது என்பதையாவது ஒப்புக் கொண்டீரே. அதற்காக நன்றி .

//அமைதியும், சமாதனாமும் நிரந்தரமாக நிலை பெற்று, பால்ஸ்தீன நாடு ஒழுங்கு பெற்றால், இஸ்ரேலைவிட பேலஸ்தீனரக்ளுக்கே அதிக நன்மையும், வளமும் கிடைக்க வாய்ப்பு. இஸ்ரேலின் சுபிட்சத்திலிருந்து பயன் பெறலாம். (proximity benefits - மெக்ஸிகே, அமேரிக்கா அருகே இருந்து பயன் பெறுவதை போல)// - அதியமான்

பாலத்தீனர்களுக்கு இஸ்ரேலிடமிருந்து நன்மையும் வளமும் கிடைப்பது இருக்கட்டும். முதலில் அவர்களுக்கு விடுதலையை அளிக்க வேண்டாமா? பாலத்தீன் என்றொரு நாடு அமைக்கப்பட்டுவிட்டால் இப்போதுள்ள பிரச்சனைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் குறையுமே ?

//அடாவடி என்பது பார்வையாளர்களின் கோணத்திலிந்துதான்.'அடிக்கு அடி திருப்பி கொடு, இல்லையேல் எதிரிகள் நம்மைவலிமையற்றவனாக நினைத்து மேலும் அடாவடி செய்வர்' என்பதே இஸ்ரேலின் தத்துவம்.// - அதியமான்

இஸ்ரேலுக்கு அந்த தத்துவத்தை இவர்தான் கற்றுக் கொடுத்தார் போலும்.

//1980களுக்கு பின், பெரும்பாலான அரபிய நாடுகள், (ஏன், பி.எல்.ஓ உம்தான்) இஸ்ரேலை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற நிலைபாட்டிலிருந்து மாறி, பாலஸ்தீனர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்தால் போதும், இஸ்ரேலுடன் peaceful co-existance என மாறின‌.// - அதியமான்

பாலத்தீனியர்களுக்கு ஒரு நாடு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு கிடைத்த பலன் என்ன? அன்றைய நிலையிலிருந்து கொஞ்சமேனும் மேம்பாடு அடைந்திருந்தால், ஹமாஸ் போன்ற இயக்கங்கள் தோன்றியிருக்காது. (ஹமாஸ் தொடங்கப்பட்ட ஆண்டு 1987). ஹமாஸின் செயல்பாடுகளில் திருப்தி அடையாதவர்கள் ஹமாஸை விட தீவிரமாக செயல்படும் புதிய இயக்கங்களைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

//இஸ்ரேல் உருவான வரலாறு இன்று விவாதத்திற்கு தேவையில்லை. நிகழ்காலமும் , எதிகாலமும்தான் விவாதிக்கப்பட வேண்டும்.//- அதியமான்

ஒரு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்தப் பிரச்சனை எப்பொழுது தோன்றியது ? அதன் காரணர்கள் எவர் என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகே, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்துப் பேசவேண்டும் .

//நம்ம அரை டிக்கட் அழகப்பனை கேளுங்க;அவர் கூட மிக சீரிய ஆராய்ச்சி செய்து, "பெளத்தமும்,பார்ப்பனீயமும்,பிறப்போடு வருபவை;யாரும் தழுவு ஏற்க முடியாது" என்ற உண்மையை கண்டுபிடித்து எழுதுவார்// - பின்னூட்ட பாலா

பார்ப்பனீயத்தை எதிர்த்து, இந்தியாவை தாயகமாகக் கொண்டு தோன்றிய பௌத்தத்தை பார்ப்பனீயத்துடன் தொடர்புபடுத்தும் அளவு நான் முட்டாள் அல்ல. தவிரவும் அம்பேத்கர் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுடன் பௌத்தத்தைத் தழுவியதை சரித்திரமும் மறைக்கவில்லை. நானும் மறக்கவில்லை .

//சம்பந்தப்பட்ட பாலஸ்தினியர்கள் மற்றும் இதர அரபிய நாடுகளுமே, இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்று கொண்டுவிட்டனர். பாலஸ்தீனிய நாட்டிற்கான எல்லைகளை வரைவு செய்வதில்தான் இன்னும் பிரச்சனை....// - அதியமான்

சம்பந்தப்பட்ட பாலத்தீனியர் (அப்பாஸ் குழு ) இஸ்ரேலை ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பது உண்மைதான். ஆனால் இஸ்ரேல் பாலத்தீன் எனும் நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளதா?

இவற்றுக்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு பதில் தெரியும். ஆனாலும் யூதர்கள் மீதான அவர்களின் பாசம் அவர்களை இவ்வாறு எழுதச் செய்கிறது.

என் முந்தைய பதிவில் கூறியது போன்று, பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர் என்ற என் கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

Sunday, January 06, 2008

யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்

உலகின் நீண்ட நெடிய தீர்க்கப்படாத பிரச்சனை பாலத்தீன பிரச்சனையே. இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர்கள் யூதர் என்பதால், அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தர பிரிட்டன் ஏகாதிபத்தியம் முடிவு செய்தபோது, அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அப்போது யூதர்கள் அதிகமாக இருந்த ஐரோப்பாவின் ஒரு பகுதியையோ அல்லது ஹிட்லரின் ஜெர்மனியையோ அல்ல. மாறாக, மத்திய கிழக்குப் பகுதியை.


யூத மதத்தின் பிறப்பிடம் என்பதற்காக மட்டுமே இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. உலகப் போர்களில் தங்களுக்கு எதிராக நின்ற உதுமானியப் பேரரசைப் பிரித்தாள வேண்டும் என்பதுவும் அவர்களின் நோக்கமாக இருந்தது. இதற்கு வசதியாக ஏற்கனவே யூத அமைப்பு ஒன்று அந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நிலங்களைத் தந்திரமாக கையகப்படுத்திக் கொண்டு இருந்தது. (விரிவாக அறிய : பா. ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் பார்வையிடவும்)

தங்கள் இடத்தைப் பிடுங்கி அடுத்தவனுக்குக் கொடுப்பதை எந்த மனிதன்தான் ஒப்புக் கொள்வான்? பாலத்தீனியர்களும் அன்று முதல் தங்கள் எதிர்ப்புகளை பலவிதமாக வெளிக்காட்டினர்.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும் சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க வைக்கப் போவதாக தடி எடுத்திருக்கும் அமெரிக்கதான், பாலத்தீனர்களின் சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்க இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. பாலத்தீனம் போர்க்கள பூமியாக இருக்கும்வரை, ஆயுத வியாபரிகளின் சந்தையாக மத்தியக் கிழக்கு விளங்கும் என்பதாலேயே பேரழிவு ஆயுத வியாரிகளையே அதிபராகக் கொண்ட அமெரிக்காவும் அதன் எடுபிடியான பிரிட்டனும் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகின்றன. (கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அறிவிப்பை பார்வையிடவும்)

எனினும் கண் துடைப்புக்காக பேச்சுவார்தைகளை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஓஸ்லோ முதல் சமீபத்தைய அண்ணாபோலீஸ் வரை இந்த நாடகங்கள் நடந்தேறி வருகின்றன.

பாலத்தீனர்களின் பிரதிநிதியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசு பாலத்தீன விடுதலை அமைப்பை மட்டுமே அங்கீகரித்ததுள்ள நிலையில், அண்ணாபோலீசில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அந்த அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஹ்மூத் அப்பாஸ்தான் இதன் தலைவர் என்றாலும், பாலத்தீன் அதாரிட்டியின் பிரதிநிதி என்ற அளவிலேயே அவர் கலந்து கொள்ள முடியும். இதன் மூலம் எந்த உடன்படிக்கை எட்டப்பட்டாலும் சர்வதேச சட்ட அங்கீகாரம் பெற முடியாது. சர்வதேச சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு ஒப்பந்தம் கண் துடைப்பு ஒப்பந்தமாகவே இருக்க முடியும்.

1947 ல் 90 சதவீதமாய் இருந்த பாலத்தீனியர்களின் எண்ணிக்கை 2020ல் 55 சதவீதமாய் சுருங்கிப் போகும் அளவுக்கு பாலத்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் அகதிதகளாய் வெளியேற்றப் பட்டுள்ளனர். யூதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் மருந்துகள் இல்லை ( கடந்த அக்டோபர் மாதம் 61 வகையான முக்கியமான மருந்துகள் பாலத்தீனத்தில் இல்லை என்ற நிலை. நவம்பர் மாதம் இதன் எண்ணிக்கை 91 என்றானது) , அடிப்படைக் கல்வி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை. இப்படி தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்துவிட்ட ஒருவன் அதற்குக் காரணமான ஒருவனை எதிர்த்துப் போராடுவதைத்தான் ஊடக வியாபாரிகள் தீவிரவாதம் என்கின்றனர். நம்மூர் ஊடகங்களும் அதனை அப்படியே வாந்தி எடுக்கின்றன.
ஹமாஸ் போன்ற இயக்கங்களைத்தானே அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். இவர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள்தானே என்ற கேள்வியும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. ஹமாஸ் இயக்கம் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லைதான். அநீதியாக எழுதி வைத்துக் கொண்டு, இதுதான் அமைதி ஒப்பந்தம் என்றால் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? அநீதியாக இருந்தாலும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட யாசிர் அரஃபாத்தை இவர்கள் எப்படி நடத்தினார்கள், எத்தனை முறை அவரை வீட்டுச்சிறை வைத்தனர். மருத்துவத்திற்காகக் கூட வெளிநாடு செல்ல பல தடைகளை ஏற்படுத்தினர் என்பதை ஏனோ இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, பாலத்தீனத்தை தனிநாடாக இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை. பாலத்தீன அதிபர் என்று பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவரை வளைகுடாவின் ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் புழங்கினாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்கள், ஆட்சியாளர்கள் பாலத்தீன் அதாரிட்டியின் தலைவர் என்றே புழங்குகின்றனர். இந்த அத்தாரிட்டி சிறிய அளவில் காவல்காரர்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம். இராணுவம் போன்று ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட இடத்தில் நிகழும் கலவரங்களை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த வேண்டும், யூதர் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை சிறிய அளவிலான காவல்காரர்களைக் கொண்டு நிறுத்த வேண்டும் என்பதுதான் இந்த பாலத்தீன அதாரிட்டியின் முழுமுதற்கடமை.

ஆனால், இதுவரை கலவரக்காரர்களை ஒடுக்க முடியவில்லை. எனவே பாலத்தீனர்களுக்கு தங்களுடைய நாட்டை ஆளும் தகுதி இல்லை என்கிறார் டோணி பிளேயர்.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருப்பது பாலத்தீனம் எனும் தனி நாடு அமைவது இல்லை; மாறாக அந்த நாட்டை ஆளும் தகுதியுடையவர்களாக பாலத்தீனியர்கள் இருப்பார்களா என்பதுதான். இந்த இருநாடுகளும் இருக்க வேண்டுமானால் முதலில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் . .... என்று அவர் கூறுகிறார்.
"இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்று கூறுபவர்கள் அந்த உத்தரவாதத்தை எவரிடம் கேட்கின்றனர்? உத்தரவாதம் கொடுக்கக் கூடிய சக்தி அவர்களிடம் இருக்கிறதா? செல்வந்தர் ஒருவரின் கடனுக்கு ஏழையிடம் உத்தரவாதம் கேட்பது போல் இருக்கின்றது இவரின் இந்த வாதம்.

ஒரு அரசு செயல்படுவதற்குரிய அடிப்படை வசதிகள் எதனையுமே வழங்காமல் அல்லது தாங்களாகவே அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முனையும்போதெல்லாம் அவற்றிக்கு தடைபோட்டுவிட்டு இவர்கள் நாட்டை ஆளும் தகுதி உள்ளவர்களா? என்று கேட்பது இவர்களின் மனவக்கிரத்தையே காட்டுகிறது.
அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்களை எதிர்த்து, தங்களுக்கு அதுபோன்ற வெளநாட்டு உதவிகளோ, பண வசதியோ இன்றி தங்கள் சொந்த நாட்டிலேயே தங்களுடைய அறிவையும் மிகவும் குறைவான செல்வத்தையும் பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்கியும், சில போது இயற்கை வழங்கிய கல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வருகின்ற இந்தப் போராளிகளைப் பார்த்துத்தான் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர்.

பாலத்தீன மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, அநீதிகளையே அமைதி ஒப்பந்தம் என்று ஏற்கச்சொல்லி, மறுத்தால் தீவிரவாதி என்றெல்லாம் ஏகடியம் பேசி வல்லான் வகுத்ததே சட்டம் என்று ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக் கொள்ளும் மேற்கத்திய, யூதர்களைப் போன்றே நம்நாட்டிலும் வல்லாதிக்க வெறிகொண்ட பார்ப்பன சித்தாந்த எதிரிகளுக்கு அல்லது அவர்களைவிட எளியோருக்கான அத்தனை வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு/ மறைத்துவிட்டு திறமை இல்லை; அதனால்தான் பின்தங்கியுள்ளனர் என்று கூறுவர்.

சுதந்திரத்திற்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளாகவும் சுதந்திரத்திற்குப் பின் அறுபது ஆண்டுகளாகவும் சுரண்டிக் கொண்டிருக்கும் இவர்கள், மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.

என்னே ஒற்றுமை! பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர்.

Wednesday, November 29, 2006

முல்லைப் பெரியாறு - ஒரு கேரளீய பார்வை

சமீப நாட்களாக ஒரு நாளைக்கு பல முறை "முல்லைப் பெரியாறு" என்ற பெயர் காதில் பட, அது என்னதான் பிரச்சனை? கேரளம் ஏன் எதிர்க்கிறது? என்பதை அறிய முற்பட்டு "மாத்யமம்" என்ற மலையாள நாளிதழில் நவம்பவர் 27ஆம் இடம்பெற்ற ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

144 ஆண்டுகளுக்கு முன்பு (1862ல்) இங்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று பிரிட்டீசாரின் பிரதிநிதியாகிய மதராஸ் ஆளுநர் திருவிதாங்கூர் அரசரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இருந்த அரசர் சுமார் 25 ஆண்டுகள் சம்மதம் தெரிவிக்காமலேயே தள்ளிப்போட்டார். அதற்கு மேலும் அவரால் சமாளிக்க முடியாமல் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசர் இவ்வாறு கூறினார். 'என்னுடைய இதயத்தில் ஓடுகின்ற இரத்தத்தில் நுழைத்துதான் இதனை நான் செய்கிறேன்'.

ஆனால், மக்களாட்சியில் சிறந்த ஆட்சியாளர்கள் என்று நாம் கருதுபவர்கள் ஆட்சி செய்த போது, 1970 மே 29ஆம் நாள் நம்முடைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் முன் யோசனை இல்லாத நம் செயல்பாட்டை உணர்த்துகிறது. உலகம் முழுவதும் அணைகளைக் குறித்த அறிவும் அனுபவங்களும் நம் முன்பாக இருந்தும் நாம் இதனை செய்தோம். 1956ஆம் ஆண்டு மாநில புணர்நிர்மான சபை ஏற்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தங்கள் புதுப்பிப்பதற்கும் நீக்குவதற்கும் வாய்ப்பு இருந்தபோது நாம் அதனை செய்யவில்லை. ஒரு அணை 999 வருடங்கள் நீடித்திருக்காது என்பதைக்கூட அறியாதவர்களாக நம்முடைய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்?

பாதுகாப்புதான் இன்றைய முக்கிய பிரச்சனை. 136 அடிக்குமேல் நீர் தேக்கினால் பிரச்சனை என்ற ரீதியில் நடக்கின்ற பிரச்சாரம் தவறானதாகும். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அணையில் நீர் தேக்குவது உலகில் நான்கு அணைகளில் மட்டுமே. இதில் மற்ற மூன்று அணைகளிலும் டீகமிஷன் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதில் நான்காவதாக உள்ளதுதான் முல்லைப் பெரியாறு.

ரிக்டர் அளவுகோலில் 4-5 அளவு பூகம்பம் ஏற்பட சாத்தியமுள்ள இடுக்கியில்தான் இது உள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் அணை உடையும். இடுக்கியில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முல்லைப் பெரியாறின் நீர் முழுவதும் 3 - 3.30 மணி நேரத்தில் வெளியாகி, இதன் மூலம் இடுக்கியின் மற்ற மூன்று அணைகளில் ஒன்றை அது தகர்க்கும். இது லோவர் பெரியாறு, பூதத்தான் அணை போன்றவற்றையும் தகர்த்து நான்கு மாவட்டங்களில் பிரளயத்தை உண்டாக்கும். முல்லைப் பெரியாறில் 130 அடி நீர் இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் உண்மை.

இப்பிரச்சனையில் அனைவரும் ஏற்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பரிசோதனை செய்வதுடன், இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பிளானும் தீட்ட வேண்டும். இதற்காக உலக அணை கமிஷன், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் உதவியை நாடலாம். எந்த வெளிநாட்டு நிறுவனம் பரிசோதனை செய்தாலும் முல்லைப் பெரியாறில் 75 முதல் 80 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என்றே கூறுவர்.

இதற்கு அவசியமில்லை; உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. எனவே கேரள அரசு வேறு ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அணை உடைந்தால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தமிழ்நாடு பொறுப்பேற்பேற்று அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எழுதிக் கொடுக்க வேண்டும்.

மனித உயிரின் விலையை நிர்ணயிக்க இயலாது என்றாலும் ஒரு காப்பீட்டு நிறுவனம் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையையாவது தமிழ்நாடு அளிக்க வேண்டும். மரணம் அடையும் ஒவ்வொரு உயிருக்கும் 5 கோடியும், சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு அவற்றின் மதிப்பிற்கேற்பவும் நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

---
இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் கேரளாவின் அச்சமும், எதிர்ப்பும் சரி என்றே படுகிறது. பிரச்சனை வந்தபின் செயல்படுவதைவிட வருமுன் செயல்படுவதே நல்லது.

Tuesday, November 14, 2006

அல்ஜஸீரா ஆங்கிலம்

தொடங்கப்பட்ட நாள் முதல் அரபுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டுவரும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களால் தவிர்க்க முடியாத ஊடகமாக அன்று முதல் திகழ்ந்து வருகிறது.

1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹா - கத்தரில் தொடங்கப்பட்ட இத்தொலைக் காட்சி, அரசியல் குறுக்கீடுகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு போர்களான ஆப்கன் மீதான தாக்குதலையும், இராக் மீதான தாக்குதலையும் உலகம் பார்த்தது அல்ஜஸீரா மூலமே. அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டுப் படைகளின் களவானித் தனத்தையும், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகளையும் அல்ஜஸீரா வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் சினமுற்ற அமெரிக்கா அல்ஜஸீரா நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரியதாக தகவல்கள் வெளியானது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அல்ஜஸீரா, ஆங்கில ஒளிபரப்புச் சேவையை நாளை (15-11-2006) முதல் தொடங்குகிறது. தோஹா, கோலாலம்பூர், லண்டன் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஒளிபரப்பு மையங்களை இதற்காக ஏற்படுத்தியுள்ளது.

பி.பி.சி. மற்றும் சி.என்.என். போன்ற மேற்கத்திய ஊடகங்களின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத அல்ஜஸீரா, ஆங்கிலத்தில் கால்பதிப்பது மேற்கத்திய ஊடகங்களுக்கம் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பி.பி்.சி., சி.என்.என். போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த சிலரும் அல்ஜஸீராவில் இணைந்துள்ளனர்.

அல்ஜஸீரா என்றுமே அரசுகளின் ஊடகமாக இருந்ததில்லை; அது மக்களின் ஊடகமாகவே இருந்துள்ளது என்பதற்கு அது சந்தித்து வரும் தாக்குதல்களே ஆதாரமாகும்.

செய்திகளை மேற்கிலிருந்து பார்த்து வந்த உலகம், இனி மத்திய கிழக்கிலிருந்தும் பார்க்கும் என்பது திண்ணம்.

Saturday, April 08, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள் - Follow up

மார்ச் 15 அன்று 'கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்' என்று தலைப்பில் பதிந்திருந்தேன். இந்த மாதம் விடியல் வெள்ளி என்ற மாத இதழில் வெளியான கட்டுரை அதன் தொடர்பானது என்பதால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

----
கோவையில் ஒரு கொடுமை!

அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இன்று 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிணையில் விட மறுத்து இவ்வழக்கை ஜவ்வு மிட்டாயாய் இழுத்துச் செல்கின்றனர். ஆரம்பத்தில் மெகா சீரியல்களுடன் போட்டியிட்ட இவ்வழக்கு இன்று தினத்தந்தியில் வரும் சிந்துபாத் தொடருடன் போட்டியிடத் துணிந்துள்ளது. 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது நீதிதேவதை.

கொடுமை என்னவென்றால் இவ்வழக்கில் கைதாகியுள்ள சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் - இவ்விருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை எவ்விடத்திலும் இவர்கள் பெயர் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வளவு 'இல்லைகள்' இருந்தும் 8 வருடமாக அநியாயமாக சிறையில் வைத்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்ல. இவர்கள் உயிருடன் வீட்டிற்குச் செல்வார்களா என்ற பீதி கேள்விக்குறியாய் கண் முன்னே வளைந்து நிற்கிறது.

ஆம்! 08.03.2006 அன்று பத்திரிகையில் 'குண்டுவெடிப்பு கைதிக்கு எய்ட்ஸ்' எனச் செய்தி வந்தது. சிறையில் தன் மகன்களை, கணவன்மார்களை 'நேர்காணல்' காண்பதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பதறி அடித்து அழுகையுடன் வந்தனர். அன்று நேர்காணல் அறையில் வெறும் அழுகையும் அச்சமும் 'எப்படி?' என்ற கேள்வியும் மட்டுமே ஒலித்தன.

16 வயதினிலே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அப்பாஸ் என்ற அப்பாவி சிறுவனுக்கு இன்று வயது 24. இச்சிறுவனுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வருவதற்கு சிறையிலோ அல்லது வெளியிலோ செக்ஸ் ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை.

கோவை அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் இக்கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பாஸிற்கு இருமுறை கோவை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சையும் (அப்பொழுது 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது), இரண்டாவதாக கக்கத்தில் கொப்புளம் அகற்றும் சிகிச்சையும் நடந்துள்ளன. விசாரித்ததில் அரசு மருத்துவமனையிலேயே இரத்தம் ஏற்றிய போது வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் STD (Sexual Transmission Desease) பிரிவின் தலைமைப் பேராசிரியர் மகாதேவனை விசாரித்தபோது, 'அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி உள்ளது. இரத்தம் தானமாக பெறும்போது பரிசோதனை செய்துதான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இரத்தம் கொடுக்கும் நபருக்கு HIV கிருமி இருந்தால் அதன் கிருமிகள் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகுதான் இரத்தத்தில் HIV கிருமி இருப்பது தெரியவரும். அதற்கு முன் இரத்த தானம் செய்பவர்களின் இரத்தத்தில் இருப்பது தெரியாது. அதனால் இவ்வாறு விபத்து நேருவதுண்டு. எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது' என்று கூறினார். 'இதனைத் தவிர்க்க வழியே இல்லையா?' என்று கேட்டபொழுது, 'ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒழுக்கம் நிறைந்த NSS சிறுவர்கள், இளைஞர்களிடம் இரத்தானம் பெறுவதன் மூலமும் ஏற்கனவே பலமுறை இரத்ததானம் தந்தவர்கள் மூலமும் நாங்கள் தவிர்த்து வருகிறோம்' என்றார்.

இதே அரசு மருத்துவமனையில் ஒரு தம்பதியர் தன் குழந்தைக்கு சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு HIV பாஸிட்டிவ். தாய்க்கும் தந்தைக்கும் HIV கிருமி கிடையாது. வெளி உலகுக்குத் தெரியாமல் இன்னும் இரத்தத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு HIV தொற்றியுள்ளதோ என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கையை யார் திருப்பித் தருவார்கள்? யார் பொறுப்பு? இன்று சிறையில் இருப்பவர்களின் வீட்டுப் பெண்கள், 8 வருடம் கழித்து வரும் தனது மகன், கணவன் முழுதாய் ஆரோக்கியமாய், உயிருடன் திரும்ப கிடைப்பார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.


கோவை மத்திய சிறையிலிருந்து அபூஷாய்மா
சுட்டி: தி இந்து

நன்றி: விடியல்

Wednesday, April 05, 2006

தேர்தல் திருவிழா: இயக்குநர் பாக்யராஜ்

எம்.ஜி.ஆரால் தன்னுடைய கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவரும், பிரபல (முருங்கைகாய் புகழ்) இயக்குநருமான பாக்யராஜ் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் தனி கட்சி தொடங்கி, பின்பு அதனைக் கலைத்துவிட்டு, மிக நீண்ட காலம் திரைத்துரை மற்றும் அரசியலில் பங்குபெறாமல் இருந்து வந்த பாக்யராஜ் சமீபகாலமாக மீண்டும் தன்னுடைய பயணத்தை இரு துறைகளிலும் துவங்கி வருகிறார்.

ஆனாலும் வரிசையாக திரைத்துறையினர் அ.தி.மு.கவில் இணைவதும், தி.மு.க.விலிருந்து விலகுவதுமாக (அல்லது ஒதுங்குவதுமாக) இருந்து வரும் நிலையில், தீவிர அ.தி.மு.க. விசுவாசியாக இருந்த அவர் தி.மு.க.வில் இணைந்திருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.

Friday, March 24, 2006

டோண்டு - இஸ்ரேல் - சமுத்திரா

கால்காரி சிவா என்பவர் என் அரேபிய அனுபவங்கள் என்ற தலைப்பில் தனக்கு அரேபிய நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதி வருகிறார். அதற்கு பின்னூட்டமளித்த டோண்டு அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.
அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.

அன்புடன்,டோண்டு ராகவன்
---

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவங்கள் கிடைக்கக்கூடும். அந்த வகையில் கால்காரி சிவாவுக்கு அவர் கூறுவது போன்றே நடந்திருந்தால் வருத்தப்படக்கூடியதே.

நான் துபையில் பணியாற்றியபோது எனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது. இராம.கி. ஐயா அவர்களும் தனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது என்று கூறுகிறார்.

அரேபிய நாடுகள் எதிலும் பணிபுரிந்திடாத டோண்டு அவர்கள், அரேபியர்களை எதிர்ப்பதற்குச் சொன்ன காரணம் எனக்கு வியப்பை அளித்தது. எனவே நான் இப்படி கேட்டேன்...

Dondu Said...
//ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம்.//

இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

வழக்கம் போலவே இந்த கேள்விக்கு சமுத்திரா தன்னுடைய தேசபக்தி பதிலை இப்படி கூறுகிறார்...

எல்லாம் ஒரு நன்றி உனர்வு தான் அய்யா.

வேறு எந்த நாடு நமக்கு அவர்களின் வார்ரிசர்வுகளில் இருந்து அவசர-அவசரமாக அம்யூனிஷன் சப்பளை செய்தது கார்கில் போரின் போது?

டோண்டு அவர்கள் ஐ.டி.பி.எல்லில் வேலைக்குச் சேர்ந்தது 1981ஆம் ஆண்டு.

அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றது 1993 ஆண்டு.

கார்கில் போர் நடைபெற்றது தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற 1999ஆம் ஆண்டு.

தகவல்களை கூகிளிலிருந்து மட்டுமே எடுத்துப்போட்டால் இப்படித்தான் இருக்கும். பாவம், இவர் என்ன செய்வார்? 21 வயது பாலகன் அல்லவா? ஆனாலும் டோண்டு அய்யாவுக்கான என் கேள்வி தொடர்கிறது.

Thursday, March 23, 2006

தேர்தல் திருவிழா: தி.மு.க. கூட்டணி தொகுதிகள்

தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கியுள்ள தொகுதிகள் விபரம் முழுமையாக இங்கு கிடைக்கிறது.

பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது முதலே கலைஞர் கூட்டணிச் சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி தனது சாதுர்யத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றே கூறவேண்டும்.

மாறாக எதிர்முகாமில் 10முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.

Wednesday, March 15, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்

1997ஆம் ஆண்டு கோவையில் சமூக விரோதிகள் சிலர் செய்த மாபாதக செயலான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 158 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந்த செயலைச் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கொலைக்கு கொலை என்ற இஸ்லாமிய அடிப்படையிலேயே மரண தண்டனை நிறைவேற்றினாலும் பொருத்தமானதே.

கைது செய்யப்பட்ட 158 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்தார். சிறைவாசிகளின் குடும்பத்தினர் 59 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது சம்பந்தமாக இதுவரை 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் சர்தார் என்ற 24 வயது இளைஞனுக்கு (கைது செய்யப்பட்ட போது இவருக்கு வயது 17) ஒரு சாட்சியும் அளிக்காத நிலையில் இந்த இளைஞனுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அந்த இளைஞனின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தாலும் தண்டனைக் காலமாக 3 அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி சிறையில் இருக்கிறார்கள். கொலைக் குற்றம் மற்றும் பொடா வழக்குகளில் தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயந்திர் மற்றும் வை.கோ. போன்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தமிழக அரசு தெரிவித்தும் ஜாமீன் வழங்கப் பட்டது. இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றவர்கள்; வழக்கின் போக்கையே மாற்றும் செல்வாக்கு அவர்களுக்கு உள்ளது என்றெல்லாம் வாதிடப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கோவை சிறைவாசிகளைப் பொறுத்தவரை இப்படி எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. பின் ஏன் பிணையில் விடுவிக்கப்படவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் என்.கே. பிரமசந்திரன் மே4, 2005 அன்று இப்படி கேட்கிறார்: நமது நீதி பரிபாலன முறை குறித்து முழு நாட்டிடமும் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். சாட்சியங்கள், விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் இத்யாதி முடிவடைந்து, அப்துந் நாஸர் மதானி அப்பாவி என்று தெரியவந்தால், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்ததற்கு யார் பொறுப்பேற்பார்? இது மிக முக்கியமான கேள்வியாகும். இதற்கு சரியான பதிலை நாம் காண வேண்டும்.

இவ்வழக்கின் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் திரு பி. பால்பாண்டியன், வழக்கின் முக்கிய புலணாய்வு அதிகாரியான ராஜசேகரிடம் கேட்ட கேள்வியும், அவரின் பதிலும்....

கேள்வி: இவ்வழக்கில் எதிரிகள் 74 அப்துல் சலாம், 75 அப்துல் சுக்கூர், 76 காதர், 77 ஜமேஷா, 79 ஹசன், 82 பஷீர், 83 அப்துல் சத்தார், 86 அபுதாகிர், 87 ஜப்பார், 90 கலந்தர் பாட்சா, 93 மொகமது அலி, 95 பிலால், 97 சிராஜுதீன், 98 லியாகத் அலி, 100 நஷீர் மற்றும் 159 குலாம் ஆகிய நபர்களுக்கு எதிராக ஏதாவது சாட்சிகள், இந்த எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ வாக்குமூலமோ அல்லது விபரமோ எதுவும் அளித்ததாக உங்கள் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதா?

பதில்: மேற்சொன்ன எதிரிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாட்சிகளின் வாக்கு மூலங்களில் மேற்சொன்ன எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ அல்லது விவரம் வாக்குமூலங்களிலிருந்து எதுவும் வெளிப்படவில்லை.

பின் ஏன் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை? இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் மட்டுமா?

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.tmmkonline.org/tml/archieves/others/98_712.htm
http://www.tmmkonline.org/tml/others/109971.htm

இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆர்ப்பாட்டம் குறித்து அறிய: http://www.tmmkonline.org/tml/photos/28-2-06/28-2-06.htm

Saturday, March 11, 2006

தேர்தல் திருவிழா - ம.தி.மு.க.

சென்ற வாரத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த எதிர்பாரா திருப்பத்தைத் தொடர்ந்து, வை.கோ.வும் ம.தி.மு.க.வும் விவாதப் பொருளானார்கள். வலைப்பதிவிலும் இது குறித்து அதிகம் பேசப்பட்டது. வை.கோ.வின் இந்த செயலை நியாயப்படுத்திய பதிவர்களில் பெரும்பாலோர் சொன்ன கருத்து இதுதான்:

தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே
இல்லை. ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென
உறுப்பினர் கிடையாது. கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில்
போட்டியிட்டு வெல்ல வேண்டும்.


தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே இல்லை.

பொதுவாகவே எந்த ஒரு கட்சியானாலும் தங்கள் கட்சி வளரவேண்டும் என்பதையே விரும்புவார்கள். காங்கிரஸ் கட்சி முதல் கடைசியாகத் தோற்றுவிக்கப்பட்ட பு.தா. இளங்கோவனின் பாட்டாளி முன்னேற்றக் கழகம் வரை அனைவருக்குமே இந்த விருப்பம் உண்டு. தங்கள் கட்சி வளர வேண்டும் என்ற நோக்கத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மற்ற கட்சிகள் வளரக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நோக்கம் எல்லா கட்சிகளுக்குமே உண்டு. உதாரணமாக 4ஆம் நிலையில் இருப்பதாக கருதப்படும் ம.தி.மு.க. ஐந்தாம் நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்றால் விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்பது ம.தி.மு.க.வின் நோக்கம். வை.கோ. எப்படி விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்று விரும்புவாரோ அப்படியே பா.ம.க.வும் விரும்பும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்து கட்சிகளின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும். இதில் கருணாநிதி மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தி.மு.க.வை ம.தி.முக.வின் வளர்ச்சிக்கு தடையாக சொல்லப் படுவதிலிருந்து தி.மு.க.வின் அழிவுதான் ம.தி.மு.க.வின் வளர்ச்சி என்று சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென உறுப்பினர் கிடையாது.

ம.தி.மு.க.வின் தலைமைதான் இதற்கு பொறுப்பாக வேண்டும். கட்சி தொடங்கப்பட்ட பின் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல் எதிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. 1996ல் நிகழ்ந்த மாபெரும் எதிர்ப்பு அரசியலில் பதவியிலிருந்த கட்சியே பரிதாப நிலையை எட்டியதால், ம.தி.மு.க.வும் பிரதிநிதித்துவம் பெறமுடியவில்லை. 2001ல் ஜெயா அமைத்த மகா கூட்டணியினாலும் இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு எந்த வகையில் கருணாநிதி பொறுப்பாவார்?

கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.

அதிக தொகுதியில் போட்டியிடுவதால் கட்சிக்கு பரவலான அறிமுகம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதை மறுக்கவில்லை. 1996ஆம் ஆண்டு வை.கோ. இதைதான் செய்தார். தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் ம.தி.மு.க.வின் கொடி மட்டுமே இருந்த நிலையையும் 1997ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகமான தொகுதியில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த வாதம் உண்மையானால் 1996ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க. 2001ல் தேய்ந்து போனதின் காரணம் என்ன? ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் ஓரளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் வளரவில்லை. 2001ல் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. எந்த அளவு வளர்ந்திருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காணவேண்டும். இவற்றுக்கு பதில் கண்டால் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது தற்போது கூட்டணி கணக்கின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதை விளங்கலாம்.

ம.தி.முக. - பா.ம.க. ஒப்பீடு

ம.தி.மு.க.வின் வளர்ச்சியை பா.ம.க.வுடன் ஒப்பிட முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி (அதன் செயல்முறைகளை மாற்றிக் கொண்டாலன்றி) இத்துடன் நிறைவு பெற்றுவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆனால் ம.தி.முக.வின் தளம் அத்தகையதன்று. அதற்கென சாதி சார்பு எதுவும் ஊடகங்களால் மட்டுமின்றி எதிர்கட்சிகளாலும் கற்பிக்க முடியவில்லை. இத்தகைய பரந்த தளத்தில் ஏற்கனவே இருக்கும் பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு வளர்த்தெடுப்பது எளிதான பணியன்று; விரைவில் சாத்தியப்படக் கூடிய ஒன்றும் அன்று.

Monday, March 06, 2006

தேர்தல் திருவிழா - வை.கோ.

தன்மானம், கொள்கையை தற்சமயம் ஜெயலலிதாவிடம் குத்தகைக்கு கொடுத்துள்ள வை.கோ. அவர்கள் குறித்து அ.தி.மு.க.வின் நாளேட்டில் வெளியான செய்தி.....



















நன்றி: தினகரன்

Sunday, March 05, 2006

புரட்சிப் புயல் வை.கோ. அவர்களுக்கு....

தமிழக அரசியல் கட்சிகள் சாதி சார்ந்தும், சுய முன்னேற்றம் சார்ந்தும் இயங்கி வந்த வேளையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, ''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' என்ற புரட்சிகரமான முழக்கங்களுடன் தனி இயக்கம் கண்டீர்கள். அதுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்திருந்தாலும், நீங்கள் தனி இயக்கம் கண்ட காலம் தமிழகம் முழுவதும் மாற்று தலைமையை எதிர்நோக்கியிருந்ததால், பரவலான வரவேற்பை பெற்றீர்கள்.

தமிழ், தமிழர் நலன் என்ற உங்களின் செயல்களால் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் நன்மதிப்பையும் பெற்றீர்கள். அதன் காரணமாகவே - இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர் மீதும் போடப்படாத ''பொடா'' சட்டம் உங்கள் மீது போடப்பட்ட போது, ''பாசிச ஜெயலலிதா அரசை தூக்கி எறிவோம்'' என்று சபதமெடுத்தீர்கள். தங்களின் இந்த சபதம் நிறைவேற வகைசெய்வோம் என்று நாங்களும் உறுதியெடுத்தோம்.

ஆனால் இன்று அதே பாசிச ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதமெடுத்த போது, எங்களை நாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டோம். இது கொள்கைக்காக அமைந்த கூட்டணியல்ல, தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்று சொன்னபோது கொள்கையில் உறுதி தூள் தூளானது.

தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்தான். ஆனால் அவர்களின் வாக்கு மற்றும் அவர்களின் உழைப்பு மட்டுமே தங்களின் இயக்கத்தை வளர்க்கும் என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்த செயலின் மூலம் கலைஞரின் அரசியல் சாணக்யம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். மாறாக அவரின் (வாரிசு) நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்ததாலேயே நீங்கள் இன்று தன்மானம் போனாலும் பரவாயில்லை என்று பாசிச ஜெயலலிதாவுடன் இணைந்துள்ளீர்கள். உங்களின் இந்த செயல் மூலம் பலனை அனுபவிக்கப்போவது கலைஞர்தான்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது 62 நாட்களும் தமிழகத்தின் மூளைமுடுக்கெல்லாம் சென்று கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டீர்கள். இன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 13பேர் அமைச்சராக ஆனதற்கு உங்களின் பிரச்சாரம் மிக முக்கிய காரணம். ஆனால் அந்த பிரச்சாரத்தை ஒலிபரப்பாத சன் தொலைக்காட்சி, இப்போது கண்டிப்பாக ஒலி பரப்பும். முதல்முறையாக எதிர்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்த தலைவர் என்ற பட்டமும் உங்களுக்கு கிட்டும்.

இறுதியாக... என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நானும் சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களின் அரசியல் ஆசான்கள் பதவிக்கு வந்தபின் உணர்த்தியதை தாங்கள் பதவிக்கு வருமுன்பே உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.

குறிப்பு:- இந்த கடிதம் உங்கள் முடிவை மாற்றாது என்பது தெரியும். "தாயின் பேச்சை கேட்காதவர், தமையன் பேச்சையா கேட்பார்?" என்று கலைஞர் கூட எள்ளி நகையாடி இருக்கிறார். இருந்தாலும் என் மன அமைதிக்காக இதனை எழுதியுள்ளேன்.

Wednesday, March 01, 2006

தேர்தல் திருவிழா - தேர்தல் நாள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி டாண்டன் பத்திரிக்கையாளர்களை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

தமிழ்நாடு மே 8

கேரளா ஏப்ரல் 22, 29, மே 3

மேற்கு வங்கம் ஏப்ரல் 17, 22, 27, மே 3, 8

பாண்டிச்சேரி மே 3, 8

அஸ்ஸாம் மே 03, 10

அடையாள அட்டை கேரளாவில் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது 55 சதவீதம்தான் என்று கூறினார்.

சிறிய மாநிலங்களில் கூட பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் நடத்தப்படுவதன் இரகசியம் நாம் அறிந்ததுதானே....

Tuesday, February 28, 2006

நன்றி - ரங்கசாமி

பாண்டிச்சேரி சட்டமன்றத்தின் இறுதி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு 13 சதவீத இடஒதுக்கீடு அளிக்க இந்த தீர்மானத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் நேரத்தில் இத்தகைய தீர்மானம் தீட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக முதல்வருக்கு வராத அக்கறை புதுவை முதல்வருக்கு வந்ததற்காக அவரை பாராட்டுகிறேன்.

தமிழக முஸ்லிம்கள் சார்பாக அவருக்கு மீண்டும் என் நன்றிகள்.

Monday, February 27, 2006

தேர்தல் திருவிழா - திருமா

தேர்தல் திருவிழாக் காட்சிகள் தொடங்கிவிட்டன. சமீபகாலமாக உடன்பிறவாச் சகோதரர்களாக வலம் வந்த மருத்துவர் இராமதாசு மற்றும் திருமாவளவன் இப்போது எதிர் எதிர் அணியில். பா.ம.க. போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இராமதாசையும் திருமாவளவனையும் மோதவிடுவதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டுமே காய்நகர்த்தி அதிக தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்படுமாறு தொகுதிகளை ஒதுக்குவார்கள். குறைந்தது 5 தொகுதிகளில் வி.சி.க்கும் பா.ம.க.வுக்கும் நேரடிப் போட்டி இருக்கும் என்பது என் கணிப்பு.

விஜய காந்த் அல்லது பா.ஜ.க. இருவரில் ஒருவர் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்புண்டு. ஏதேனும் ஒரு முஸ்லிம் லீகும் இடம் பெறும். (சிறுபான்மையினர் வாக்கு வேண்டுமே?) கார்த்திக்கும் இருப்பார் என்று நம்புவோம். இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, February 07, 2006

பத்தாயிரமும் சமூக நீதியும்

நேற்று முதல் முறையாக மும்பை பங்குச் சந்தையின் குறியெட்டென் 10,000 புள்ளிகளைக் கடந்து, இன்று நிலை கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியின் அளவாக இந்த குறியெட்டெண்ணும் கருதப்படுவதால் நாள்தோறும் செய்திகளில் முக்கியமாக இதனை நான் நோக்குவதுண்டு. ஏறுமுகமாக இருந்தால் மகிழ்வதுமுண்டு. ஆனால் சில நாள்களுக்கு முன் ''சமநிலைச் சமுதாயம்'' மாத இதழின் ஜனவரி 2006 பதிப்பில் ''பில்கேட்சும் நமது வல்லரசு கனவும்'' என்ற தலைப்பில் மு. அப்துர் ரஸாக் என்பவர் எழுதிய கட்டுரையில் இந்த புள்ளிவிபரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துடன் முழுதாக ஒன்றாவிட்டாலும் அவரின் பின்வரும் வரிகள் சாட்டையடிகளாக இருந்தன. இனி அவரின் கட்டுரையிலிருந்து....

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் மீதான வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, நாஸ்டாக் பங்குச்சந்தையில் மைக்ரோ சாப்டின் பங்குகள் வீழ்ச்சியடைந்தவுடன், அந்த வீழ்ச்சியின் வரைபடத்தைப் புகைப்பட நகல் எடுத்ததைப்போல் அதே நாளில் மும்பை பங்குச்சந்தை வீழ்ந்தது.

இந்தச் சரிவை உலகம் முழுவதும் பரவச் செய்தது மின் வணிகம். இதனால் ஏற்பட்ட இழப்பை இணையம், மின் வணிகம், செல்போன் போன்ற தகவல் புரட்சி சேவைப் பொருளாதாரம் சார்ந்த எந்த வசதிகளையும் அனுபவித்திராத இவற்றைப் பார்த்திராத உழைக்கும் மக்களின் உழைப்பின் மூலம்தான் ஈடு செய்தார்கள். இந்தியாவின் 90 விழுக்காடு மக்களை மறந்துவிட்டு, மேல்தட்டைச் சார்ந்த 10 விழுக்காட்டினர் மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவு இது.

இணையத்தின் மூலம் நடைபெறும் மின்வணிகத்தில் ஒரு நாளைக்கு 1.5 டிரில்லியன் புரள்கிறது. இந்த தொகையில் 85 விழுக்காடு நாணயச் சூதாட்டத்தின் விளைவாகப் புரளும் தொகையாகும். இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் நூற்றுக்கு ஒன்றரை ரூபாய் மட்டுமே உண்மையாகப் பொருளை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வர்த்தகம். மீதி அனைத்தும் நிதி மூலதனத்தின் சூதாட்டம்தான். இணையத்தின் மூலம் நடைபெறும் இந்த மின் வணிகத்தின் மீது நம் நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. கணினி, இணைய தகவல் தொழில் நுட்பப் புரட்சி எதை துரிதப்படுத்துகிறது என்பதற்கு இது உதாரணம்.

இது ஒரு வகையான மின்னணு யுத்தம். ஏழைநாடுகளுக்கு எதிரான மின்னணு யுத்தம். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் என அமெரிக்க மூலதனம் விடுக்கும் அறைகூவலைத்தான் நாம் எதிரொலிக்கிறோம். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகள் பன்னாட்டு நிதி உதவி நிறுவனங்களின் தயவில்லாமல் சுதந்திரமான திட்ட தயாரிப்புகள் சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. கடன் தருபவரின் சட்டமும், நீதியும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.

நமது மண்ணின் விதைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. நமது நதிகள் எங்ஙனம் ஓடவேண்டும் என்பதை இனி உலக வங்கிகள் தீர்மானிக்கும். நமது வாழ்க்கை இனி உலக வர்த்தக மையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதாக இருக்கும். உலகத்தை தன்வயப்படுத்த முனையும் முதலாளித்துவ சக்திகள் நமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் இங்ஙனம் பறிக்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட பசுமைப்புரட்சியால் உற்பத்தியைப் பெருக்கினோம். ஆனால். நமது மண்வளத்தை இழந்தோம். நமது மரபு விதைகள் கடத்திச் செல்லப்பட்டு முதலாளித்துவ ஜீன் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ''காட்'' ஒப்பந்தமும், காப்புரிமையும், ட்ரிட்சும், டிரிம்சும் நமது உரிமையை கவர்ந்து சென்றுள்ளன.

தொழில் நுட்பத்தையும், சமூக நீதியையும் எப்படி இணைக்கலாம்? இதுதான் இந்த நூற்றாண்டு எதிர்கொள்கிற சவால். தொழில் நுட்பத்தை எங்ஙனம் ஜனநாயகப்படுத்துவது? இன்று மூன்றாம் நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை மட்டுமல்ல. அவர்களின் உற்பத்தி மையமாகவும் மாறுகின்றன. அமெரிக்காவில் வளர்ப்பு நாய்களுக்கு செலவாவதைவிட, குறைந்த கூலி இங்குள்ள தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் மாசாவதிலிருந்து அவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

செப்டம்பர் 11 நிகழ்வில் இறந்தவர்கள் 3000 பேர்தான். ஆனால் 1984ஆம் தேதி போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்த கசிவு காரணமாக 13,000 பேர் இறந்தனர். இதற்குக் காரணமாக இருந்த ஆண்டர்சனைக்கூட அமெரிக்கா தண்டிக்கவில்லை.

நன்றி: சமநிலைச் சமுதாயம்

கட்டுரையின் ஒரு பகுதியை மட்டுமே தந்துள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் மனம் உறுத்துகிறது.

Saturday, February 04, 2006

கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும்

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை ஒன்றில் முஹம்மது நபி அவர்களை கேலிச் சித்திரம் வரைந்திருந்தனர். அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கோரினர். அந்த பத்திரிக்கை வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

அக்டோபர் 20ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து புகார் செய்தனர். இதனாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாள் நார்வே பத்திரிக்கையொன்று அந்த கேலிச் சித்திரங்களை மறுபதிப்பு செய்தது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட சவூதி அரசு ஜனவரி 26ஆம் நாள் டென்மார்க் நாட்டுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

இந்நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து டென்மார்க்கின் பொருள்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்கின்றனர். இதனை அறிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகக் கழக தலைவர் பீட்டர் மண்டெல்சன் 'நார்வே-டென்மார்க் பொருட்களை புறக்கணிப்பது, ஐரோப்பிய யூனியனின் பொருட்களை புறக்கணிப்பதற்குச் சமமானது; சவூதி அரசாங்கம் இப்புறக்கணிப்பை கைவிடவில்லையென்றால், உலக வர்த்தக சபையில் முறையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனவரி 30ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய சிலர் பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு சென்று, மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினர்.

ஜனவரி 31ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை மன்னிப்புக் கோரியது.

பிப்ரவரி 1ஆம் நாள் பிரான்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டுப் பத்திரிக்கைகள் சித்திரத்தை மறுபதிப்புச் செய்தன.

இதன் பிறகே பிப்ரவரி 3ஆம் நாள் இந்தோனேசியா, இராக், பாலஸ்தீன், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும், இந்தோனேசியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் தாக்கப்படுகிறது. (இதை நான் ஆதரிப்பதாகக் கருதவேண்டாம்).

நன்றி: பி.பி.சி. அரப் நியூஸ்

இதைவிட சாத்வீகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா எனத் தெரியவில்லை. தங்களுக்குப் பிடித்த கருத்தைச் சொல்ல தங்களுக்கு உரிமை உண்டு என வாதிடுவோர், தங்களுக்குப் பிடிக்காதவர்களின் பொருள்களின் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற கருத்தை ஏற்க மறுப்பது ஏனோ?

இது குறித்து வலைப்பூக்களில் பதியப்பட்ட பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலிருந்தும் பல காழ்ப்புணர்வுகள்.

நிலா கூறும்போது....

//கார்டூன்கள் வெளியிட்டது தவறு என்று வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு களேபரம் தேவையா என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும்? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நிரூபிக்க முயலலாமே?//

நிலா அவர்களே மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை வரிசையாகப் படித்துப் பார்க்கக் கோருகிறேன்.

இதுகுறித்து டோண்டு அவர்கள்....

//ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.//

என் மதத்திற்கு அப்பொழுது நேர்ந்த கொடுமை இப்பொழுது உன் மதத்திற்கு நேர்ந்துள்ளது என்று கூறுகிறார். அவருக்கு நம்முடைய கேள்வி.... அந்த ஓவியம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாக சித்தரித்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரையாவாது அவரால் அடையாளம் காட்ட முடியுமா?
மாறாக அல்லாஹ் குர்ஆனில், மற்றவர்கள் தெய்வமென வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள் என்று கூறியுள்ளான்.

//கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார்.// என்று கூறும் டோண்டு அவர்கள் இந்துக்கள் அந்தப் படத்திற்கு ஆடை அணிவிக்குமுன்பு ஆடை அணிவித்த கராத்தே ஹுசைனி அவர்கள் முஸ்லிம் என்பதை அறியாதவரா? ஏன் இந்த காழ்ப்புணர்வு?

பிற்காலங்களில் தோன்றிய தேசியமும், தேசியத்தின் அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டியவை என்று ஒத்துக் கொள்கிறோம். புஷ் தன்னுடைய நாய்க்குட்டிக்கு இந்தியா என்று பெயர் வைத்தால் கொதித்தெழுகிறோம். நாமே உருவாக்கிய நம்முடைய தேசியக் கொடி எரிக்கப்பட்டால் உணர்ச்சி வசப்படுகிறோம். அவனுடைய தனிப்பட்ட உரிமை என்று எவருமே, எந்நாட்டவருமே கருதுவதில்லை. ஆனால் தேசம் கடந்து, மொழி கடந்து உலக முஸ்லிம்களால் உயிரினும் மேலானவராகக் கருதப்படும் முஹம்மது நபியவர்களைக் கேவலம் செய்தால் பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் கூறினால் இது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு என்னவாக இருக்கும்?